சில நேரங்களில் நாம் செய்யக்கூடிய நல்ல காரியங்கள், மீண்டும் மீண்டும் நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கக் கூடிய நேரம், அடுத்தடுத்து வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் அலங்கார பொருட்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். சில நேரம் நாம் தங்கம் வாங்கக்கூடிய நேரம், மேலும் தங்கத்தை வாங்கி குவிக்கும்.
அதுவே நமக்கு கொஞ்சம் நேரம் சரியில்லை என்றால், ஒரு பவுன் நகையை கொண்டு போய் அடமானத்தில் வைத்து, பணம் வாங்குவோம். அந்த கெட்ட நேரம் நம்மிடம் இருக்கும் அத்தனை நகையையும் கொண்டு போய் அடமான கடையில் உட்கார வைத்து விடும். இது இயல்பாக எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான். ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசியுங்கள்.
எந்த நாளில் எந்த கிழமையில் அடமானத்தை வைக்கின்றோம் என்று பாருங்கள். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை இது போன்ற நாட்களில் எல்லாம் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை வீட்டிற்கு வெளியே கொண்டு போகாதீங்க. எதுவாக இருந்தாலும், ஒன்றுக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். சரி, எவ்வளவு உஷாராக இருந்தும் நகையை அடமானத்தில் விட்டு விட்டோம். எப்படியோ கஷ்டப்பட்டு அந்த நகையை மீட்டுக் கொண்டு வந்து, வீட்டில் வைத்து விட்டோம். இந்த நகை மீண்டும் அடமானத்திற்கு செல்லக்கூடாது என்றால், என்ன செய்வது.
நகை அடமானம் செல்லாமல் இருக்க பரிகாரம்
அடமானத்திலிருந்து எடுத்து வந்த நகையை முதலில் சுத்தமான தண்ணீரில் கழுவி எடுத்து துடைத்து விடுங்கள். ஒரு தாம்பூல தட்டில் அந்த நகையை வைத்து அதற்கு பக்கத்தில் கொஞ்சம் கல் உப்பு வைத்து, பூஜை அறையில் வைத்து இந்த நகை எப்போதும் என்னிடமே இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
ஒரு நாள் முழுக்க அந்த தங்கம் கல்லுப்போடு சேர்ந்து பூஜை அறையில் இருக்கட்டும். மறு நாள் எடுத்து ஒரு சிவப்பு நிற வெல்வட் துணியில் அந்த நகையை வையுங்கள். சின்னதாக சிவப்பு நிறத்தில் காட்டன் நூல் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு விரல் சைஸ் நூல் இருந்தால் கூட போதும். அந்த நூலை அந்த நகையில் கட்டி வைக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று முடிச்சு போட்டு அந்த நூல், அந்த தங்க நகையில் கட்டப்பட வேண்டும். அவ்வளவுதான்.
அந்த நகையில் ஒரு மஞ்சள் கிழங்கு வைத்து சிவப்பு கலர் வெல்வட் துணியால் அந்த நகையை மூட்டை கட்டி பீரோவில் வைக்க வேண்டும். பீரோவில் இரும்புக்கு மேலே நகை படும்படி எப்போதுமே வைக்கக் கூடாது. அந்த நகை போட்டு வைக்க ஒரு மரப்பெட்டியோ அல்லது நகை பெட்டியோ வாங்கி அதற்குள் நகையை வைத்து பத்திரப்படுத்தி பீரோவில் வைத்தால் நகை எப்போதும் உங்களிடமே தங்கும்.
இதையும் படிக்கலாமே: வரவேற்பறையில் வைக்க கூடாத பொருள்
நீங்கள் எப்போதெல்லாம் பீரோவை திறந்து பணம் நகை எடுத்தார்களோ, அப்போதெல்லாம் அந்த நகையை தொட்டு உங்களுடைய கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும். நகையை வணங்க வேண்டும். இந்த ஸ்வர்ணலட்சுமி, ஐஸ்வர்ய லக்ஷ்மி எப்போதும் என் வீட்டிலேயே நிலையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொண்டால், தங்கமும் பணமும் உங்களிடம் நிலையாக நிலைத்திருக்கும். இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் குறிப்பு அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.