- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரச்சினைகளை தீர்க்கும் வாழைப்பழ பரிகாரம்

பிரச்சினைகளை தீர்க்கும் வாழைப்பழ பரிகாரம்

- Advertisement -

வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீரவேண்டும் என்பதற்காக ஓடி உழைத்துக் கொண்டு இருக்கும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் தங்களுடைய பிரச்சினைகள் தீராதா என்றுதான் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அது உழைப்பால் தீர்ந்தாலும் சரி, வழிபாட்டால் தீர்ந்தாலும் சரி, பரிகாரத்தில் தீர்ந்தாலும் சரி பிரச்சனைகள் தீர வேண்டும் அதை மட்டும் நினைத்துக் கொண்டுதான் அவர்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்வதற்கு சனிமகா பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வாழைப்பழ பரிகாரம்

பிரதோஷம் என்றாலே நம்முடைய தோஷங்களை நீக்கக்கூடிய ஒரு நாள் என்று பொருள்படும். அந்த நாளில் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது அனைத்து விதமான தேவர்கள் மற்றும் தெய்வங்களை வழிபாடு செய்வதற்குரிய பலன் கிடைக்கும் என்றும் அவர்களின் அருள் ஆசி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரம்.

- Advertisement -

பிரதோஷ நாளன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து சிவபெருமானை மனதார வழிபாடு செய்து அன்றைய தினத்தில் விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் சிவ சிவ என்னும் மந்திரத்தை மனதிற்குள் கூறிக்கொண்டு இருக்க வேண்டும். அதேபோல் ஓம் நற்பதி என்னும் மந்திரத்தையும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி பிரதோஷ நாளில் இந்த மந்திரத்தை நாம் கூறும்பொழுது சிவ சக்தியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

முடிந்த அளவிற்கு அன்றைய தினம் திரவ ஆகாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு திட ஆகாரத்தை தவிர்ப்பது நல்லது. மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் இருக்கக்கூடிய பிரதோஷ நேரத்தில் நான்கு வாழைப்பழங்களை கையில் வைத்துக் கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் நமசிவாய நம நம சிவாய சிவாய நம ஓம்”

“ஓம் நற்பவி நற்பவி”

- Advertisement -

இந்த இரண்டு மந்திரங்களையும் 108 முறை கூறி முடித்த பிறகு சிவபெருமானை முழுமனதோடு வழிபாடு செய்து விட்டு இந்த மஞ்சள் வாழைப்பழத்தை அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு தரவேண்டும். பசுமாட்டில் அனைத்து தெய்வங்களும் வீற்றிருக்கிறார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

பிரதோஷ நேரத்தில் அனைத்து தெய்வங்களும் சிவபெருமானை வழிபாடு செய்கிறார்கள் என்பதும் நமக்கு தெரியும். அதனால் பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் பார்வதிக்குரிய மந்திரத்தை உச்சரித்துவிட்டு அதை பசு மாட்டிற்கு நாம் தானமாக தரும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும். அதன் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகளும் தீரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:பூர்வ ஜென்ம பாவம் நீங்க சனி பிரதோஷ வழிபாடு
முழு மனதோடு நாம் செய்யக்கூடிய எந்த வழிப்பாடாக இருந்தாலும் பரிகாரமாக இருந்தாலும் அதற்குரிய பலன் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும் முழு மனதோடு இந்த பரிகாரத்தை செய்து பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்