பணம் வைக்க ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, எல்லோருடைய கையிலும் மணி பர்ஸ் என்று ஒன்று இருக்கும். பணத்தை லெதர் மணி பர்சில் வைப்பது நல்லது தான் என்றாலும், துணி பையாக இருப்பது இன்னும் நல்லது. பணம் மென்மேலும் பர்சில் சேர்வதற்கு எந்தெந்த மாதிரியான பொருட்கள் அதில் வைக்கலாம்? என்னும் ரகசியத்தைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.
பணம் வைக்கும் மணி பர்ஸ் வெல்வெட் துணியில் இருப்பது நல்லது. சிகப்பு நிறம், பிரவுன் நிறம், பழுப்பு நிறம் அல்லது பச்சை நிற பர்ஸ்கள் பணத்தை அதிகம் ஈர்க்கும். மணி பர்ஸ் எக்காரணம் கொண்டும் கருப்பு நிறத்தில் இருப்பது நல்லதல்ல! கருப்பு நிற பர்ஸ் வைத்திருந்தால் உடனே மாற்றி விடுங்கள். மணி பர்சில் தேவையில்லாத கிழிந்த, சிதிலமடைந்த எந்த பொருட்களும் வைக்க வேண்டாம். பழைய கிழிந்த டிக்கெட்டுகள், புகைப்படங்கள், ரசீதுகள் போன்றவை இருந்தால் தூக்கிப் போட்டு விடுங்கள்.
சிலரின் நியாபகார்த்தமாக வைக்க வேண்டிய பொருட்களை வேறு இடத்தில் மாற்றி வையுங்கள். பணத்தை சேர்க்க கூடிய மணி பர்சில் எப்போதும் வாசனை வீச வேண்டும். குப்பைகளை சேர்க்கக் கூடாது. ஒரு துண்டு கிராம்பு, ஒரு துண்டு பச்சை கற்பூரம், ஒரு துண்டு ஏலக்காய் எப்பொழுதும் பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். இது பணத்தை ஈர்த்து மகாலட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். பின் மணி பர்ஸ் உடன் ஸ்வஸ்திக் புகைப்படங்கள் அல்லது உங்கள் ராசிக்கு உரிய குறியீடுகளை வைக்கலாம். இது பணத்தை வீண் விரயமாகாமல் தடுக்கும்.
மணி பர்சில் துர்க்கை டாலர், துர்க்கை நாணயம் இருந்தால் வையுங்கள். இது உங்களுக்கு ஆத்ம பலத்தை கொடுக்கும். மணி பர்சில் செப்பு தகடுகள், எந்திரங்கள் போன்றவற்றை வைக்கலாம். மணி பர்சில் இரும்பு உலோகம் கண்டிப்பாக எந்த விதத்திலும் இருக்கக் கூடாது. துருப்பிடித்த பொருட்கள் இருப்பது பணத்தை சேர விடாது. பணத்துடன் எப்பொழுதும் சில்லரை நாணயங்களும் இருக்க வேண்டும். சுத்தமாக நாணயங்களை துடைத்து வைக்காதீர்கள்.
பர்சில் ரூபாய் நோட்டுக்களை நான்கைந்தாக மடித்து வைக்காமல், இரண்டாக மடித்து வைப்பது நல்லது. அப்படி இல்லை என்றால் பணத்தை சுருட்டி வையுங்கள். பணம் சுருட்டி வைப்பதால் மென்மேலும் சேரும் என்பது நம்பிக்கை. பசி என்று கேட்பவருக்கு பர்சிலிருந்து பணத்தை சில சமயங்களில் நாம் தேடுவோம். அந்த சமயத்தில் சில்லறைகள் இல்லை என்றால் சில்லறை இல்லை என்று பசித்தவருக்கு உணவளிக்காமல் துரத்தி விடுவோம். பசித்தவருக்கு இல்லை என்று சொல்லி அனுப்புவது மிக கொடிய பாவம் செயலாகும் எனவே ஒரு உணவு பொட்டலத்தையாவது பசி என்று கேட்டவருக்கு தானம் கொடுப்பது நல்லது. இல்லை என்று சொல்லாமல் பசித்தவருக்கு உணவளிக்கும் செயல் உங்களை மென்மேலும் பணக்காரனாக வழிவகை செய்யும்.
இதையும் படிக்கலாமே:
பூஜை அறையில் பல்லி இருந்தால் செய்யவேண்டியது.
சுயநலமாக இல்லாதவர்கள் இடத்தில் உழைக்காவிட்டாலும் பணம் அவர்களுக்கு எவ்வழியிலாவது வந்து சேர்வதை யாராலும் தடுக்க முடியாது எனவே சுயநலம் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவும் பொதுநலத்தோடு பணத்தை கையாளுங்கள். பர்ஸில் வைக்கும் பணத்துடன் எப்போதும் ஒன்றிரண்டு துளசி இலைகளை வைப்பது நல்லது. துளசி இலை புனிதமானது, தூய்மையானது. உங்களுடைய மணி பர்ஸ் இப்படி இருந்தால், இந்த முறையில் கையாண்டால் பணம் சேருவது நிச்சயம்.