- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஹனுமனை வீடு தேடி வர வைக்கும் மந்திரம்

ஹனுமனை வீடு தேடி வர வைக்கும் மந்திரம்

- Advertisement -

மார்கழி மாதம் வரும் மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தியானது கொண்டாடப்படுகிறது. இந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி வரும் திங்கட்கிழமை, அமாவாசை திதியில் மூல நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாளில் நம்முடைய வீட்டில் எளிமையாக அனுமன் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது, என்பதை பற்றி ஆன்மீகம் சார்ந்த தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

ஹனுமன் ஜெயந்தி 2024

ஹனுமனை வர வைக்கக்கூடிய மந்திரம் என்றால், அது நாம் எல்லோருக்குமே தெரியும். ராம ஜபம். நம் வீட்டு பூஜை அறையில் எழுத வேண்டிய மந்திர வார்த்தை ‘ஸ்ரீ ராம ஜெயம்’. ஸ்ரீ ராம ஜெயம் சொல்லக்கூடிய இடத்தில் அனுமன் வந்து அமர்ந்து கொள்வார். இதை நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தானே. இதை அனுமன் ஜெயந்தி அன்று நம்முடைய வீட்டில் முறையாக எப்படி சொல்லுவது. எப்படி எழுதி வைத்து, எந்த மாலையை போட்டு ஹனுமனை வழிபாடு செய்தால், நம் வேண்டிய வரங்களை பெறலாம் அதைப் பற்றிய விரிவான தகவலை தான் இப்போது பார்க்க போகின்றோம்.

- Advertisement -

ஒரு தாம்பூல தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தமான அரிசி மாவால் அந்த தட்டில் “ஸ்ரீ ராம ஜெயம்” என்று எழுத வேண்டும். நீளமாக எழுத முடியவில்லை என்றால், ஸ்ரீ எழுதி கீழே, ராம எழுதலாம். அதற்கு கீழே ஜெயம் என்று ஒவ்வொரு வார்த்தைகளுக்கு கீழே மூன்று வார்த்தைகளாக பிரித்தும் ஒரு சின்ன தாம்பல தட்டில் இந்த மந்திரத்தை எழுதி விடுங்கள். அதன் நடுவே மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பூஜை அறையில் வைத்து விடுங்கள். வழக்கம் போல வீட்டில் இருக்கும் விளக்குகளை எல்லாம் ஏற்றி வைத்து விடுங்கள்.

வெற்றிலை மாலை, ஏலக்காய் மாலை இரண்டில் எந்த மாலையை போட்டாலும் தவறு கிடையாது. இரண்டுக்கும் அதீத சக்தி உண்டு. 27 வெற்றிலை, 27 ஏலக்காய்களை எடுத்துக் கொள்ளவும். வெற்றிலை மாலையை தனியாக கட்டிக் கொள்ளுங்கள். ஏலக்காய் மாலைகளை தனியாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த இரண்டு மாலையையும் அந்த ஸ்ரீராம ஜெயம் எழுதி வைத்திருக்கும் தட்டுக்கு மேலே போடலாம். அந்த ஆஞ்சநேயர் கழுத்தில் இந்த மாலை விழுந்ததற்கு சமம்.

- Advertisement -

பிறகு பூஜையறையில் அமர்ந்து “ஸ்ரீ ராம ஜெயம்” மந்திரத்தை 108 முறை உச்சரித்து உங்களுடைய கோரிக்கைகளை எல்லாம் அந்த ஹனுமன் பாதத்தில் இறக்கி வைத்து பாருங்கள். உங்களுக்குள் அந்த ஹனுமன் பலம் வந்துவிடும். வீட்டில் இருக்கும் தீராத கஷ்டங்கள் துன்பங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகி விடும்.

எதை நினைத்து இந்த பூஜையை நீங்கள் செய்தீர்களோ, அதற்கு உண்டான பலனை அனுமன் உடனே கொடுத்து விடுவார், காரணம் ஸ்ரீ ராம ஜெயம் உச்சரிக்க கூடிய இடத்திற்கு அனுமன் கட்டாயம் வருவார். வராமல் இருக்கவே மாட்டார். ராமர் போரில் வெற்றி பெற்றதற்கு முதல் காரணமாக திகழ்ந்தவர் இந்த ஹனுமன். ஹனுமன் சிவபெருமானின் சொரூபம் என்றும் சொல்லப்படுகிறது. கஷ்டங்கள் தீர இந்த வழிபாட்டை யாரும் தவற விடாதீர்கள்.

- Advertisement -

வீட்டில் இருந்தே வழிபாடு செய்பவர்கள், இதை செய்யலாம். உங்களால் கோவிலுக்கு போக முடியும் என்றால் வெற்றிலை மாலை ஏலக்காய் மாலைகளை கட்டி கோவிலுக்கு சென்றும் அனுமனுக்கு சாத்தலாம். ரொம்ப ரொம்ப நல்லது. சரி, வீட்டில் அனுமனுக்கு சாத்திய இந்த வெற்றிலையையும், ஏலக்காயையும் என்ன செய்வது, வீணடிக்கக்கூடாது. அடுத்த நாள் அந்த மாலைகளை எடுத்து வெற்றிலை பாக்கு தரிப்பவர்கள் போட்டுக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பூர்வ ஜென்ம பாவம் நீங்க சனி பிரதோஷ வழிபாடு

அப்படி இல்லை என்றால் பசு மாட்டிற்கு ஆடுகளுக்கு கொடுக்கலாம். ஏலக்காய்களை எடுத்து இனிப்பு பலகாரங்கள் செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறு கிடையாது. அதை பிரசாதமாக உண்ணுவது நல்லது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த எளிமையான ஆன்மீக பரிகாரம் நல்ல பலனை தரும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்