முகத்தில் இருக்கக் கூடிய கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், தேவையற்ற முடிகள், மங்கு, பூனை முடி, கருமை போன்ற எல்லா விதமான பிரச்சனைகளையும் விரட்டி அடிக்கக் கூடிய எளிய அழகு சார்ந்த தகவல்களை தான் அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம். பீல் ஆஃப் மாஸ்க் இயற்கையான முறையில் இது போல தயாரித்து பயன்படுத்தும் பொழுது ரொம்பவே எஃபக்டிவாக இருக்கும்.
முகத்தில் இருக்கக் கூடிய சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்வதற்கு, சருமத்தின் உள்ளிருந்தே செயலாற்றக்கூடிய சில பொருட்கள் தேவை. ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெள்ளை சர்க்கரையை போடுங்கள். சர்க்கரையுடன் ஒரு ஸ்பூன் காபி பவுடர் அதே அளவிற்கு சேர்த்து கலந்து விடுங்கள். ரெண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து ஒரு ஐந்து நிமிடத்திற்கு நன்கு கலந்து லைட் பிரவுன் நிறத்திற்கு கிரீம் போல கொண்டு வாருங்கள்.
பின்னர் இந்த கலவையுடன் ஒரு முழு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள் கரு வேண்டாம். பிறகு நன்கு அடித்து கலக்குங்கள். நுரைத்து கிரீம் போல வரும். இந்த கலவையை முதலில் ஏதாவது ஒரு பேசியல் பிரஷ் பயன்படுத்தி முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். பின்பு மெல்லிய டிஷ்யூ பேப்பர்களை கிழித்து முகத்தில் எல்லா இடங்களிலும் படும்படி ஒட்டி வையுங்கள். முகம் மற்றும் கழுத்து பகுதிகளிலும் இந்த கலவையை தடவி ஒட்டுங்கள்.
கண்கள், உதடுகளில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். டிஷ்யூ பேப்பரை ஒட்டியதும் அதன் மீது மீண்டும் ஒரு கோட்டிங் கொடுங்கள். நன்கு திக்கான கோட்டிங் ஆக கொடுத்து உலர விட வேண்டும். 20 லிருந்து 30 நிமிடம் கண்டிப்பாக நன்கு காய உலர விட வேண்டும். காய்ந்து முகம் இறுக ஆரம்பிக்கும் பொழுது பேன் காற்றில் அப்படியே விடுங்கள். நன்கு இறுகி காய்ந்து வந்ததும் தோல் உரிப்பது போல உரிக்க வேண்டும். இதைத் தான் “பீல் ஆஃப் மாஸ்க்” என்பார்கள்.
டிஷ்யூ பேப்பர் மீது மீண்டும் ஒரு கோட்டிங் கொடுப்பதால், இந்த கலவை சரும துவாரங்களுக்குள் ஊடுருவி சென்று நல்ல ஒரு ரிசல்டை நமக்கு கொடுக்கும். காய்ந்து இறுகியதும் தோலை உரிப்பது போல உரிப்பதால் மெல்லிய முடிகள், தேவையற்ற பூனை முடிகள் அகன்று விடும். வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் தானாகவே வந்துவிடும். மங்கு போன்றவை மறைய ஆரம்பிக்கும். வெயிலினால் ஏற்பட்ட கருமையும் எளிதாக மறைந்து பொலிவான தோற்றத்தை கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே:
கஷ்டங்கள் தீர மார்கழி வெள்ளி பரிகாரம்
இக்கலவையை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தாராளமாக பயன்படுத்தி ஃபேஸ் பேக் போட்டு வரலாம். ஒரு மாதம் தொடர்ந்து இதை இப்படி செய்வதன் மூலம் மங்கு நன்கு குறைய ஆரம்பிக்கும். இந்த ஒரு விஷயத்தை செய்து வரும் பொழுது முகம் மாசு, மரு இல்லாமல் கண்ணாடி போல நல்ல ஒரு பளிங்கு முகத்தை பெற்று தரும். சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். 10 பைசா செலவில்லாமல் ஈசியாக வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து பேசியல் செய்தது போன்ற பளபளப்பை அடைவீர்கள்.