திருவாரூரில் பிறந்தால் முக்தி. தில்லையை தரிசித்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி என்று சொல்லுவார்கள். இன்று டிசம்பர் 4ஆம் தேதி. திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியுள்ளது. இன்று துவங்கி 14 நாட்களும் அங்கு திருவிழா கோலம் தான்.
திருவண்ணாமலையில் வானளவு உயர்ந்த நிற்கும் கோபுரமும், மலையும் அந்த ஈசனின் ஸ்வரூபம். பார்க்க கோடி கண்கள் தேவை. எல்லோருக்கும் ஈசனை பார்ப்பதற்கு பாக்கியம் கிடைத்து விடுமா. புண்ணியம் செய்தவர்கள், பாக்கியம் செய்தவர்களால் செய்தவர்களால் மட்டும் தான் அந்த திருவண்ணாமலையில் காலடி எடுத்து வைக்க முடியும். அந்த வகையில் கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை தரிசிப்பது கோடான கோடி புண்ணியத்தை தரும்.
அந்த தரிசனம் எல்லோருக்கும் கிடைத்து விடுமா. நிச்சயம் கிடைக்காது. இன்று துவங்கி திரு அண்ணாமலையானே நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை தினமும் தோறும், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சொல்லுங்கள். அந்த அண்ணாமலையாரின் பெயரை உச்சரித்த பாக்கியமாவது நமக்கு கிடைக்கும். அந்த அண்ணாமலையானின் அருளை பெற்று நாம் செய்த பாவங்கள் தீர்ந்து இறுதிகாலத்தில் நமக்கு அண்ணாமலையார் பாதத்தில் மோட்சம் கிடைக்கும். அந்த ஒரு வரி மந்திரம் என்ன அதனை தினமும் எப்படி உச்சரிப்பது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். பெரும்பாலானவர்களுடைய வீட்டில் அந்த அண்ணாமலையாரின் திருவுருவப்படம் இருக்கும். இருந்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. அதற்கு இரண்டு வில்வ இலைகளோ அல்லது வாசம் நிறைந்த பூக்களை போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ‘திரு அண்ணாமலையாருக்கு அரோகரா! திரு அண்ணாமலையாருக்கு அரோகரா ! திரு அண்ணாமலையாருக்கு அரோகரா ! என்ற மந்திரத்தை சொல்லுங்கள். இதை சொல்லுவதற்கு ஒரு நிமிடம் கூட எடுக்காது. ஓம் நமசிவாய மந்திரத்தையும் சொல்லி அண்ணாமலையாரை வழங்கிவிட்டு உங்களுடைய தினசரி வேலையை துவங்கிக் கொள்ளலாம்.
இன்று துவங்கி, கார்த்திகை தீபம் வரை தவறவிடாமல் இந்த மந்திரத்தை சொல்லி அண்ணாமலையாரை வழிபாடு செய்பவர்களுக்கு செய்த பாவங்கள் நீங்கும். புண்ணியம் கிடைக்கும் மோட்சம் கிட்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. எங்களால் அவ்வளவு காலையில் எழுந்து பூஜை அறையில் விளக்கு ஏற்ற முடியாது. வீடு சுத்தபத்தமாக இருக்காது வீட்டை கூட்ட முடியாது என்பவர்கள் மாலை பூஜையில் விளக்கு ஏற்றி இதே போல வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
எதுவுமே எங்களுக்கு முடியாது நாங்கள் காலையில் எழுந்து வீட்டு வேலையை முடித்துவிட்டு, வேலைக்கு செல்வதற்கே நேரமில்லை என்பவர்கள் நேரம் கிடைக்கும் போது நின்ற இடத்தில் இருந்து அண்ணாமலையனுக்கு அரோகரா ! ஓம் நமசிவாய போற்றி போற்றி என்று ஒரே ஒரு முறை சொன்னாலும் போதும். ஒரு நிமிடம் அந்த அண்ணாமலையானை உங்கள் மனக் கண்களுக்குள் பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: முயற்சிக்குரிய பலன் கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு
இந்த கார்த்திகை தீப பெருவிழா தினத்தில், ஒரு நாளைக்கு ஒருமுறை அந்த அண்ணாமலையானை நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு. ஓம் நமசிவாய மந்திரத்தை நாம் சொன்னால் புண்ணியம் கிடைக்கும். அது எல்லாருக்கும் தெரியும். அதைவிட அடுத்தவர்களுடைய வாயால் அந்த நாமத்தைச் சொல்லி நம்முடைய செவிகளால் கேட்டால், கோடான கோடி புண்ணியம் கிடைக்குமாம். அந்த வகையில் இந்த பதிவை படித்து, இன்றைக்கு சிவாய மந்திரத்தையும் அண்ணாமலையாரது, நாமத்தையும் உச்சரித்த அந்தப் புண்ணியம் எங்களை வந்து சேரும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.