ஒரு மாணவன் பரிட்சையில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றால் நன்றாக படிக்க வேண்டும். ஒருவருக்கு நல்ல வேலை வேண்டும் என்றால் அந்த வேலையை தேட வேண்டும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்றால் அந்த வேலையில் தன்னுடைய திறமையை காட்ட வேண்டும். திருமணம் நடக்க வேண்டும் என்றால் திருமணம் முயற்சிகளை செய்ய வேண்டும். குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும். இப்படி நம்முடைய வாழ்க்கையில் நமக்கு எது வேண்டுமோ அதற்குரிய முயற்சியை நாம் செய்தால்தான் நமக்கு அது கிடைக்கும். அப்படி முயற்சி செய்தும் நமக்கு கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் ஆஞ்சநேயருக்கு எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆஞ்சநேயர் வழிபாடு
நாம் நம்முடைய முயற்சியை தொடர்ந்து விடாப்பிடியாக செய்து கொண்டே வந்தோம் என்றால் நம்முடைய இலக்கை ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் அடைந்து விடுவோம். அப்படி இலக்கை அடைவதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ தடைகள் உண்டானால் அந்த தடைகளை விளக்கி அந்தப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் ஆஞ்சநேயர். இவருக்கு காரிய வெற்றியை தரக்கூடிய ஆற்றல் இருக்கிறது. விநாயகப் பெருமாளுக்கு அடுத்தபடியாக ஆஞ்சநேயருக்கு தான் காரிய வெற்றி தரக்கூடிய ஆற்றல் என்பது இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட ஆஞ்சநேயருக்கு நாம் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி பார்ப்போமா…
எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பாக அந்த செயலில் வெற்றி கிடைக்க வேண்டும் என்னும் பட்சத்தில் நாம் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு நல்ல நாளாக பார்த்து ஒரு நாளை தேர்வு செய்து கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு அது வளர்பிறையாக இருக்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் தங்களுடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று ஆஞ்சநேயருக்கு முன்பாக ஒரே ஒரு தீபத்தை மட்டும் ஏற்றினால் போதும். ஒரு வெற்றிலையை வைத்து வெற்றிலைக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கிற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கில் கடுகு எண்ணெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து ஒரு திரியாக போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த தீபத்தில் மொட்டு உடையாத இரண்டு கிராம்பை போட வேண்டும். பிறகு எந்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை ஆஞ்சநேயரிடம் கூறி வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் ஆஞ்சநேயருக்கு நாம் தீபம் ஏற்றினோம் என்றால் நாம் எந்த செயலுக்காக முயற்சி செய்கிறோமோ அந்த முயற்சிகள் வெற்றி அடையும். மேலும் கடுகு எண்ணெய் என்பது மகாலட்சுமிக்குரியதாக கருதப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் கிராம்பும் மகாலட்சுமிக்குரிய வாசனை பொருளாகவே கருதப்படுகிறது. அதனால் நாம் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது நம் வீட்டிற்கு ஐஸ்வரியம் உண்டாகும் என்பது கூடுதல் பலன்.
இதையும் படிக்கலாமே:பிரச்சினைகள் தீர வழிகாட்டும் விநாயகர் வழிபாடு
ஆஞ்சநேயரை முழு மனதோடு நம்பி நம்முடைய காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு முயற்சிகளை மேற்கொண்டு அதோடு இந்த தீபத்தையும் ஏற்றி வர ஆஞ்சநேயரின் அருளால் முயற்சிகள் வெற்றி அடையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.