- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமாங்கல்ய பலம் பெற குங்குமம்

மாங்கல்ய பலம் பெற குங்குமம்

- Advertisement -

நெற்றியில் குங்குமம் வைக்கும் பெண்கள் எப்போதும் தெய்வீக தன்மை பெறுவார்கள். குங்குமம் மகாலட்சுமியின் அம்சம். சிகப்பு நிற குங்குமம் மட்டும் சிறந்த பலன்களை கொடுக்கும். மற்ற நிறங்களில் குங்குமத்தை பயன்படுத்தாதீர்கள். மகத்துவம் நிறைந்த இந்த குங்குமத்தை திருமணம் ஆன பெண்கள் மாங்கல்ய பலம் நீடிக்க என்ன செய்ய வேண்டும்? குங்குமம் பற்றிய அறியாத தகவல்களை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

அறிவியல் படி படிகாரம், மஞ்சள், சுண்ணாம்பு, தண்ணீர் ஆகிய கலவையே பின்னர் குங்குமமாக உருமாறுகிறது. மஞ்சள் மற்றும் படிகாரம் கிருமி நாசினியாக இருப்பதால் நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். சுத்தமான குங்குமம் அலர்ஜியை ஏற்படுத்துவதில்லை. குங்குமத்தில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் பின் இரும்புச்சத்தாக மாறுகிறது. உடலில் இருக்கும் உஷ்ணத்தை மூளை நரம்புகளுக்கு கடத்தாமல் தடுக்கக்கூடிய பகுதி நெற்றி! இந்த நெற்றி பொட்டில் குங்குமம் வைப்பதால் உஷ்ணத்தை நரம்புகளுக்கு செல்லாமல் தடுத்து பாதுகாக்கிறது. இதனால் உஷ்ணத்தால் பாதிப்புகள் வராமல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

- Advertisement -

கோவிலில் குங்குமம் கொடுக்கும் பொழுது வலது கையில் தான் வாங்க வேண்டும். வாங்கிய குங்குமத்தை இடது கைக்கு மாற்றக் கூடாது. திருமணமான சுமங்கலி பெண்கள் மாங்கல்யம், நெற்றி வாகிடு மற்றும் நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொள்ள வேண்டும். மேலும் வலது கையில் வாங்கிய குங்குமத்தை வலது கை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு அப்படியே நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே குங்குமம் இட்டுக் கொள்ள புனிதமான முறையாகும். இப்படி வைத்துக் கொள்ளும் பொழுது தெய்வத்தின் அருள் பரிபூரணமாக பூர்த்தி அடையும் என்பது ஐதீகம். இதனால் பெண்களுக்கு மாங்கல்ய பலமும் அதிகரிக்கும்.

மாங்கல்ய பலம் அதிகரிக்க சுமங்கலி பெண்கள் வீட்டிற்கு வரும் மற்ற சுமங்கலி பெண்களுக்கு தவறாது குங்குமத்தை கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும். குங்குமம் கொடுப்பவர் முதலில் வைத்துக் கொண்டு தான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இப்படி இரு சுமங்கலி பெண்கள் குங்குமத்தை கொடுத்தும், வாங்கியும் பழகும் பொழுது இருவரின் மாங்கல்ய பலமும் கூடும் என்பது நம்பிக்கை. வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தண்ணீரும், மஞ்சளும் கொடுத்து அனுப்ப வேண்டும். வெறும் கையோடு யாரையும் வீட்டிலிருந்து அனுப்பக் கூடாது.

- Advertisement -

அரக்கு நிறத்தில் இருக்கும் குங்குமம், அரக்கு நிற திருமண புடவை ஆகிய இரண்டும் சிவசக்தியின் அம்சம், இதனால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குங்குமம் அணியும் நெற்றியில் தெய்வீக சக்தி இருப்பதால் எந்த விதமான வசியமும் இவர்களிடம் பலிப்பதில்லை. திருமணமாகாத கன்னி பெண்கள் கட்டை விரலில் குங்குமம் அணிந்து கொண்டால் தைரியம் அதிகரிக்கும். ஆண்கள் இரு புருவத்திற்கு மத்திமத்தில் இணையம்படி குங்குமத்தை வைப்பது முறையாகும். தலைமை பொறுப்பை ஏற்று நடத்துபவர்கள் ஆள்காட்டி விரலால் தினமும் குங்குமத்தை வைத்து வர நிர்வாக திறமை அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:

குங்குமத்தை அழகுக்காக அணியக் கூடாது. இதில் தெய்வீகத்தன்மை இடம் பிடித்துள்ளது. இது சரீர குளிர்ச்சி, சிவசக்தி ஈர்ப்பு, இறைத்தன்மை, சுய கட்டுப்பாடு ஆகியவற்றை கொடுக்கக் கூடியது. இளம்பிள்ளைகள் முதல் ஆண்கள், பெண்கள் எல்லோருமே குங்குமம் அணிவது பலவிதமான நன்மைகளை கொடுக்கக் கூடியது. குங்குமம் மருத்துவ, ஆன்மீக மற்றும் சுப மங்கள அடையாளமாக இருப்பதால் உடல், மனம், முகம் ஆகியவை பொலிவு பெறும்.

சற்று முன்