தீபம் என்றதுமே பலரும் கார்த்திகை மாதத்தை தான் கூறுவார்கள். கார்த்திகை மாதத்திற்கு பிறகு வரக்கூடிய மார்கழி மாதமும் பலரும் தங்களுடைய நிலை வாசலில் காலை நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் தங்களுடைய வீட்டு வாசலில் கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் செய்து வைத்து பூசணி பூவையும் வைத்து பூசணிப்பூ கிடைக்காதவர்கள் செம்பருத்தி பூவை வைத்து தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள். இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம் பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ராஜயோகம் உண்டாவதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மார்கழி முதல் நாள் ஏற்ற வேண்டிய தீபம்
தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த நேரமாக திகழக்கூடியது தான் மார்கழி மாதம் என்றும், அந்த நேரத்தில் தேவர்கள் நம்முடைய பூலோகத்திற்கு வருவார்கள் என்றும், அதனால் மார்கழி மாதம் முழுவதும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுடைய இல்லத்திலும் அனைத்து தேவர்களும் வந்து அருளாசி புரிவார்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றது. அதனால் தான் பலரும் மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து வீட்டில் பூஜை செய்வதும் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்ற வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மார்கழி மாதத்தில் வீட்டின் நிலை வாசலில் காலையில் தீபம் ஏற்றுவது என்பது அனைத்து தெய்வங்களையும் ஆகர்ஷணம் செய்வதற்கு இணையான ஒன்றாகவே கருதப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதுமே தீபம் ஏற்ற முடியாது என்று நினைப்பவர்கள் மார்கழி மாதத்தின் முதல் நாள் மட்டுமாவது நிறைவாசலில் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் இந்த தீபத்தை ஏற்று விட வேண்டும். சூரிய உதயம் ஆவதற்கு முன்பாக ஏற்ற வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
உங்கள் வீட்டு நிறை வாசலில் வெற்றிலையை வைத்து அதில் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி வடக்கு பார்த்தவாறு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இப்படி வீட்டு நிலை வாசலில் தீபம் ஏற்றிய பிறகு வீட்டு பூஜை அறைக்குள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த முறையில் மார்கழி மாதத்தின் முதல் நாள் வெற்றிலையை வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நமக்கு வெற்றிகள் உண்டாகும். இதன் மூலம் ராஜயோகம் ஏற்படும்.
இதையும் படிக்கலாமே:குடும்ப கஷ்டம் நீக்கும் தீக்குச்சி பரிகாரம்
இந்த ஒரு தீபத்தை நம்முடைய வீட்டு நிலை வாசலில் மார்கழி மாதத்தின் முதல் நாள் அன்று முழு மனதோடு அனைத்து தெய்வங்களையும் நினைத்து ஏற்றுவதன் மூலம் அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்க பெற்று ராஜயோகமான வாழ்க்கையை வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.