- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவரவேற்பறையில் வைக்க கூடாத பொருள்

வரவேற்பறையில் வைக்க கூடாத பொருள்

- Advertisement -

குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் முன்னேற்றம் தடைபடுகிறது, பிரச்சனை மேல் பிரச்சனை ஒரு தொடர்கதையாக இருக்குது. ஒரு வீட்டில் ஒருவருக்கு பிரச்சினை வந்தால், இன்னொருவராவது நன்றாக வாழ வேண்டும் அல்லவா. உதாரணத்திற்கு கணவரின் நேரம் சரியில்லை என்றால், மனைவிக்காவது நல்லது நடக்க வேண்டும். கணவன் மனைவிக்கு நேரம் சரியில்லை என்றால், பிள்ளைகளுக்காவது நல்லது நடக்க வேண்டும்.

ஆனால் சில வீடுகளில் யாருக்குமே நல்லது நடக்காது. வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் விலக, வீடு எப்போதுமே நேர்மறை ஆற்றல் நிறைந்ததாக இருக்க, வீட்டில் இருப்பவர்களுக்கு எப்போதும் நல்லது மட்டுமே நடக்க, செய்ய வேண்டிய ஒரு சில ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

வீட்டின் வரவேற்பறையில் என்ன பொருள் வைப்பது, வீட்டிற்குள் நுழைப்பவர்கள் முதல் முதலில் பார்க்க வேண்டிய சாமி படம் என்ன, நாம் வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது எந்த படத்தை பார்த்து விட்டு சென்றால் நமக்கான நல்லது நடக்கும், இத்தனை கேள்விகளுக்கும் உண்டான பதில் இந்த பதிவில் உங்களுக்காக மட்டுமே.

குடும்பத்தில் நல்லது நடக்க பரிகாரம்

முதலில் வீட்டின் வரவேற்பறையில் வைக்கவே கூடாத அந்த ஒரு பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். உடைந்த பொருட்களை வரவேற்பறையில் வைக்கக்கூடாது. இது எங்களுக்கும் தெரியும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் சில பேர் உடைந்த பொருட்களை ஒட்டி வரவேற்பறையில் வைத்திருப்பார்கள். பிளாஸ்டிக் சேர் உடைந்திருக்கும், 500 ரூபாய் கொடுத்து இன்னொரு சேர் வாங்க சிரமப்பட்டு, அந்த பிளாஸ்டிக் சேருக்கு டேப் போட்டு ஒட்டி வரவேற்பு அறையில் வைத்திருப்பார்கள். சோபா உடைந்திருக்கும். அதை ஒட்டி வரவேற்பறையில் வைத்திருப்பார்கள்.

- Advertisement -

கண்ணாடி டீ பாய் உடைந்திருக்கும். அந்த விரிசலுக்கு மேல் ஒரு டேப்பை ஒட்டி வரவேற்புறையில் வைத்திருப்பார்கள். அழகு சாதன பொருட்கள் உடைந்து இருக்கும். அதை கம் போட்டு ஒட்டி வரவேற்புறையில் வைத்திருப்பார்கள். இப்படி உடைக்கப்பட்ட ஒட்டப்பட்ட பொருட்கள் வீட்டில் இருந்தால் எதிர்மறை ஆற்றல் வெளிபடும். வீட்டில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்காது. முதலில் இந்த பொருட்களை தூக்கி வெளியே எறியுங்கள் நல்லது தானாக வீடு தேடி வரும்.

அடுத்தபடியாக வீட்டில் இருப்பவர்கள் உள்ளே நுழைந்த உடன் பார்க்க வேண்டிய படம் கற்பக விநாயகர் படம். நிலை வாசலுக்கு உள்ளே நுழையும் போது எதிரே இருக்கும் சுவற்றில் ஒரு கற்பக விநாயகரை வாங்கி மாட்டுங்கள். வீட்டிற்கு நல்லது நடக்கும். நீங்கள் வீட்டிற்கு உள்ளே இருந்து, வெளியே போறீங்க. நிலை வாசலுக்கு மேல் பக்கத்தில் வீட்டிற்கு உள்ளே பார்த்தபடி ஒரு பச்சை நிறத்தில் இருக்கும் கிரக லட்சுமியின் திருவுருவப்படத்தை மாட்டி வையுங்கள்.

- Advertisement -

பச்சை நிற புடவை அணிந்து மிகவும் அழகாக இருப்பார்கள் கையில் தங்க காசு, தனம் தானியத்தை எல்லாம் வைத்துக் கொண்டு அப்படியே வீட்டிற்குள் நுழைவது போல ஒரு போட்டோ. இதுதான் வீட்டிற்கு உள் பக்கம், நிலை வாசலுக்கு மேல் பக்கத்தில் இருக்க வேண்டிய புகைப்படம். நீங்கள் வெளியே போறீங்க அந்த கிரகலட்சுமி பார்த்துவிட்டு வெளியில் சென்றால் வெளியில் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றிதான்.

அதேபோல அந்த கிரகலட்சுமி மாட்டி வைத்திருக்க கூடிய இடத்தில் வாசல் கதவை திறக்கும் போது அதற்கு மேல் பக்கத்தில் மின்விளக்கு இருக்கக் கூடாது. வாசல் கதவை திறந்து, வீட்டிற்கு உள் பக்கம் வந்தால் தலைக்கு மேலேயே லைட் எரியும். அதுபோல மின் விளக்கு எறிய கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் தரும் கடைசி சோமவார வழிபாடு

பூஜையறையில் சுவாமி படங்களோடு சேர்த்து இறந்தவர்களின் திருவுருவப்படம் இருக்கக்கூடாது. பூஜை அறைக்கு மேல் பக்கத்திலும் இருந்தவர்களின் திருவுருவப்படம் இருக்கக்கூடாது. வரவேற்பறையில் இறந்தவர்களின் திருவுருவப்படத்தை மாட்டி வைக்கலாம். இதுபோல மேலே சொன்ன எளிமையான ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை நீங்கள் பின்பற்றும்போது உங்களுக்கான நல்லது நிச்சயம் நடக்கும். கெடுதல் தானாக வீட்டில் இருந்து வெளியேறும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்