மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். மனது முழுக்க சந்தோஷம் நிறைந்து காணப்படும். வேளையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை நீங்கள் எதிர்பார்த்த நல்ல வாழ்க்கை உங்கள் கையை வந்து சேரும். சுப காரிய தடை விலகும். மனதிற்கு பிடித்த நபரை கரம் பிடிப்பீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று முன்கோபத்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நல்ல வாய்ப்புகளை இழக்கவும், உங்களுடைய முன்கோபம் தடையாக வந்து முட்டுக்கட்டை போடும். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நிதானத்தோடு பேசுங்கள். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். எதிர்கால சேமிப்புக்கு பிள்ளையார் சுழி போடலாம். நல்லதே நடக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மனபயம் இருக்கும். ஒரு பதட்டம் வெளிப்படும் .புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணடிக்க வேண்டாம். உயர் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று திறமையாக செயல்படுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படும். உற்றார் உறவினர்களோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இரட்டிப்பாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சிக்கல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். தேவை இல்லாமல் கோபப்படாதீர்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். அடுத்தவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனம் நிறைந்த மகிழ்ச்சி வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். வீண்விரய செலவுகள் குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். இளைஞர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். உங்கள் மனதிற்கு பிடித்த படிப்பை படிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நல்லதே நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போராட்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மனம் உடைந்து போகக்கூடாது. தைரியத்தோடு செயல்படுங்கள். தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். பணக்கஷ்டம் நீங்கும். வருமானம் சீராகும். கடன் சுமை குறையும். பயணங்களால் நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்ய துவங்குவார்கள். ஒழுக்கத்தை கடைபிடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுவீர்கள். சொன்ன வாக்கை காப்பாற்றி கொடுப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். ஒழுக்கம் உங்களை நல்வழிப்படுத்திவிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை வெளிப்படும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். பேச்சுத் திறமை அதிகரிக்கும். இளைஞர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு.