- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் டிசம்பர் மாதம் மைத்ரேய முகூர்த்த வழிபாடு.

கடன் தீர்க்கும் டிசம்பர் மாதம் மைத்ரேய முகூர்த்த வழிபாடு.

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் மைத்ரேய முகூர்த்தம் என்று வரும். அந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொகையோ அல்லது வட்டியையோ திருப்பி செலுத்துவதன் மூலம் அந்த கடன் விரைவிலேயே நிறைவடையும் என்று கூறப்படுகிறது. அப்படி கடனை தீர்ப்பதற்குரிய மைத்ரேய முகூர்த்த நேரத்தில் நாம் சில வழிபாடுகளை செய்தோம் என்றால் விரைவிலேயே அந்த கடன் பிரச்சினை தீரும் என்றும் அதே சமயம் நம்முடைய பிறவி கடனும் தீரும் என்றும் கூறப்படுகிறது. அந்த வழிப்பாட்டு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு அவருடைய முன் ஜென்ம கர்ம வினைகள் தான் காரணம் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த கர்ம வினைகளால் தான் ஒருவர் கடன் வாங்கும் சூழ்நிலைக்கும் தள்ளப்படுகிறார் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட கர்ம வினையை தான் பிறவிக் கடன் என்று கூறுகிறோம். இந்த பிறவி கடன் முற்றிலும் நீங்கினால் தான் நம் வாழ்க்கையில் நாம் அனுபவித்த அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும். அந்த கஷ்டங்களில் ஒன்றான கடன் பிரச்சனையும் தீரும். வட்டிக்கு கடன் பெற்றிருந்தாலோ அல்லது நகையை அடமானம் வைத்து கடன் வாங்கி இருந்தாலும், சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி இருந்தாலும், வங்கியில் கடன் வாங்கி இருந்தாலும் இவை அனைத்துமே கடன் என்று தான் கூறுவோம். அப்படிப்பட்ட கடனை எவ்வளவு முயற்சி செய்தும் தீர்க்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்தினால் விரைவில் அவர்களுடைய கடன் பிரச்சனை தீரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

டிசம்பர் மாதத்தில் 11-ம் தேதி மைத்ரேய முகூர்த்தம் என்பது வருகிறது. இதற்கு கூடுதல் சிறப்பும் இருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் கடன் பிரச்சினை தீரவேண்டும் என்று நினைப்பவர்கள் அஸ்வினி நட்சத்திரம் அதே போல் அனுஷ நட்சத்திரம் இந்த இரண்டு நட்சத்திரங்களையும் பயன்படுத்த வேண்டும் என்றும் அதிலும் குறிப்பாக அஸ்வினி நட்சத்திரத்தில் மேஷ லக்னம் வரும்பொழுதும், அனுஷம் நட்சத்திரத்தில் விருச்சிக லக்னம் வரும்பொழுதும் நாம் கடனை திருப்பி செலுத்தினோம் என்றால் அந்த கடன் பிரச்சனை தீரும் என்றும் ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த டிசம்பர் மாதத்தில் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தம் என்பது மேஷ லக்னம் வரக்கூடிய நேரத்தில் வருகிறது. மதியம் 2 மணி 38 நிமிடத்தில் இருந்து 4 மணி 20 நிமிடம் வரை இது இருக்கிறது. இந்த நேரத்தில் மேஷ லக்னமும் வருகிறது என்பதால் இந்த நேரத்தை நாம் பயன்படுத்தும் பொழுது விரைவிலேயே நமக்கு கடன் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் இது மதிய நேரம் என்பதால் நம்மால் எளிதில் நம்முடைய கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அது வங்கியில் வாங்கி இருந்தாலும் சரி, பிறரிடம் இருந்து வாங்கி இருந்தாலும் சரி, நகையை அடமானம் வைத்து வாங்கி இருந்தாலும் சரி அந்த நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த நேரத்தில் நாம் கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு முன்பாக வீட்டிலோ அல்லது முருகன் ஆலயத்திலோ அமர்ந்து ஒரு தீபத்தை ஏற்றி வைத்து கந்த குரு கவசத்தை பாராயணம் செய்துவிட்டு பிறகு கடன் தொகையை திருப்பி செலுத்தும் பொழுது முருகப்பெருமானின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கடன் பிரச்சினைகளும் தீரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமேபண வரவை அதிகரிக்கும் ஏகாதசி தீப வழிபாடு

டிசம்பர் மாதம் 11-ம் தேதி ஏகாதசியோடு மேஷ லக்னத்தில் வரக்கூடிய இந்த மைத்ரேய முகூர்த்தத்தை முழுமையாக பயன்படுத்தி அனைத்து விதமான கடன்களையும் நிவர்த்தி செய்து மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்