இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு வித்தியாசமான பிறவிகளுக்கும் சகுன பலன்கள் உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. காக்கை வகைகளில் வித்தியாசமாக இருக்கக் கூடிய இந்த அண்டங்காக்கைக்கும் அதிர்ஷ்ட சகுன பலன்கள் உண்டு. பொதுவாகவே அண்டங்காக்கை துரதிஷ்டம் தரும் என்று தான் நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அண்டங்காக்கை சொல்லும் அதிர்ஷ்ட பலன் என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.
சகுன சாஸ்திரத்தின் படி அண்டங்காக்கை தலையில் தட்டினாலோ, கொத்தினாலோ பெரிய துன்பம் ஒன்று துரத்த போகிறது என்று அர்த்தம். ஒரு நல்ல காரியத்திற்காக வெளியில் கிளம்பும் பொழுது திடீரென ஒரு அண்டங்காக்கை குறுக்கே பறந்தால், செல்லும் காரியம் வெற்றி அடையாது என்பார்கள். இப்படி அண்டங்காக்கையை பற்றி அபசகுணமாக நிறைய விஷயங்கள் உள்ளன. சகுன சாஸ்திரத்தின் படி அண்டங்காக்கை அபசகுணம் என்றாலும், அது சுப சகுனமாகவும் பல சமயங்களில் வேலை செய்கிறது.
அண்டங்காக்கை கரையாமல் காலையிலேயே நீங்கள் அதனை பார்க்க நேர்ந்தால், அன்றைய நாள் புதிதாக சில நபர்களுடன் உரையாட வேண்டி வரும். புதிய நண்பர்களும், புதிய உறவுகளும் கிடைப்பார்கள். அண்டங்காக்கை கரையாமல் ஒரே இடத்தில் அசையாமல் நின்று கொண்டிருப்பதை, நீங்கள் அதிகாலையிலேயே பார்த்தால் அது சுப சகுனமாக அமையும். இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு நல்ல விஷயங்கள் கேட்கும் படியாக அமையும்.
அண்டங்காக்கை தலையை சுற்றி வட்டம் அடித்தால், உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம். வஸ்திரங்கள், நகை, ஆபரணங்கள், பணம், செல்வம் என்று ஏதாவது ஒன்று சேரப் போகிறது என்று அர்த்தம். அண்டங்காக்கை அவ்வளவு சுலபமாக எல்லோருடைய கண்களிலும் தெரிவது கிடையாது. ஆசியா கண்டம் முழுவதும் பரவலாக அண்டங்காக்கை இருந்தாலும், நம்மால் மாதத்தின் 30 நாட்களும் அதனை காண முடிவது கிடையாது.
எப்போதோ என்றாவது ஒரு நாள் நம் கண்களுக்கு தெரியும் இந்த அண்டங்காக்கை, நமக்கு பேரதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியது. அண்டங்காக்கைக்கு உணவு வைப்பது நற்பலன்களை கொடுக்கும். நீங்கள் வைத்த உணவை அண்டங்காக்கை உங்கள் கண் முன்னே எடுத்து விட்டால், உங்களை பிடித்துள்ள தோஷங்கள் அனைத்தும் விலகுவதாக நீங்கள் நம்பலாம். பித்ரு தோஷம் முதலான எல்லா வகையான தோஷங்களும் போக்கக் கூடியது இந்த அண்டங்காக்கை! அண்டங்காக்கை வைக்கும் உணவை, எடுத்து சாப்பிட்டால் அதை விட அதிர்ஷ்டம் ஏதுமில்லை எனலாம்.
அண்டங்காக்கையை விரட்ட கூடாது. அதே போல அண்டங்காக்கை வீட்டிற்குள் நுழைய நினைத்தால் அது பெருந்துன்பத்தை கொடுக்கும். கருவண்டு, அண்டங்காக்கை என்று அடர் கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பறவைகள், வண்டு இனங்கள் வீட்டிற்குள் வருவதை அனுமதிக்க கூடாது. மொட்டை மாடி பகுதிகளில் அண்டங்காக்கைக்கு உணவு வைத்து அதனை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். கிளிகள் மனிதனுக்கு செல்லப்பிராணியாக இருப்பது போல, சில அண்டங்காக்கைகளும், காக்கைகளும் கூட மனிதர்களிடத்தில் நட்புறவாய் பழகும் தன்மை கொண்டுள்ளது.
இதையும் படிக்கலாமே:
சொந்த வீடு வாங்க மார்கழியில் செய்ய வேண்டிய பரிகாரம்
அதில் அண்டங்காக்கை எப்போதும் உங்களைக் காண வரத் துவங்கினால், கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் பயப்படும் பறவைகளும், மற்ற ஜந்துக்களும் நாம் அன்புடன் பழகும் பொழுது அதுவும் நம்முடன் நேசத்துடன் பழகிவிடும். தினமும் காக்கைகளுக்கு முடிந்த அளவிற்கு தண்ணீரும், தானியங்களையும் தானம் செய்யுங்கள். இது பலவிதமான தோஷங்களை நீக்கி அதிர்ஷ்ட வாய்ப்புகளை உங்களுக்கு பெற்று தரும். துரதிஷ்டசாலிகளும் யோகாசாலிகளாக மாற பறவைகளுக்கு உணவளியுங்கள்.