ஒருவர் இந்த உலகத்தில் பிறக்கிறார் என்றால் அதற்கு அவருடைய கர்மவினையே காரணமாக திகழ்கிறது. நம்முடைய கர்ம வினையின் அடிப்படையில் தான் ஒவ்வொரு கிரகங்களும் நம்முடைய ஜாதகத்தில் அமையப்பெற்று நாம் பிறக்கிறோம். அதே போல் தான் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் காரணமாக திகழ்வது நம்முடைய கர்ம வினைகளே. அப்படிப்பட்ட கர்ம வினைகளை மாற்றி நன்மைகளை தரும் அளவிற்கு நம்முடைய வாழ்க்கையை மாற்றுவதற்கு உதவக் கூடியது தான் குரு சுக்கிர பஞ்சமி தினம். இந்த தினத்தில் நாம் கற்கண்டை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்தால் நம்முடைய கர்ம வினைகள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஸ்ரீ பஞ்சமி வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் நன்மை நடைபெறுவதற்கும் தீமை நடைபெறுவதற்கும் காரணம் அவர்கள் தான். முன் ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவ புண்ணியத்தின் பலனால் தான் இந்த ஜென்மத்தில் அவர்களுடைய வாழ்க்கை அமைகிறது என்று கூறப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக தான் கர்ம வினைகள் கருதப்படுகின்றன. கர்ம வினைகளை நாம் தீர்க்க வேண்டும் என்றால் அதற்கான பரிகாரங்களையும் தான தர்மங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த பிறவியில் நாம் செய்யக்கூடிய பாவ புண்ணியத்தின் அடிப்படையில் தான் மறு ஜென்மம் என்பது இருக்கிறதா இல்லையா என்பதே முடிவாகும் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட கர்ம வினைகளை தீர்ப்பதற்குரிய பரிகாரத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை குரு சுக்கிர பஞ்சமி தினத்தன்று செய்ய வேண்டும். கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பஞ்சமி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த பஞ்சமி தினத்தில் பலரும் வாராகி அம்மனை வழிபாடு செய்வார்கள். வாராகி அம்மனை வழிபாடு செய்வதோடு இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் விரைவிலேயே தீரும் என்றே கூறலாம். இந்த பஞ்சமி என்பது வியாழக்கிழமையான இன்று மதியம் 12:24க்கு ஆரம்பித்து நாளை மதியம் 11:14க்கு நிறைவடைகிறது. வியாழக்கிழமை ஆரம்பித்து வெள்ளிக்கிழமை நிறைவடைவதால் தான் இதை குரு சுக்கிர பஞ்சமி என்று கூறுகிறோம். இந்த இரண்டு தினத்தில் எந்த நாள் வேண்டுமானாலும் நாம் இந்த பரிகாரத்தை செய்யலாம். இரவு நேரத்தில் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு நமக்கு தேவைப்படக்கூடியது சுக்கிரனின் அம்சம் பொருந்திய கற்கண்டு. உங்களுடைய வலது கையில் ஒரு வெற்றிலையை வைத்து அதற்கு மேல் சிறிது கற்கண்ட வைத்து வடக்கு பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய கர்ம வினைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் என்னவோ அதை கூற வேண்டும். உதாரணமாக கடன் பிரச்சினை தீர வேண்டும், நோய்நொடிகள் விலக வேண்டும், பணரீதியான பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும், குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்க வேண்டும் என்று உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அவற்றை முழுமனதோடு வடக்கு பார்த்தவாறு நின்று கொண்டு கூற வேண்டும்.
இப்படி கூறி முடித்த பிறகு இந்த கற்கண்டை பொடி செய்து உங்கள் வீட்டில் நிலை வாசலில் தூவி விட வேண்டும். பிறகு நீங்கள் போய் வழக்கம் போல் படுத்துக் கொள்ளலாம். இந்த கற்கண்டை எறும்புகள் உணவாக எடுத்துக் கொள்ளும். இப்படி எறும்புகளுக்கு இதை நாம் தானமாக தருவதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் நீங்குவதோடு நாம் என்ன வேண்டுதல் வைத்தோமோ அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:2024 கார்த்திகை தீபம் ஸ்பெஷல் டிப்ஸ்
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த ஒரு பொருளை வைத்து முழு மனதோடு குரு சுக்கிர பஞ்சமி தினத்தன்று இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு அவர்களுடைய கர்ம வினைகள் நீங்குவதோடு கர்ம வினைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.