- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுழு நிலவு போல் பிரகாசமான முகத்தை பெற

முழு நிலவு போல் பிரகாசமான முகத்தை பெற

- Advertisement -

சிறுவயதில் நன்றாக நிறமாக இருந்தவர்கள் வளர வளர அவர்களுடைய நிறம் மங்கி கருமை தோற்றத்தை பெறுவார்கள். அதோடு மட்டுமல்லாமல் இன்னும் சிலரோ காலையில் வீட்டை விட்டு கிளம்பும்போது நன்றாக இருப்பார்கள், மாலை வீடு திரும்பும் பொழுது கருமை அடைந்த முகத்துடன் வருவார்கள். இப்படி கருமை நிறம் படர்ந்த முகத்தை பொலிவுடன் மாற்றுவதற்கு உருளைக்கிழங்கும் தக்காளியும் இருந்தாலே போதும். இந்த உருளைக்கிழங்கையும் தக்காளியையும் எப்படி பயன்படுத்தி முகப்பொலிவை பெறலாம் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பிரகாசமான முகத்தை பெற

நம்முடைய முகம் பொலிவாக திகழ வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். எவ்வளவு தான் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தாலும் முகம் பொலிவுடன் திகழ வேண்டும் என்றும் தான் நினைப்போம். அப்படி முகப்பொலிவை பெறுவதற்கு நம்முடைய வீட்டு சமையலறையில் இருக்கக்கூடிய தக்காளி உருளைக்கிழங்கு இருந்தாலே போதும். இறந்த செல்கள் அனைத்தையும் நீக்கி நீக்குவதோடு கருமை நிறத்தையும் போக்கி முகத்தை பொலிவுடன் பிரகாசமாகவும் மாற்றும்.

- Advertisement -

இதற்கு முதலில் ஒரு பாதி தக்காளியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் சர்க்கரையை தூவி நம்முடைய முகத்தில் நன்றாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்த பிறகு பத்து நிமிடம் இதை அப்படியே வைத்திருங்கள். பிறகு முகத்தை கழுவி விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதை பாதியாக நறுக்கி அதிலும் சர்க்கரையை மேலே தூவி அதையும் முகத்தில் ஸ்கிரப் செய்வது போல் நன்றாக வட்ட வடிவில் தேய்த்துக் கொள்ளுங்கள். இதையும் 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு முகத்தை கழுவி விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருத்திட்டுகள், கரும்புள்ளிகள்,கருமை போன்றவை நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அடுத்ததாக ஒரு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு, ஒரு ஸ்பூன் அளவுக்கு கடலை மாவு, ஒரு ஸ்பூன் அளவுக்கு தயிர், ஒரு ஸ்பூன் அளவுக்கு தக்காளி சாறு, ஒரு ஸ்பூன் அளவுக்கு உருளைக்கிழங்கு சாறு இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். தயிர் கெட்டியாக இருக்க வேண்டும். தண்ணியாக இருந்தால் நாம் தயார் செய்யக்கூடிய இந்த பேக்கும் தண்ணியாக மாறிவிடும். ஒரு வேலை பேக் தண்ணியாக ஆகிவிட்டால் அதில் அரிசி மாவையும் கடலைமாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது இவை அனைத்தையும் நன்றாக கலந்து நம்முடைய முகத்தில் தடவி 15 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் முகம் பொலிவுடன் திகழும். முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களும், கருமையும் நீங்குவதோடு, முகப்பொலிவையும், முகநிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஒருமுறை செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:இளமையான பொலிவான சருமத்தை பெற உதவும் பீட்ரூட்

வீட்டில் இருக்கக் கூடிய இந்த பொருட்களை வைத்து நாம் இழந்த நிறத்தை திரும்பப் பெறுவதோடு முகப்பொலிவையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்