வேலை செய்யும் இடத்தில், அடுத்தவர்களோடு உங்களால் போட்டி போட்டு ஜெயிக்க முடியவில்லையா, படிக்கும் மாணவர்களாக இருந்தால், அடுத்த மாணவர்களோடு போட்டி போட்டு படிப்பில் முதன்மை இடத்தை பிடிக்க முடியவில்லையா, போராட்டமான வாழ்க்கையில் போட்டி போட்டு ஜெயிக்க முடியவில்லையா, இப்படி எந்த விஷயத்தில் உங்களால் ஜெயிக்க முடியாமல் போனாலும் சரி, இந்த பரிகாரத்தை தொடர்ந்து 48 நாள் விநாயகப் பெருமானை நினைத்து செய்து பாருங்கள்.
பிறகு வாழ்க்கையில் நீங்கள் ஜெயித்துக் கொண்டே இருப்பீர்கள். எதிரிகள் முன்பு நிற்பதற்கு பயப்படுபவர்கள் கூட, அந்த எதிரிகளோடு பேசி போராடி வெற்றி காணும் அளவிற்கு துணிச்சலானவர்களாக மாறுவீர்கள். உடனடியாக துணிச்சலை கொடுக்கக்கூடிய ஒரு பரிகாரத்தைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலைத்தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். ஆக மொத்தத்தில் கோழையாக இருக்கும் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்தால் தைரியசாலியாக துணிச்சலானவர்களாக மாறிவிடுவீர்கள்.
தைரியம் தரும் விநாயகர் பரிகாரம்
விநாயகரை கும்பிட்டால் போதும். உங்களுக்கு யானை பலம் வந்துவிடும். அந்த விநாயகரின் தும்பிக்கை, உங்களுக்கு நம்பிக்கையை கொடுத்து விடும். இது மார்கழி மாதம். இறைவழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதம். எத்தனை முறை சொன்னாலும் அது மாறாது. இந்த மாதத்தில் நீங்கள் செய்யக்கூடிய பரிகாரம் உங்களுக்கு பல மடங்கு பலனை வாரி வழங்கிக் கொண்டே தான் இருக்கும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.
தும்பிக்கை நாயகனான நம்பிக்கை நாயகனான விநாயகருக்கு இரண்டு அருகம்புல் வையுங்கள். 1 டம்ளர் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஏலக்காயை இடித்து போடவும். 2 துண்டு பனங்கற்கண்டுகளை போட்டு விநாயகருக்கு நெய்வேதியம் போல படைத்து விடுங்கள். துணிச்சலை கொடு விநாயகா என்று மனம் உருகி வேண்டிக்கொண்டு, கண்களை மூடி அமர்ந்து விநாயகரை நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
உங்களுக்குள் விநாயகரது சக்தி நுழைவதாக மானசீகமாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த யானை பலம் இப்போது உங்களுக்கு வந்துவிட்டது. யாரை கண்டும் நீங்கள் இப்போது பயப்பட மாட்டீர்கள். இந்த நாள் உங்களோடு துணையாக விநாயகர் இருப்பான் என்று நம்பி உங்கள் முன்னால் இருக்கும் அந்த தண்ணீரை எடுத்து குடித்து விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம். தொடர்ந்து இதை 48 நாள் செய்து பாருங்கள். பிறகு உங்கள் வாழ்வில் கோழைத்தனம் என்ற பேச்சுக்கு இடமே இருக்காது.
உங்களிடம் பேசுபவர்களோடு போட்டி போட்டு ஜெயிக்க வேண்டும் என்றால், விநாயகரை இப்படி கும்பிடுங்கள். உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை நீக்கும் அடுத்தவர்களிடம் எல்லா விஷயத்திலும் விவாதம் பண்ணி ஜெயிக்க கூடிய அளவுக்கு திறமையும் வளரும்.
இதையும் படிக்கலாமே: மார்கழி சனி மகா பிரதோஷ வழிபாடு
இவ்வளவுதாங்க பரிகாரம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த மார்கழி மாதத்தில் இந்த பரிகாரத்தை துவங்கி, தொடர்ந்து 48 நாள் செய்து பாருங்கள். பிரம்ம முகூர்த்த நேரத்தில் இதை உங்களால் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, மாலை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த வழிபாட்டை செய்யலாம். வாழ்வில் வரும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். நம்பிக்கை நாயகன் விநாயகனை நம்பியவர்கள் யாரும் கைவிட பட்டது இல்லை என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.