- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபூர்வ ஜென்ம பாவம் நீங்க சனி பிரதோஷ வழிபாடு

பூர்வ ஜென்ம பாவம் நீங்க சனி பிரதோஷ வழிபாடு

- Advertisement -

மார்கழி மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரிய மாதம். அந்த மாதத்தில் தெய்வ வழிபாடு மேற்கொள்வது என்பது அதீத பலனைத் தரும் என்று நம் அனைவருக்குமே தெரியும். மார்கழி மாதம் எப்படி பெருமாளுக்கு உகந்த மாதமோ, பெருமாளுக்கு உரிய விசேஷமான நாட்கள் வரக்கூடிய மாதமோ, அதேபோல்தான் சிவபெருமானுக்குரிய ஆருத்ரா தரிசனம் நடைபெறக்கூடிய மாதமும் மார்கழி மாதமாக தான் திகழ்கிறது. அப்படிப்பட்ட மார்கழி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷமானது சனி மகா பிரதோஷமாக வருகிறது. அன்றைய நாளில் நம்முடைய பூர்வ ஜென்ம பாவத்தை நீக்க செய்ய வேண்டிய வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

சனி பிரதோஷ வழிபாடு

சிவபெருமானுக்கு உரிய விரத தினமாக கருதப்படுவது பிரதோஷம். இது மாதத்தில் இரண்டு முறை வரும். வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷம் என்று. அந்த பிரதோஷங்களை யார் ஒருவர் முழுமையாக விரதம் இருந்து கடைப்பிடிக்கிறார்களோ அவர்களுக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு வருடம் முழுவதும் தொடர்ச்சியாக விரதம் இருப்பதன் பலனை முழுமையாக பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சனி மகா பிரதோஷ நாளின் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வரக்கூடிய சனி மஹா பிரதோஷம் என்பது மார்கழி மாதத்தில் வருகிறது. அன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய வழிபாடு மற்றும் வழிமுறையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாக பிரதோஷ தினத்தில் பலரும் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அன்றைய தினம் உபவாசம் இருந்து மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்வார்கள் என்று நம் அனைவருக்குமே தெரியும். இன்னும் சிலரோ பிரதோஷ நேரத்தில் வீட்டில் இருக்கக் கூடிய சிவலிங்கத்திற்கும் நந்தி தேவருக்கும் அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு செய்வார்கள். ஒவ்வொருவரும் அவர்களுடைய உடல் சூழ்நிலைக்கேற்றவாறு விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இப்படி வழிபாடு செய்வதோடு இன்னும் சில விஷயங்களை நாம் சேர்த்து செய்யும் பொழுது நமக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பிரதோஷ நேரத்தில் நடக்கக்கூடிய அபிஷேகத்திற்கு தங்களால் இயன்ற பொருட்களை வாங்கி தருவார்கள். அதிலும் சனி மகா பிரதோஷத்தில் பால் வாங்கித் தருவதன் மூலம் அவர்களுக்கு சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு இன்னும் மூன்று பொருட்கள் இருக்கின்றன. இந்த மூன்று பொருட்களில் ஏதாவது ஒரு பொருளை மட்டுமாவது நம்மால் இயன்ற அளவு வாங்கித் தருவதன் மூலம் நம்முடைய பூர்வ ஜென்மக் கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அவை தான் வில்வ இலை. சிவபெருமானுக்குரிய இலைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் வில்வ இலை. தங்களால் இயன்ற அளவு வில்வ இலைகளை வாங்கி சிவபெருமானுக்கு சனி மகா பிரதோஷ தினத்தில் தர வேண்டும். அல்லது சிவபெருமானுக்குரிய விபூதியை வாங்கித் தர வேண்டும். அல்லது வலம்புரி சங்கை வாங்கி தர வேண்டும். இந்த மூன்றில் இயன்றவர்கள் இந்த மூன்றையுமே தரலாம். இயலாதவர்கள் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது சனி மகா பிரதோஷ தினத்தில் சிவபெருமான் ஆலயத்திற்கு வாங்கிக் கொண்டு போய் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கிவிட்டால் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது உறுதி.

இதையும் படிக்கலாமே:ஈசன் பாதத்தில் இடம் கிடைக்க சனி மஹா பிரதோஷ பரிகாரம்

நம் வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை சிவபெருமானை முழுமனதோடு சரணாகதி அடைந்து இந்த பொருட்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்