- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசுக்கிர சஷ்டி பரிகாரம்

சுக்கிர சஷ்டி பரிகாரம்

- Advertisement -

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருக்கிறார் என்றால் அவருடைய வாழ்க்கையில் அவருக்கு எந்தவித குறையும் இருக்காது. எதைத் தொட்டாலும் வெற்றி அடைவார்கள். பணத்திற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது. வாழ்க்கையை வாழ்வதற்காகவே பிறந்தவர்களாக இவர்கள் திகழ்வார்கள். அவ்வளவு ஆற்றல் மிகுந்தவராக தான் சுக்கிர பகவான் திகழ்கிறார். சுக்கிர பகவானின் அருள் இல்லாதவர்களுக்கு இவை அனைத்தும் நேர்மாறாக இருக்கும். இப்படி நேர்மாறாக இருக்கக்கூடியவர்களுடைய வாழ்க்கையும் நல்லபடியாக மாறுவதற்கு சுக்கிரசஷ்டி நாளன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சுக்கிர சஷ்டி பரிகாரம்

கார்த்திகை மாதம் என்பது முருகப் பெருமானுக்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட மாதத்தில் முருகப்பெருமானுக்குரிய திதியான சஷ்டி திதி வளர்பிறையில் அதுவும் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது என்பது கூடுதல் விசேஷத்தையே தரும். வளர்பிறை சஷ்டியில் விரதம் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியமும் திருமண யோகமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த சஷ்டி தினத்தன்று நாம் கண்டிப்பான முறையில் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று முருகப் பெருமானின் சன்னதிக்கு முன்பாக நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த சஷ்டி தினமானது வெள்ளிக்கிழமை காலை 11:15 மணிக்கு ஆரம்பித்து சனிக்கிழமை காலை 9:40 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் சஷ்டி வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை காலை 11:15 க்கு மேல் மேற்கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை அன்று செய்து கொள்ளலாம். சஷ்டி தினத்தன்று நாம் எப்பொழுதும் முருகப்பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்வோமோ அதே முறையில் மாலை நேரத்தில் வழிபாடுகள் அனைத்தையும் செய்து கொள்ளுங்கள். இதோடு இந்த ஒரு எளிமையான பரிகாரத்தையும் சேர்த்து செய்து கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்திற்கு ஆறு எண்ணிக்கையில் இருக்கக்கூடிய நாணயங்கள் வேண்டும். ஒரு வில்லை சந்தனம் வேண்டும். ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து இந்த ஆறு நாணயங்களையும் சுற்றி வைத்து அதற்கு நடுவே ஒரு சந்தன வில்லையை வைத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே முருகப் பெருமானுக்கு முன்பாக வைத்து விடுங்கள். ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து உங்களுடைய வாழ்க்கையில் பண ரீதியான அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வேண்டி முடித்த பிறகு இந்த நாணயங்களும் சந்தனமும் அப்படியே முருகப் பெருமானின் படத்திற்கு முன்பாகவே இருக்கட்டும்.

- Advertisement -

அன்று இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் சுக்கிர ஹோரை என்பது வரும். அந்த நேரத்தில் ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து இந்த நாணயங்களையும் சந்தன வில்லையையும் அதில் போட்டு மூட்டையாக கட்டி நீங்கள் எந்த இடத்தில் பணம் வைத்திருக்கிறீர்களோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த நாணயத்தை எந்த எக்காரணம் கொண்டும் செலவு செய்யக்கூடாது. ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் அதை எடுத்து பூஜை அறையில் வைத்து பூஜை செய்துவிட்டு திரும்பவும் அதே சுக்கிர ஹோரையில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:குரு சுக்கிர ஸ்ரீ பஞ்சமி வழிபாடு

இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் சுக்கிர பகவானின் அருளும் யோகமும் கிடைக்க பெற்று பண வரவிற்கு எந்தவித தடையும் இல்லாமல் சிறப்பாக வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்