- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசிவன் கோவில் விபூதி பிரசாதம் பயன்படுத்தும் முறை

சிவன் கோவில் விபூதி பிரசாதம் பயன்படுத்தும் முறை

- Advertisement -

கோவிலில் கொடுக்கும் விபூதி குங்குமம் புஷ்பம் போன்ற பிரசாதங்களை எப்படி கையாளுவது என்று சில பேருக்கு தெரியவில்லை. கோவிலில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த பிரசாதங்கள் பொக்கிஷமானது என்பது சில பேருக்கு புரியாது. ரொம்பவும் அலட்சியமாக விபூதி குங்குமம் புஷ்பங்களை கையாளுவார்கள். அது ரொம்ப ரொம்ப தவறு.

கோவிலில் கொடுக்கும் பிரசாதம் ரொம்ப ரொம்ப புனிதமானது. இறையருள் பெற்றது. குறிப்பாக சிவன் கோவிலில் கொடுக்கும் விபூதியை எப்படி வாங்க வேண்டும், எப்படி நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

சிவன் கோவில் விபூதி

சிவன் கோவிலில் அர்ச்சகர் உங்கள் கையில் விபூதியை கொடுக்கும்போது ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே விபூதியை வாங்க வேண்டும். சிவன் கோவிலில் ஒரு முறை தான் விபூதி பிரசாதத்தை கைநீட்டி வாங்க வேண்டும். வாங்கிய விபூதியை சிவனை பார்த்தபடி நெற்றியில் இடக்கூடாது.

கிழக்கு பார்த்தவாறு நின்று அந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். விபூதியை நெற்றியில் பூசும் போது உங்களுடைய தலை வானத்தைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். தலையை மேலே நன்றாக தூக்கி விபூதியை நெற்றியில் இட வேண்டும். நம் நெற்றியில் இடும் திருநீறு பூமியில் சிந்தக்கூடாது. பூமியில் சிந்தி அது அடுத்தவர் காலில் மிதி படக்கூடாது.

- Advertisement -

கோவிலில் கொடுத்த விபதியை அப்படியே நான்கு விரலில் எடுத்து நெற்றியில் ஒரு பட்டை போடுவது சிறப்பான பலனை கொடுக்கும். விபூதி என்றால் கண்ணுக்கு தெரியாமல் வைப்பது, கூச்சப்படுவது, அழகுக்காக பார்ப்பது இதுபோல எல்லாம் செய்ய வேண்டாம். கோவிலுக்கு செல்லும் அந்த ஒரு நாள் நெற்றி நிறைய நீர் பூசும் போது நமக்கு கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். அதை தவற விட்டு விடாதீர்கள். நெற்றியில் விபூதியை வைக்கும் போது, கூட வந்தவரோடு பேசிக்கொண்டு, கதை பேசிக்கொண்டு விபூதியை நெற்றியில் வைக்க கூடாது. அது மகாபாவம்.

உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை சிவபெருமானிடம் சொல்லிக் கொண்டே விபூதியை எடுத்து நெற்றியில் பூசுங்கள். கையில் மீதம் இருக்கும் விபூதியை தாராளமாக வீட்டிற்கு கொண்டு வரலாம். தவறு கிடையாது. சில பேர் சிவன் கோவில் விபூதியை வீட்டிற்கு கொண்டு வருவது தவறு என்று சொல்லுவார்கள்.

- Advertisement -

சிவன் கோவிலில் கொடுத்த விபூதியை வீட்டிற்கு கொண்டு வந்தால் தவறு கிடையாது. சிவன் கோவிலில் கொடுக்கும் பிரசாதம் எதுவாக இருந்தாலும் அதை தாராளமாக வீட்டிற்கு கொண்டு வரலாம். கொண்டு வந்து அதை உங்கள் தினசரி விபூதி வைக்கும் டப்பாவில் கொட்டிக் கொள்ளுங்கள் நல்லது. வாங்கிய விபூதியை கோவிலில் வேறு எந்த இடத்தில் கொட்டக்கூடாது.

சிவன் கோவில் என்று மட்டுமல்ல எந்த கோவிலிலும், கையில் இருக்கும் விபூதியை அதற்கு உண்டான இடத்தில் தான் கொட்ட வேண்டுமே தவிர, கோவிலை அசுத்தம் செய்யும்படி பிரசாதத்தை ஆங்காங்கே வைத்து வரக்கூடாது. சாப்பிடுவதற்காக கோவில்களில் பிரசாதங்கள் கொடுக்கப்படும். இரண்டு மூன்று தொன்மைகள் வாங்கி அந்த சாதத்தை அப்படியே வீணடிப்பது மிக மிக தவறு. கோவிலில் அமர்ந்து பிரசாதத்தை சாப்பிடும்போது கீழே சிந்தக்கூடாது.

இதையும் படிக்கலாமே: தீய சக்திகள் விலக அஷ்டமி பரிகாரம்

குப்பையை அதற்குரிய இடத்தில் மட்டும் தான் போட வேண்டும். மேலே சொன்ன விஷயங்கள் அனைத்தும் சின்ன சின்ன விஷயங்கள் தான். இருந்தாலும் இதை பின்பற்றுபவர்களுக்கு புண்ணியம் வந்து சேரும். உங்களுக்கு புண்ணியத்தை தரும் இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் பிடித்து இருந்தால் பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்