எத்தனை முறை சொன்னாலும் சரி, எத்தனை பேர் சொன்னாலும் சரி, இந்த மார்கழி மாதம் இறை வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்த மாதம்தான். அது மட்டுமில்லாமல் இந்த மாதத்தில் நாம் செய்யக்கூடிய பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் பல மடங்கு அபரிவிதமான பலனை தரும். வேறு எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு இந்த மாதத்திற்கு இருக்கிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஒரு துளி சந்தேகமும் கிடையாது. அப்படிப்பட்ட இந்த மாதத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை குரு நாள். மார்கழி 11 வது நாள், இந்த நாளில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி திதியும் சேர்ந்து வந்திருக்கிறது. உங்களுடைய மன கஷ்டம் தீருவதற்கு இதைவிட சிறப்பான ஒரு நாள் திரும்பவும் வர வேண்டும் என்றால், மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
அதிலும் மார்கழியில், வியாழக்கிழமை, ஏகாதசி திதி வருமா என்பது சந்தேகம்தான். இப்படிப்பட்ட நாளை நாம் தவற விடுவோமா. செல்வமும் பணமும் நகையும் நம் வீட்டில் பெருக வேண்டும் என்றால் செய்ய வேண்டிய எளிமையான தாந்திரீகம் சொல்லும் ஆன்மீக பரிகாரத்தை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
செல்வம் சேர மார்கழி ஏகாதசி பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு 1 ரூபாய் நாணயம், ஒரு மார்க்கர் அல்லது ஸ்கெட்ச் தேவை. ஏனென்றால் நாணயத்தில் பேனாவை வைத்து எழுத முடியாது. இந்த நாணயத்தில் பர்மனெண்ட் மார்க்கரில் இந்த குறியீட்டை வரைந்தாலும் நல்லது தான். இந்த 1 ரூபாயை செலவு செய்யாமல் அப்படியே பீரோவில் ஒரு இடத்தில் போட்டு வைத்தால், நிச்சயம் உங்கள் வீட்டி பீரோவிற்கு பணம் வந்த வண்ணம் இருக்கும்.
இன்று மாலை 5 மணிக்கு மேலாக குபேர நேரம் துவங்கிவிடும். வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு குபேர வழிபாடு செய்பவர்களுக்கு இது தெரியும். இன்று மாலை 5 மணிக்கு மேலாக, இரவு 8 மணிக்குள்ளாக இந்த பரிகாரத்தை எப்போது வேண்டும் என்றாலும் செய்யுங்கள். ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து, மார்க்கரில் இந்த FEHU symbol வரைந்து கொள்ள வேண்டும். மேலே உள்ள புகைப்படத்தை பார்த்தாலே தெரியும். அந்த குறியீட்டை எப்படி வரைவது என்பது.
சின்னதாக ஒரு ரூபாய் நாணயத்தில் அதை வரைந்து கொண்டு, அந்த ஒரு ரூபாயை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அதை இந்த பிரபஞ்சத்திடம் கேளுங்கள், மகாலட்சுமியிடம் கேளுங்கள், குலதெய்வத்திடும் கேளுங்கள், குபேரரிடம் கேளுங்கள், பெருமாளிடம் கேளுங்கள். நிச்சயம் அந்த பணமும் தங்கமும் நகையும் உங்கள் வீடு தேடி வரும்.
எப்படி கேட்பது, கோடி ரூபாய், 10 கோடி ரூபாய் கேட்க வேண்டுமா. அப்படி கிடையாது. உங்கள் தகுதிக்கு இப்போது என்ன கஷ்டம் இருக்கிறது. வரவேண்டிய தொகை ஏதாவது நிலுவையில் இருக்கிறதா. நல்ல வேலையில் சேர்ந்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமா. வியாபாரத்தில் லாபம் வேண்டுமா. அடமான நகையை மீட்க வேண்டுமா. பிள்ளை திருமணத்திற்கு பணம் தேவையா.
இப்படி உங்களுக்கு என்ன தேவையோ அந்த தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டும் வேண்டுதலை வைத்து, இந்த ஒரு ரூபாயை அப்படியே பீரோவில் வைத்து பாருங்கள். உங்கள் வீட்டில் வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். கருப்பு நிற மார்கரிலே இந்த வரைபடத்தை நீங்கள், ஒரு ரூபாய் நாணயத்தில் வரையலாம்.
இதையும் படிக்கலாமே: தரித்திரம் நீங்க
இந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இந்த சக்தி வாய்ந்த நாளில் செய்யும் போது தான் அதனுடைய வேலை படுவேகமாக இருக்கும். நாளும் கோளும் செய்வது போல, நல்லவர்கள் கூட செய்ய மாட்டார்கள் என்று சொல்லுவார்கள். இந்த நாளையும் இந்த பரிகாரத்தையும் நீங்கள் பயன்படுத்தி வெற்றியடைய வேண்டும் என்று பிரார்த்தனை வைத்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.