- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொந்த வீடு வாங்க மார்கழியில் செய்ய வேண்டிய பரிகாரம்

சொந்த வீடு வாங்க மார்கழியில் செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. எல்லோரும் அதற்கான முயற்சிகளையும் முடிந்த அளவு மேற்கொண்டு தான் வருகின்றோம். ஆனால் அந்த முயற்சியில் ஒரு சில பேர் வெற்றி அடைகிறார்கள். பல பேர் தோல்வி அடைகிறார்கள். வெற்றியடைந்தவர்களும் முயற்சி செய்தவர்கள் தான், தோல்வி அடைந்தவர்களும் முயற்சி செய்தவர்கள் தான்.

இதில் முயற்சி செய்யாதவர்களை நாம் பட்டியலில் எடுத்துக் கொள்ள வேண்டாம். முயற்சி செய்து அதிர்ஷ்டத்தோடு வெற்றி அடைந்தார்கள் அல்லவா அந்த பட்டியலில் நாம் இடம் பெற வேண்டும். எவ்வளவுதான் கஷ்டப்பட்டும் பணம் சேர்க்க முடியவில்லை. முயற்சியில் பல தடைகளும் தடங்கல்களும் வருகிறது. கொஞ்சம் பணம் சேர்ந்தால் அந்த பணத்தை செலவு செய்ய துரதிஷ்டம் ஓடி வந்து விடுகிறது. வீண் விரயங்களுக்கு பணம் கரைகிறது.

- Advertisement -

இப்படி கஷ்டப்பட்டு உழைத்தும் வீடு கட்ட முடியவில்லையே, பணத்தை சேமிக்க முடியவில்லையே என்பவர்கள் பின் சொல்ல கூடிய இந்த எளிமையான பரிகாரத்தை இந்த மார்கழி மாத பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்து பாருங்கள். உங்களுடைய துரதிஷ்டமானது அதிர்ஷ்டமாக மாறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.

மார்கழியில் ஏதாவது ஒரு நாள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூட இதை செய்யலாம். நாளை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து விடவும். வாசல் தெளித்து கோலம் போட்டு இருக்க வேண்டும். நிலை வாசலில் இரண்டு விளக்கு ஏற்றி வைக்கப்பட வேண்டும். அதன் பிறகு பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு, சுவாமி படங்களுக்கு அலங்காரம் செய்துவிட்டு முருகனை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

- Advertisement -

குலதெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சொந்த வீடு கட்ட வேண்டும் என்று, 27 முறை எழுதுங்கள். இந்த பேப்பருக்கு நடுவே மூன்று சுர்மா கற்களை வைத்து மடித்து விட வேண்டும். மடித்த பேப்பரை உள்ளங் கைகளில் வைத்துக்கொண்டு மனம் உருகி இறைவனிடம் சொந்த வீட்டை கேளுங்கள். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

மடித்த அந்த பேப்பரை அப்படியே பூஜை அறையில் முருகரின் திருவுருவப்படத்திற்கு பின்னல் வைத்தாலும் சரி, அல்லது குலதெய்வத்தின் திருவுருவப்படத்திற்கு பின்னால் வைத்தாலும் சரி, நீங்கள் இந்த பேப்பரில் எழுதிய அந்த விஷயம் சீக்கிரம் நிறைவேறும். நாட்டு மருந்து கடைகளில் இருந்து சுர்மா கல் வாங்கி முன்பாகவே வைத்துக் கொள்ளுங்கள். அந்த கல்லை பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள்.

- Advertisement -

வீடு கட்டுவதற்காக, நிலம் வாங்குவதற்காக முயற்சி செய்து நீங்கள் தோற்றுப் போயிருந்தால் அந்த விஷயத்தில் உங்கள் வெற்றி அடைய செய்ய வேண்டிய வேலையை இந்த பிரபஞ்சம், அந்த முருகப்பெருமான், அந்த குலதெய்வம் பார்த்துக் கொள்ளும். இந்த கல்லுக்கு என்று ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது.

அது துரதிஷ்டத்தை கூட அதிர்ஷ்டமாக மாற்றி உங்கள் கையில் கொண்டு வந்து சேர்க்கும். இந்த எளிமையான பரிகாரத்தை நம்பிக்கை உள்ளவர்கள்g மட்டும் செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுடைய சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு சீக்கிரமேநிறைவேறும். சொந்த வீடு கட்டுவதற்கு மட்டும்தானா இந்த பரிகாரம் என்று கேட்டால் நிச்சயம் அதுவும் கிடையாது.

உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதேனும் இருந்தால், அல்லது உங்களுடைய கஷ்டங்கள் ஏதேனும் சீக்கிரம் சரியாக வேண்டும் என்றால் அதை ஒரு வரியில் அந்த காகிதத்தில் எழுதி வைக்கலாம். உதாரணத்திற்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். தங்க நகைகளை அடமானத்தில் இருந்து மீட்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மார்கழி செவ்வாயில் படிக்க வேண்டிய முருகன் பாடல்

இதுபோல கோரிக்கைகள் இருந்தாலும் ஒரு வரியில் எழுதி அதை இறைவனிடம் சொல்லுங்கள். அந்த பேப்பரில் சுர்மா கல்லையும் வையுங்கள். நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் கூடிய விரைவில் பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்