- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணத்தை ஈர்க்கும் 1 ரூபாய் பரிகாரம் 2025

பணத்தை ஈர்க்கும் 1 ரூபாய் பரிகாரம் 2025

- Advertisement -

இன்று 1.1.2025 புது வருடம் பிறந்து விட்டது. இந்த நாளிலிருந்து நம்முடைய வருமானம் பல மடங்கு பெருக வேண்டும். இந்த வருடம் முழுவதும் செல்வ வளத்தில் உயர்ந்து நிற்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளும் நம்மை தேடி வர வேண்டும். நல்லதே நடக்க வேண்டும் என்று மனம் உருக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு முழு நம்பிக்கையோடு இந்த பதிவில் பயணம் செய்வோம்.

இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் ஒவ்வொரு நாளும் நம் வீட்டிற்குள் பணம் வந்து கொண்டே இருக்கப் போகிறது, நாமும் பணக்காரராக போகின்றோம், தேவைக்கு அதிகமாக பீரோவில் பணத்தை அடுக்கி வைக்க போகின்றோம். இன்றிலிருந்து பணத்திற்கு நாம் கஷ்டப்பட போவது கிடையாது என்று பாசிட்டிவ் ஆக அத்தனை விஷயங்களையும் நினைத்துக் கொண்டு, இந்த பரிகாரத்தை செய்வோம். நிச்சயம் நாம் நினைத்தபடி நம் கைக்கு பணம் வந்து சேரும். ஒவ்வொரு ரூபாயும் இலட்சம் அல்ல, கோடி கணக்கில் பெருகும். அது என்ன பரிகாரம் ஆன்மீகம் சார்ந்த பதிவினை இந்த நன்னாளில் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

புத்தாண்டு ஒரு ரூபாய் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு ரூபாய் நாணயம் தேவை. கொஞ்சமாக பட்டை, லவங்கம், ஏலக்காய் மூன்றையும் அரைத்த பொடி தேவை. இது மூன்று பொருட்களும் பணத்தை ஈர்க்கக்கூடிய வசிய தன்மை கொண்டது. மூன்று பொருட்களையும் சம அளவில் மிச்சியில் போட்டு அரைத்தாலே ஒரு பொடி உங்களுக்கு கிடைத்துவிடும் அந்த பொடியை பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம்.

இன்று அபிஜித் நட்சத்திர நேரமும் நமக்கு சேர்ந்து இருக்கிறது. முடிந்தவர்கள் இந்த பரிகாரத்தை அபிஜித் நட்சத்திர நேரத்திலும் செய்யலாம். வாய்ப்பு உள்ளவர்கள் அபிஜித் நட்சத்திர நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சரி முதலில் பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்த்து விடுவோம்.

- Advertisement -

முதலில் ஒரு ரூபாயையும், அந்த தயார் செய்து வைத்திருக்கும் வாசனை நிறைந்த வசிய பொடியையும் கையில் எடுத்துக் கொண்டு, நிலை வாசலுக்கு வெளியே போய் விடுங்கள். உங்கள் வீட்டிற்கு உள் பக்கம் பார்த்தபடி நின்று கொள்ளுங்கள்.  உள்ளங்கைகளில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டு அதன் மேலே தயார் செய்த பொடியை வைத்துக் கொண்டு, 11 முறை “I am a money magnet” என்ற வார்த்தையை சொல்லிவிட்டு, இந்த பொடியை அப்படியே உங்கள் வீட்டிற்குள் ஊதி விட வேண்டும்.

ஒரு ரூபாய் நாணயத்தில் இருக்கும் அந்த பொடி அப்படியே உங்கள் வீட்டிற்குள் பறந்து வரும். இவ்வளவுதான் பரிகாரம். இந்த பொடி எப்படி உங்கள் வீட்டிற்குள் பறந்து வருகிறதோ, அதுபோல நீங்களும் பணத்தை ஈர்த்து உங்களுடைய வீட்டிற்குள் வைத்துக் கொள்வீர்கள். அதற்காக செய்யப்படக்கூடிய பரிகாரம் தான் இது. பரிகாரத்தை செய்யும் போது அந்த மந்திர வார்த்தையை சொல்லும்போது பரிகாரத்திற்கு இரட்டிப்பு மடங்கு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கையில் வைத்திருக்கும் ஒரு ரூபாயை அப்படியே பூஜை அறைக்கு கொண்டு வந்து, தேவையான பிரார்த்தனைகளை எல்லாம் வைத்து அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பீரோவில் வைக்கலாம். பூஜையறையில் வைக்கலாம். பணம் வைக்கும் பரிசில் வைக்கலாம். 48 நாட்களுக்கு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை செலவு செய்யாமல் வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அந்த காசை கோவிலில் உண்டியலில் சேர்ப்பது சிறப்பு.

இதையும் படிக்கலாமே: 2025ல் செய்ய வேண்டிய முருகன் வழிபாடு

இன்று 01-01-2025 ஆம் தேதி புதன்கிழமை இரவு 11:34PM மணி முதல் 11:59PM மணி வரை அபிஜித் நட்சத்திர நேரம் இருக்கிறது. மேலே சொன்ன பரிகாரத்தை இன்று எந்த நேரத்தில் செய்தாலும் தவறு கிடையாது. மாலை 6:00 மணிக்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களால் முடியும் என்றால் இன்று அபிஜித் நட்சத்திர நேரத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பரிகாரம் நிச்சயம் நிறைய பணத்தை கொண்டு வந்து சேர்க்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்