நம் ஒவ்வொருவரும் சிறு குழந்தையாக இருப்பதிலிருந்து வயதாகி இறக்கும் சூழ்நிலை வரும் வரை ஒவ்வொரு நிலையிலும் நம்முடைய தோற்றம் ஒவ்வொரு விதமாக மாறும். அந்த வகையில் முதுமை தோற்றம் வர ஆரம்பித்துவிட்டது என்பதை உணர்த்துவதற்குரிய ஒரு முக்கியமான அறிகுறியாக முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் திகழ்கின்றன. இது முதுமை ஏற்பட்டால் மட்டும்தான் வருகிறது என்று இல்லை. இன்றைய காலத்தில் பல இளம் வயதினருக்கும் சுருக்கங்கள் ஏற்பட்டு முதுமை தோற்றம் என்பது உண்டாகிறது. எவ்வளவு வயதாகி இருந்தாலும் அவர்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கி அழகான முகப்பொலிவை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் உபயோகப்படுத்த வேண்டிய ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
முகத்தில் சுருக்கம் ஏற்படுகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் முகத்தில் இருக்கக்கூடிய கொலாஜின் உற்பத்தி என்பது குறைவதுதான். அந்த கொலாஜின் உற்பத்தியை சரி செய்வதற்கும் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கம் முற்றிலும் நீங்கி இளமையான வழு வழுப்பான முகப்பொலிவை பெறுவதற்கும் நம்முடைய வீட்டு சமையலறையில் இருக்கக்கூடிய இரண்டே இரண்டு மாவுகளை வைத்து செய்யக்கூடிய ஒரு பேஸ் பேக்கை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இதற்கு முதலில் நமக்கு சாதம் வடித்த கஞ்சி வேண்டும். ஒரு கப் பச்சரிசியை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு மூன்று கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதை மூன்றும் நிமிடம் குறைந்த தீயில் வேக வைத்து அதன் தண்ணீரை மட்டும் தனியாக வடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை பயன்படுத்தி தான் நம் ஃபேஸ் பேக் தயார் செய்யப் போகிறோம். இப்பொழுது ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பச்சரிசி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை இவை இரண்டையும் நன்றாக கலந்து இதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் சாதம் வடித்த தண்ணீரையும் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக ஃபேஸ் பேக் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள்.
பிறகு இதனுடன் ஒரு விட்டமின் இ கேப்சூல் எண்ணெயையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது. முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு முகம் மற்றும் கழுத்தில் இந்த ஃபேஸ் பேக்கை போட்டு 15 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை உபயோகப்படுத்தும் பொழுது பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் முகத்தையும் கழுத்தையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை போட்ட பிறகு பாதாம் எண்ணெய், விட்டமின் ஈ கேப்ஸ்யூல், சாதாரண தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒரு எண்ணையை எடுத்து லேசாக முகத்திலும் கழுத்திலும் தடவிக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே:தலை முடி பிரச்சினையை தீர்க்கும் கிராம்பு எண்ணெய்
எந்தவித கெமிக்கல் நிறைந்த கிரீம்களையும் பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கக் கூடிய இந்த இரண்டு மாவுகளை மட்டும் வைத்து நம்முடைய முகத்திற்கு நாம் பயன்படுத்துவதன் மூலம் இளமையான முகத்தோற்றத்தை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.