- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகச்சுருக்கம் நீங்கி இளமையான தோற்றத்தை பெற

முகச்சுருக்கம் நீங்கி இளமையான தோற்றத்தை பெற

- Advertisement -

ஒருவருக்கு வயதாகி விட்டது அல்லது இளம் வயதுக்காரராக இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய முக்கியமான ஒன்று அவர்களுடைய தோல் தான். தோலில் சுருக்கம் ஏற்படுவது என்பது வயது முதிர்ச்சியை காட்டும். இளமையாக இருப்பவர்களுக்கு தோல் சுருக்கம் என்பது ஏற்படாது. அதை வைத்தே வயதானவர்களா அல்லது இளமையானவர்களா என்பதை கண்டறிய முடியும். இது அன்றைய காலத்தில் நடந்தது. ஆனால் இன்றைய காலத்தில் பல கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்துவதன் மூலமாக இளம் வயதிலேயே பலருக்கும் முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. இந்த சுருக்கத்தை நீக்கி என்றும் இளமையாக இருப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முகச்சுருக்கம் நீங்கி

வயதானவர்கள் அவர்களுக்கு ஏற்படக்கூடிய முக சுருக்கத்தை நீக்கி முகத்தை இறுக செய்து இளமையுடனும் பொலிவுடன் திகழ வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கம் விழுந்து விட்டது என்று கவலைப்படுபவர்களுக்கும் இந்த ஒரு ஃபேஸ் பேக் வரப்பிரசாதமாக திகழும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் உபயோகப்படுத்தினால் போதும். இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்ய நாம் பெரிதும் சிரமப்பட வேண்டியது கிடையாது. சரி இந்த ஃபேஸ் பேக்கை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போமா?

- Advertisement -

இதற்கு ஆளி விதை இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். நைசான பொடியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு முல்தானி மெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். அதையும் ஒரு முறை மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றாக அரைத்தோம் என்றால் சரிசமமாக கலந்து விடும். பிறகு இதில் நம்முடைய முகத்திற்கு தேவையான அளவு பொடியை எடுத்துக் கொண்டு அதனுடன் ரோஸ் வாட்டர் என்று கூறப்படும் பன்னீரை ஊற்றி குழைத்துக் கொள்ளுங்கள்.

முகத்தில் தடவும் பதத்திற்கு இந்த விழுது இருக்க வேண்டும். இப்பொழுது இரவு படுக்க செல்வதற்கு முன்பாக முகத்தை சுத்தமான தண்ணீரை பயன்படுத்தி கழுவிக்கொள்ளுங்கள். பிறகு ஈரம் இல்லாமல் துடித்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த ஃபேஸ் பேக்கை உங்களுடைய முகத்திலும் கழுத்திலும் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இதை அப்படியே உலர விட்டு விடுங்கள். இது நன்றாக காய்ந்த பிறகு குளிந்த நீரினால் முகத்தை கழுவி விட வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை என்று செய்து வருவதன் மூலம் நம்முடைய முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்து இளமையான பொலிவான முகத்தை பெற முடியும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் போட்டு காய வைக்கும் பொழுது பேசக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:வழுக்கை தலையிலும் முடி வளர

எதற்கெடுத்தாலும் கடைக்கு சென்று கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த முறையில் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. மேலும் இதனால் ஏற்படக்கூடிய மாற்றம் என்பது நிரந்தரமாக நம்முடனேயே இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்