- Advertisement -

தேவதை நாள் வழிபாடு

- Advertisement -

நல்ல செயல்களை மட்டுமே நினைக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் நம்மை சுற்றி நல்ல தேவதைகள் உலாவிக்கொண்டு இருப்பார்கள், அவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சதாப்தூ என்று கூறுவார்கள். அப்படி கூறும்பொழுது நாம் என்ன நினைத்திருக்கிறோமோ அது அப்படியே நடக்கும். எந்த நேரத்தில் கூறுவார்களோ தெரியாது அதனால் எப்பொழுதுமே நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தேவதைகளைக்குரிய நாளாக திகழக்கூடிய நாள் தான் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி. இந்த நாளில் எந்த நேரத்தில் எப்படி வழிபாடு செய்தால் தேவதைகளின் அருளால் நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேவதை நாள் வழிபாடு

ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி என்பது தேவதை நாள் என்று கருதப்படுகிறது. அன்றைய நாளில் நள்ளிரவில் 1:00 மணியிலிருந்து 1:11 மணி வரையும், பகலில் 1:00 மணியில் இருந்து 1:11 மணி வரையும் தேவதை நேரமாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் இந்த பிரபஞ்சத்தால் கேட்கப்பட்டு தேவதைகளின் அருளால் அது அந்த மாதமே நடந்தேறும் என்றும் கூறப்படுகிறது. எந்த முறையில் எப்படி அந்த தேவதையை வழிபாடு செய்ய வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

மேல் சொன்ன இந்த குறிப்பிட்ட நேரத்தில் வீட்டில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பிரியாணி இலையில் நாம் என்ன வேண்டுதல் வைக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த வேண்டுதலை எழுத வேண்டும். ஒரே ஒரு வேண்டுதலாக தான் இருக்க வேண்டும். அதுவும் நியாயமான வேண்டுதலாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேண்டுதலை எழுதி வைத்த பிறகு கீழ்வரும் இந்த தேவதை வசிய மந்திரத்தை அந்த நேரம் முழுவதும் நாம் கூற வேண்டும். இயன்றவர்கள் அன்றைய நாள் முழுவதும் தங்களால் எத்தனை முறை கூற முடியுமோ அத்தனை முறை கூறலாம்.

எந்த அளவிற்கு இந்த தேவதை வசிய மந்திரத்தை நாம் கூறுகிறோமோ அந்த அளவிற்கு அந்த தேவதையின் அருளால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இப்படி மந்திரத்தை தங்களால் இயன்ற அளவு அந்த குறிப்பிட்ட நேரத்தில் கூறி முடித்த பிறகு அந்த அகல் விளக்கில் நாம் எழுதி வைத்திருக்கும் பிரியாணி இலையை எரித்து விட வேண்டும். எரித்த பிரியாணி இலையின் சாம்பலை கால்படாத இடத்திலோ அல்லது செடிகளிலோ அல்லது ஓடுகின்ற தண்ணீரிலோ போட்டு விட வேண்டும். ஓடுகின்ற தண்ணீரில் போடும் பொழுது அது சுத்தமான தண்ணீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் சகல தேவத வசிய வசிய
சகலதோஷ நிவர்த்தியர்தம்
நவசக்தி காளி சக்தி ப்ராதர்தம்”

- Advertisement -

“ஓம் சகல தேவத வசிய வசிய
சகலதோஷ நிவர்த்தியர்தம்
சகல காரிய ப்ராதர்தம்”

இதையும் படிக்கலாமே:01-01-2025 அபிஜித் நட்சத்திர நேரம்

இந்த எளிமையான தேவதை வசிய மந்திரத்தை தேவதை நாளான ஜனவரி ஒன்றாம் தேதி முழு மனதோடு கூறுபவர்களுக்கு தேவதைகளின் அருளால் அவர்கள் வேண்டியது விரைவிலேயே நடக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்