- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval01-01-2025 அபிஜித் நட்சத்திர நேரம்

01-01-2025 அபிஜித் நட்சத்திர நேரம்

- Advertisement -

வருடத்தின் 12 மாதமும் இந்த அபிஜித் நட்சத்திர நேரம் வரும். இருந்தாலும் ஜனவரி 1ஆம் தேதி, மார்கழி மாதத்தில் புதன்கிழமை அன்று இந்த வருடம் அபிஜித் நட்சத்திரம் வந்திருப்பது கூடுதல் சிறப்பு. ஜனவரி முதல் தேதி குறிப்பிட்ட இந்த 24 நிமிடத்தில், அந்த கிருஷ்ண பரமாத்மாவிடம் நீங்கள் என்ன வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும்.

நிறைய பேர் புது வருடத்திலிருந்து, புது உறுதிமொழிகளை எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் எடுத்த உறுதி மொழியில், கடைசி வரை மாறாமல் இருக்க வேண்டும் என்றால், இந்த 24 நிமிடத்தில் இறைவனிடம் பிரார்த்தனை வையுங்கள். ஏதாவது ஒரு வேண்டுகோளாக வையுங்கள். நிச்சயம் நீங்கள் வைத்த பிரார்த்தனை உடனடியாக பலிக்கும். எடுக்கும் குறிக்கோளிலும் உறுதியாக இருப்பீர்கள்.

- Advertisement -

புது வருடம் பிறக்கப் போகும் நேரத்தில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதிரியான உறுதிமொழிகளை எடுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இப்போது என்ன தேவை வாழ்க்கையில், எது முதல் தேவையாக இருக்கிறது. அந்த தேவையை இந்த நேரத்தில் இறைவனிடம் சொல்லுங்கள். நிச்சயம் நீங்கள் கேட்டதை மறுக்காமல் அந்த இறைவன் சீக்கிரமாக கொடுப்பார். அபிஜித் முகர்ந்த நேரம் நாளைய தினம் எப்போது வருகிறது என்று தெரிந்து கொள்வோமா.

01-01-2025ஆம் தேதி புதன்கிழமை இரவு 11:34PM மணி முதல் 11:59PM மணி வரை இருக்கிறது. இரவு நேரத்தில் தான் இந்த அபிஜித் முகூர்த்த நேரம் ஆனது வந்திருக்கிறது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் தான் வழிபாட்டையும் வேண்டுதலையும் இறைவனிடம் வைக்க வேண்டும். 27 நட்சத்திரங்களில் வரிசையில் 28 வது நட்சத்திரமாக இருப்பது அபிஜித் நட்சத்திரம்.

- Advertisement -

இந்த நேரத்தை கலியுகத்தில் மக்கள் தவறாக பயன்படுத்தி விடுவார்கள் என்ற காரணத்தால், முருகப்பெருமான் இந்த நட்சத்திரத்தை தன்னுடைய மயில் இறகில் ஒலித்து வைத்ததாக நம்முடைய சாஸ்திரம் சொல்லி வைத்துள்ளது. அப்பேற்பட்ட அதிசயத்தக்க இந்த அபிஜித் நட்சத்திரம் நேரத்தில் கிருஷ்ண பரமாத்மாவை நினைத்து பூஜை அறையில் 2 மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்கவும்.

அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து உங்களுடைய ஒரே ஒரு கோரிக்கையை எம்பெருமானிடம் வையுங்கள்.  வேண்டுதல் நியாயமான கோரிக்கையாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை கெடுக்கும்படி எந்த வேண்டுதலையும் வைக்கக்கூடாது. இந்த அபிஜித் முகூர்த்த நேரத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு பிறகு, புண்ணிய காரியங்களை செய்தால் சீக்கிரம் உங்களுடைய வேண்டுதல் பலிக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

ஜனவரி 2ஆம் தேதி, இரண்டு பேருக்கு சாப்பாடு வாங்கித் தரலாம் அல்லது ஆசிரமங்களுக்கு அன்னதானம் செய்யலாம். உங்கள் நிதி நிலைமையை பொருத்து நல்லது செய்யுங்கள். இந்த அபிஜித் முகூர்த்த நேரத்தில் வேண்டுதலை வைத்த பின்பு படிக்க வேண்டிய ஒரு அபிஜித் மந்திரமும் இருக்கிறது. அதையும் இந்த ஆன்மீகம் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் .

அபிஜித் ஸ்துதி

ஆகமாந்துதீர அபஜிதாம்பர நட்சத்ராணாம்
நாததீய ஜோதீனாம் நளகங்காதர பவதாரண
சிவச்ய விஷ்ணு மேய்தீனாம் பவதாவலம்சுத
பரிபாலய சரணாகத பாஹிமாம்!

இதையும் படிக்கலாமே: 2025 முதல் நாள் வாங்க வேண்டிய பொருள்

வேண்டுதலை இறைவனிடம் சொல்லிவிட்டு இறுதியாக இந்த மந்திரத்தை 27 முறை சொல்லி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். அந்த கிருஷ்ண பரமாத்மா நிச்சயம் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பார். தமிழ் புத்தாண்டு மார்கழி மாதத்தில் வந்திருக்கக்கூடிய இவ்வளவு அற்புதம் வாய்ந்து அபிஜித் முகூர்த்த நேரத்தில் யாரும் தவற விடாதீங்க நல்லதே நடக்கும். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சற்று முன்