பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு தான் அந்த பிரச்சினையால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பது தெரியும். வெளியில் இருப்பவர்களுக்கு அந்த பிரச்சனை மிகவும் சாதாரண பிரச்சினையாக இருக்கும். ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்கு தான் அதனுடைய கொடூரம் என்பது தெரியும். அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். ஒன்றோ இரண்டோ அவரவர்களுடைய கர்மவினைகளுக்கு ஏற்றார் போல் பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கும். அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு தாந்திர பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மார்கழி வெள்ளிக்கிழமை பரிகாரம்
மகாலட்சுமி தாயாருக்கு உரிய கிழமையாக திகழ்வதுதான் வெள்ளிக்கிழமை. அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்யக்கூடிய பரிகாரம் வீட்டில் இருக்கக் கூடிய தரித்திரத்தை நீக்கி மகாலட்சுமி தாயாரை வர வைக்கும் என்று கூட கூறலாம். மேலும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்தமான கிழமையாகவே கருதப்படுகிறது. அதனால் இந்த நாளை தவறவிடாமல் நாம் இந்த ஒரு எளிமையான நிலை வாசல் பரிகாரத்தை செய்யும் பொழுது மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்குள் எழுந்தருளி நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார்.
இந்த பரிகாரத்திற்கென்று நமக்கு சில பொருட்கள் தேவைப்படும். அவை அனைத்துமே மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்திய பொருட்களாகவே திகழ்கிறது. முதலாவதாக கல்லுப்பு, இரண்டாவதாக கிராம்பு, மூன்றாவதாக நெய், நான்காவது பச்சை கற்பூரம். இவை அனைத்துமே மகாலட்சுமி தாயாரின் அம்சம் என்று கூறப்படுகிறது. இவற்றை யார் ஒருவர் அவருடைய வீட்டில் நிரந்தரமாக வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று கூறலாம். சரி இப்பொழுது பரிகாரத்தை பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை வீட்டிற்குள் செய்யக்கூடாது. வீட்டு நிலை வாசல் படியில் நடுவில் தான் செய்ய வேண்டும். நிலை வாசலில் தான் அஷ்ட லட்சுமிகளும் குடியிருக்கிறார்கள். மேலும் குலதெய்வம் குடியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் அந்த இடத்தில் நாம் செய்யும் பொழுது நம் வீட்டில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தரித்திரமாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்குவதோடு அஷ்டலட்சுமி மற்றும் குலதெய்வம் வீட்டிற்குள் வருவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.
ஒரு சிறிய அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிறைய கல்லுப்பை பரப்பிக் கொள்ளுங்கள். அந்த கல்லுப்பை சுற்றி 7 கிராம்புகளை வைத்துக் கொள்ளுங்கள். அந்த கிராம்புகள் உடையது நல்ல கிராம்புகளாக இருக்க வேண்டும். அதற்கு நடுவே ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி, அதற்கு மேல் இரண்டு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து அதை ஏற்று விட வேண்டும். எவ்வளவு நேரம் வரை எரிகிறதோ அவ்வளவு நேரம் வரை எரியட்டும் என்று விட்டுவிடுங்கள்.
அது எரிந்து முடித்து பிறகு மறுநாள் காலையில் மீதம் இருக்கக்கூடிய பொருட்களை ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். இந்த முறையில் நாம் வெள்ளிக்கிழமை அன்று இரவு பச்சை கற்பூரத்தை வைத்து எரிப்பதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்களும், பிரச்சனைகளும், துன்பங்களும், துயரங்களும் படிப்படியாக விலகும் என்றும் மகாலட்சுமி மற்றும் குலதெய்வம் இவர்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:மார்கழி சனி மகா பிரதோஷ வழிபாடு
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்த ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை முழுமனதுடன் செய்து வழிபாடு செய்பவர்களுக்கு அந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக விலகும். விருப்பம் இருப்பவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவிலே நிறைவு செய்து கொள்கிறோம்.