- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதைப்பூசம் 2024 விரதம் துவங்கும் முறை

தைப்பூசம் 2024 விரதம் துவங்கும் முறை

- Advertisement -

தைப்பூசம் வருவதற்கு முன்பாகவே, 48 நாட்கள் முருகனுக்காக விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்யக்கூடிய பக்தர்களுக்கு இந்த தகவல்கள் பயனுள்ளதாக அமையும். 2025 ஆம் வருட தைப்பூசம், பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது. தை மாதம் வரும் பௌர்ணமி திதியை தான் தைப்பூசமாக கொண்டாடுவோம்.

இந்த தைப்பூசத்திற்க்கு முன்பாகவே விரதம் இருக்க துவங்க வேண்டும் என்றால், என்றிலிருந்து விரதம் இருந்தால், 48 நாளை நிறைவு செய்து கொள்ளலாம், அல்லது 48 நாள் விரதம் இருக்க முடியாதவர்கள், 21 நாள் விரதத்தை எப்படி மேற்கொள்வது, விரதம் நாட்களில் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும், என்னென்ன விஷயங்களை எல்லாம் செய்யக்கூடாது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

தை பூசம் விரதம் 2024

டிசம்பர் 25ஆம் தேதி நாளை மறுநாள் புதன்கிழமை உங்களுடைய முருகர் விரதத்தை துவங்கினால், தைப்பூசம் அன்று 48 நாட்கள் விரதம் இருந்த பலனை நீங்கள் பெறுவீர்கள். 48 நாள் எங்களால் விரதம் இருக்க முடியாது. 21 நாள் விரதம் இருக்க முடியும் என்றால் வரும் ஜனவரி 22-ம் தேதி விரதத்தை துவங்கினால், தைப்பூசம் முடியும்போது 21 நாட்கள் கணக்கு வரும். விரதம் இருப்பவர்கள் எப்படி விரதத்தை மேற்கொள்வது.

ரொம்பவும் கடுமையாக விரதத்தை மேற்கொள்ள வேண்டுமா? தினமும் எழுந்து தலைக்கு குளித்து, முருகன் கோவிலுக்கு சென்று, முருகனை சுற்றிவந்து, பிறகு வீட்டில் விளக்கு ஏற்றி பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் வைத்து இப்படி எல்லாம் விரதம் இருந்தால் தான் பலன் கிடைக்குமா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. உங்களால் இது எல்லாம் செய்ய முடியும் என்றால் செய்யலாம். சிறப்பு தான் தவறு கிடையாது.

- Advertisement -

ஆனால் நாங்கள் தினமும் வேலைக்கு செல்ல வேண்டும். குழந்தைகளை பார்க்க வேண்டும் எங்களுக்கு இத்தனை நேரம் இல்லை, இவ்வளவு விஷயங்களை கடைபிடிக்க உடல் ஆரோக்கியமும் ஒத்துழைக்காது என்பவர்கள் என்ன செய்வது.

வீட்டில் சுத்தபத்தமாக இருங்கள். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். உடம்புக்கு மட்டும் குளித்தால் போதும். வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை தலைக்கு குளித்தால் போதும். அசைவம் சாப்பிடக்கூடாது. அனாவசியமான வார்த்தைகளை பேசக்கூடாது. மனதில் வஞ்சம் இருக்கக்கூடாது. அடுத்தவர்கள் மீது பொறாமை குணத்தை கொள்ளக்கூடாது. பேச்சில் சாந்தம் இருக்க வேண்டும். தினமும் குளித்து முடித்துவிட்டு ‘ஓம் சரவணபவ’ என்று சொல்லி திருநீறு பூசி உங்களுடைய அன்றாட வேலையை துவங்குங்கள். உங்களுடைய விரதமும் துவங்கிவிடும்.

- Advertisement -

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது முருகனை கோவிலுக்கு சென்று பாருங்கள். வேலையில்லாமல் ஓய்வு எடுக்கும் நேரத்தில் முருகா முருகா என்று அவன் நாமத்தை சொல்லுங்கள். அவ்வளவுதான். தினமும் வீட்டில் இருக்கும் முருகப்பெருமானை பார்த்தாலே போதும். அவனுக்கு ஒரு பூ தினமும் முடிந்தால் வையுங்கள். இவ்வளவுதான் வழிபாடு. இவ்வளவுதான் விரதம்.

இந்த 48 நாட்கள் முருகனை நினைத்து நீங்கள் விரதம் இருந்து, இந்த தைப்பூசத்திற்கு முருகப்பெருமானை சென்று தரிசனம் செய்து வந்தால், வாழ்வில் இருக்கும் மீத நாட்களை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அந்த முருகப்பெருமானே உங்களோடு வாழ்க்கையில் பயணிப்பார். உங்களுக்கு வரும் கஷ்ட நஷ்டங்களை அவனை ஏற்றுக் கொள்வான்.

இதையும் படிக்கலாமே: பாலாஜி ஜெயந்தி 2024

இப்போது பெண்களுக்கு ஒரு சந்தேகம் வரும். மாதவிடாய் நாட்களில் என்ன செய்வது என்று. மாதவிடாய் நாட்களிலும் வழக்கம் போல முருகனை நினைத்து விரதம் இருக்கலாம். அசைவம் சாப்பிடக்கூடாது. எப்போதும் போல இருந்து கொள்ளுங்கள். பூஜை அறைக்கு செல்லக்கூடாது, அவ்வளவுதான். முருகனின் நாமத்தை உச்சரித்து விரதத்தை தொடருவதில் எந்த தடையும் இல்லை. நம்பிக்கை இருந்தால் இந்த வருட தைப்பூசத்திற்கு உங்களால் முடிந்த 48 நாள், 21 நாளும் விரதத்தை மேற்கொள்ளுங்கள். முருகனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்