- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇழந்த நிறத்தையும் முகப்பொலிவையும் மீட்க உதவும் ஃபேஸ் பேக்

இழந்த நிறத்தையும் முகப்பொலிவையும் மீட்க உதவும் ஃபேஸ் பேக்

- Advertisement -

அன்றாடம் வேலைக்கு சென்று வீடு திரும்புவர்களுக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு கவலை என்னவென்றால் அவர்களுடைய நிறம் மாறுவதுதான். வெயிலில் எந்த அளவிற்கு சுற்றுகிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுடைய முகத்தின் நிறம் என்பது படிப்படியாக குறைந்து கறுத்துப் போய்விடுவார்கள். பலரும் அவர்களை பார்க்கும் பொழுது ஏன் இப்படி கறுத்து விட்டாய் என்று கேட்கும் அளவிற்கு கூட போய் விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் இழந்த அந்த நிறத்தை திரும்பப் பெறுவதற்கும் முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்வதற்கும் உதவக்கூடிய ஒரு ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

இழந்த நிறத்தையும் முகப்பொலிவையும் மீட்க

நம்முடைய வீட்டு சமையலறையே மருத்துவமனை என்று அன்றைய காலத்தில் இருந்தது. அது மருத்துவமனை மட்டும் கிடையாது அழகு நிலையமும் கூடத்தான். நம்முடைய முகப்பொலிவை மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய பல பொருட்கள் நம்முடைய வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது. அந்த பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது எவ்வளவு கறுப்பாக இருந்தாலும் அந்த கருமை முற்றிலும் நீங்கி முகப்பொலிவுடன் அழகாக திகழ்வார்கள். அந்த ஃபேஸ் பேக்கை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இதற்கு நமக்கு மூன்று பொருட்கள் வேண்டும். ஒன்று தயிர், மற்றொன்று முல்தானி மெட்டி, மூன்றாவது வாழைப்பழத் தோல். ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு முல்தானி மெட்டியை சேர்த்து கட்டி விழுகாத அளவிற்கு நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது முகத்தை தண்ணீரை பயன்படுத்தி சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்களுடைய முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். ஐந்திலிருந்து பத்து நிமிடம் இது அப்படியே இருக்கட்டும். 10 நிமிடம் கழித்து வாழைப்பழத் தோலை பயன்படுத்தி இந்த ஃபேஸ் பேக்கை துடைத்து எடுக்க வேண்டும். முற்றிலுமாக இந்த ஃபேஸ் பேக்கை வாழைப்பழ தோலை வைத்து எடுத்த பிறகு சுத்தமான தண்ணீரை ஊற்றி முகத்தை கழுவி விடலாம்.

- Advertisement -

வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இந்த ஃபேஸ் பேக்கை நாம் பயன்படுத்தினாலே போதும். இழந்த நிறத்தை நம்மால் திரும்ப பெற முடியும். நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய கருமை நீங்க ஆரம்பிக்கும். முகத்துளைகள் இறுக ஆரம்பிக்கும். இளமையான தோற்றம் உண்டாகும். இறந்த செல்கள் நீங்கும் என்று கூறிக் கொண்டே செல்லலாம். இதில் சேர்க்கப்பட்டுள்ள தயிர், முல்தானி மெட்டி, வாழைப்பழத் தோல் இவை மூன்றுமே நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் அற்புதமான பொருட்களாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:கரும்புள்ளி, மங்கு மறைய டிப்ஸ்

எளிதில் அனைவரின் வீட்டு சமையலறியிலும் இருக்கக்கூடிய இந்த பொருளை பயன்படுத்தி நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய கருமையை முற்றிலும் நீக்கி அழகான பொலிவான தோற்றத்தை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்