- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalலக்ஷ்மி கடாட்சம் உண்டாக்கும் 3 விஷயங்கள்

லக்ஷ்மி கடாட்சம் உண்டாக்கும் 3 விஷயங்கள்

- Advertisement -

மகாலட்சுமியின் அம்சமாக இருக்கக் கூடியவர்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் தான்! எனவே பெண்கள் இந்த 3 விஷயங்களை தவறாமல் கடைபிடிக்கும் பொழுது லட்சுமி அருள் கிடைக்கும், ஐஸ்வர்யங்கள் சேரும், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த 3 விஷயங்கள் இப்போதும் நீங்கள் கடைபிடிக்கின்றீர்களா? என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

குடும்பத்தில் இருக்கும் பெண் குழந்தைகள், பெண்கள் கல்வி அறிவு பெற்றிருந்தால் அந்த குடும்பமே பலனைடையும் என்பார்கள். பெற்ற கல்வியை சரியாக பயன்படுத்தாமல் பெண்கள் இருப்பதால் தான் பல குடும்பங்களில் இன்று பிரச்சனைகளும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. பெண்கள் காலம் காலமாக இந்த மூன்று விஷயங்களை கடைப்பிடித்து வருகின்றனர். நாமும் இதை கடைபிடித்தால் லட்சுமி கடாட்சத்திற்கு பஞ்சமே இருக்காது. இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகாது. தொழில் நஷ்டம் வராது. பண பிரச்சனைகள் என்பது இருக்கவே செய்யாது. மனம் சார்ந்த பிரச்சினைகளும் வீட்டில் ஏற்படாமல் பாதுகாக்கும்.

- Advertisement -

அப்படியான அந்த மூன்று விஷயங்களில் முதல் விஷயம், பெண்கள் கையால் தான் காலையில் வேலைக்கு கிளம்பும் கணவன்மார்களுக்கு உணவு பரிமாற வேண்டும். வீட்டிற்கு தலைவனாக இருக்கக் கூடிய ஆண், காலையில் வேலைக்கு கிளம்பும் போது அவனே சாப்பாடு எடுத்து போட்டுக் கொள்ளக் கூடாது. மனைவி பரிமாற, கணவன் சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும் என்பது குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

இரண்டாவதாக வாசல் கூட்டாமல், வாசலில் கோலம் இல்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என்பதும் நியதி. இப்போது இருக்கும் காலத்தில் கோலம் போடுவது என்பது எல்லோராலும் முடிவது கிடையாது. ஒரு சிலர் அபார்ட்மெண்டுகளில் குடியிருக்கிறார்கள் என்பார்கள், ஆனால் தலைவாசலில் குப்பைகள் இருக்கக் கூடாது. தண்ணீர் தெளித்து சுத்தம் செய்திருக்க வேண்டும். எனவே தலைவாசலில் குப்பைகளை சேர்க்காமல், ஒரு ஈரத் துணியால் துடைத்து எளிமையான சிறிய கோலம் போல, பச்சரிசி மாவால் போட்டு வைக்கலாம். இதனால் லட்சுமி கடாட்சம் குறையாமல் இருக்கும். கோலம் போடவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் காலையில் எழுந்ததும் வாசல் ஈரமாக இருக்க வேண்டும் என்பது தான் இங்கு விஷயம்.

- Advertisement -

மூன்றாவதாக பெண்கள், கணவன் வெளியில் செல்லும் பொழுது சிரித்த முகத்துடன் வெளியில் அனுப்ப வேண்டும். மனைவியின் மகிழ்ச்சியில் தான் கணவனின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது எனவே பெண்கள் மகிழ்ச்சியுடன், இனிமையான மனதுடன் உங்களை பார்த்துக் கொண்டால் தான் குடும்பத்தில் தன வரவிற்கு பஞ்சம் இருக்காது. தொழிலில் லாபம் பெருகவும், குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கவும் இந்த மூன்று விஷயங்களை எந்த காலத்திலும் தடையில்லாமல் நிறைவேற்றுவது பெண்களின் கடமையாகும். அதை நிறைவேற்ற வைப்பது ஆண்களின் கையில் இருக்கும் அதிர்ஷ்ட சாவி போன்றது.

இதையும் படிக்கலாமே:
தொப்பை குறைய, முதுகு வலி தீர எளிய ஆசனம்

அதிர்ஷ்டம் வர வேண்டும் என்றால் சாவியை பயன்படுத்துங்கள். ஆணும் பெண்ணும் சரி சமமாக விட்டுக் கொடுக்க வேண்டும். யார் பெரியவர் என்கிற போட்டியே வரக் கூடாது. இந்த மூன்று விஷயங்களையும் கடைப்பிடிக்காத பெண்களிடத்தில் தன வரவில் கண்டிப்பாக தடைகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது. பிரச்சனைகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் சண்டைகள் உருவாகும். மகாலட்சுமியின் சாபத்திற்கு ஆளாவீர்கள் எனவே தொழில் சார்ந்த பிரச்சினைகளும், தொழில் நஷ்டமும், வியாபார விருத்தியின்மையும் உண்டாகும்.

சற்று முன்