- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் பூஜை செய்யும்போது, இறைவனை வணங்கும் முறை

வீட்டில் பூஜை செய்யும்போது, இறைவனை வணங்கும் முறை

- Advertisement -

அந்த இறைவனின் அருள் ஆசி நம்முடைய குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைத்துவிட்டால், போதும். சந்தோஷத்திற்கு ஒரு துளி குறையும் வரவே வராது. பொதுவாக கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் போது, இரு கைகளைக் கூப்பி வழிபாட்டை மேற்கொள்வோம். அதுவே உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் இருக்கும் சுவாமியை கும்பிடும்போது, எந்த முறையில் கும்பிட்டால் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும், நாம் செய்யும் இறைவழிபாடு முழுமையான பலனை தரும், தெரியுமா உங்களுக்கு. ஒரு ஜோதிடர், ஒரு ஆன்மீகவாதி சொன்ன தகவலைத்தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

வீட்டில் சுவாமி கும்பிடும் முறை

பூஜையறையில் வழக்கம் போல விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, எப்போதும் போல இரு கைகளை கூப்பி சாமி கும்பிடுவீர்கள் அல்லவா. அப்படி இல்லாமல் இடது கையை நெஞ்சுக்குழிக்க நேராக வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். வலது உள்ளங்கையால் இடது உள்ளங்கையை மேலே வைத்து மூடிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இடது உள்ளங்கையில் கொஞ்சமாக அட்சதையும் உதிரி பூவும் இருக்க வேண்டும். இப்படி கைகளை வைத்துக்கொண்டு, இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலே புகைப்படத்தை பாருங்கள். உங்களுக்கு கைகளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நன்றாக புரியும். மனம் உருகி உள்ளங்கைகளில் கொஞ்சம் அட்சதையையும் பூவையும் வைத்து குடும்ப சந்தோஷத்திற்காக பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், 10 நிமிடம் கூட இதே போல கைகளை வைத்து சுவாமி கும்பிடலாம். பூஜை அறையில் ஒரு பாய் விரித்து அமர்ந்து தியான நிலையில் இது போல கைகளை வைத்துக்கொண்டு அமர்ந்து சுவாமியிடம் பிரார்த்தனை செய்து கொள்ளலாம். இறுதியாக கையில் இருக்கும் புஷ்பங்களையும் அட்சதையையும் அப்படியே சுவாமிக்கு சமர்ப்பணம் செய்து விட்டு, நமஸ்காரம் செய்து, வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: சிவன் கோவில் விபூதி பிரசாதம் பயன்படுத்தும் முறை

வீட்டில் இப்படி சாமி கும்பிட்டால் உங்களுடைய வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைவாக இருக்கும். அந்த இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். உங்களுக்குள்ளும் ஒரு இனம் புரியாத மன அமைதி வரும். இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் வழிபாடு அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.poo

சற்று முன்