நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு திடீரென்று கஷ்டங்கள் ஏற்படுகிறது, என்னவென்றே தெரியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் ஒன்றின் பின் ஒன்றாக கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வந்து கொண்டே இருக்கிறது என்பவர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது ஒரு வேளை இது கண் திருஷ்டியாக இருக்குமோ? செய்வினை கோளாறாக இருக்குமோ? என்பதுதான் இந்த கண் திருஷ்டி, செய்வினை கோளாறுகள் போன்ற அனைத்து விதமான தீய சக்திகளும் நம்மை விட்டு விலகுவதற்கு கார்த்திகை மாதத்தின் கடைசி நாள் செய்ய வேண்டிய தீக்குச்சி பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குடும்ப கஷ்டம் நீக்கும் பரிகாரம்
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்தில் எப்படி நாம் ஆலயத்திற்கு சென்று இஷ்ட தெய்வங்களையும் குல தெய்வத்தையும் வழிபாடு செய்ய வேண்டுமோ அதே போல் தான் ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளில் திருஷ்டி சுத்தி நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளையும் வெளியேற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி நாம் வெளியேற்றினோம் என்றால் தான் அடுத்த நாள் அதாவது அடுத்த மாதத்தின் முதல் நாள் அன்று நாம் ஆலயத்திற்கு சென்று தெய்வங்களை வழிபாடு செய்யும்பொழுது அவர்களின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
இந்த பரிகாரத்தை நாம் கார்த்திகை மாதத்தின் கடைசி நாளான டிசம்பர் மாதம் 15ஆம் தேதி இரவு படுக்கச் செல்வதற்கு முன் செய்ய வேண்டும். இதற்கு 7 தீக்குச்சிகள் இருந்தால் போதும். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை ஏழு விதங்களாக பிரிக்கலாம். பணம் ரீதியான கஷ்டம், தொழில் ரீதியான கஷ்டம், குடும்ப ரீதியான கஷ்டம், ஆரோக்கியம் ரீதியான கஷ்டம், வேலை ரீதியான கஷ்டம், வீடு தொடர்பான கஷ்டம், வாகனம் தொடர்பான கஷ்டம் என்று கூறலாம். இந்த கஷ்டங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு நமக்கு ஏழே ஏழு தீக்குச்சிகள் இருந்தால் போதும்.
ஒரு தீக்குச்சியை பொருதி அது எரியும் பொழுது அது அணையாத வண்ணம் நம்முடைய தலையை வலம் இருந்த இடமாக மூன்று முறையும் இடமிருந்து வலமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும். அவ்வாறு சுற்றும்பொழுது ஓம் ரிங் நசி நசி என்னும் மந்திரத்தை கூற வேண்டும். இப்படி ஒவ்வொரு தீக்குச்சியாக ஏழு தீக்குச்சிகளை தனித்தனியாக பொருத்தி ஒவ்வொரு முறையும் தலையை சுற்ற வேண்டும். பிறகு சிறிது பச்சை கற்பூரத்தை எடுத்து நம்முடைய கையில் நுணுக்கி இரண்டு கைகளிலும் நன்றாக தேய்த்து முகம், தலை, கழுத்து, உடம்பு என்று நம்மால் முடிந்த அளவிற்கு உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து ஒரு பக்கெட்டில் தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். குளித்து முடித்த பிறகு வீட்டு பூஜை அறைக்கு சென்று ஒரு தீபத்தை ஏற்றி வைத்து இந்த மாதம் முழுவதும் எனக்கு இருந்த கண் திருஷ்டிகள் தீய சக்திகள் அனைத்தும் விலகி அடுத்த மாதத்தில் இருந்து நான் சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வழிபாட்டை செய்ய வேண்டும். இப்படி செய்து முடித்த பிறகு நாம் எப்பொழுதும் உறங்கச் செல்வது போல் உறங்கச் செல்லலாம். இப்படி ஒவ்வொரு மாத கடைசி நாளிலும் நாம் திருஷ்டி எடுப்பதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விலகி அடுத்த மாதத்தில் சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு நல்ல வழி உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:கார்த்திகை பௌர்ணமி வெற்றிலை வழிபாடு
அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய தீக்குச்சியை வைத்து இப்படி எளிமையான முறையில் நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகளை நீக்கலாம் முழு மனதோடு முயற்சி செய்து நன்மைகளை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.