- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilவழுக்கை தலையிலும் முடி வளர

வழுக்கை தலையிலும் முடி வளர

- Advertisement -

இன்றைய தலைமுறையினருக்கு தலைமுடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முதல் காரணம் தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டம் சரியில்லாமல் இருப்பது தான். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டது. வியர்வை சிந்தி ஓடி ஆடி யாரும் வேலை செய்வது கிடையாது. இதனால் தலைப்பகுதிக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டமும் சீராக செல்வது தடைபடுகிறது.

நல்ல சத்துள்ள உணவு முறையும் இக்காலத்தில் குறைவு தான். வேகமாக நகரும் மனிதர்களும், துரித உணவுகளும் உடல் நலம் மட்டுமல்லாமல், முடி வளர்ச்சியையும் கடுமையாக பாதித்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீண்டு உங்களுடைய முடி அடர்த்தியாக காடு போல் வளர்வதற்கு என்ன செய்யலாம்? என்னும் அழகு குறிப்பு சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து காண இருக்கிறோம்.

- Advertisement -

ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவுகள், ஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவையான தண்ணீர் மற்றும் தூக்கம், உடற்பயிற்சி, மனப்பயிற்சி ஆகியவையும் முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இப்படி எந்த விஷயத்திலும் உங்களால் மாற்றத்தை கொண்டு வர முடியாவிட்டாலும், சின்ன சின்ன விஷயங்கள் மூலம் முடி வளர்ச்சியை சரி செய்ய முடியும்.

தலைமுடி உதிர்வதை தடுக்க வாரம் ஒரு முறை இந்த பேக் போடுங்கள். ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கற்றாழை மடலை எடுத்து சீவி உள்ளே இருக்கும் ஜெல் பகுதியை நன்கு அலசி கூழ் போல கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து வையுங்கள். நாலு சின்ன வெங்காயம், இரண்டு பல் பூண்டு சேர்த்து அரைத்து விழுதாக்கி இதனுடன் சேர்த்து கலந்து வையுங்கள்.

- Advertisement -

இந்த நான்கு பொருட்கள் சேர்த்த பேஸ்ட்டை கொண்டு தலைக்கு நன்கு பத்து நிமிடம் மசாஜ் போல செய்ய வேண்டும். வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்த பின்பு தலை முழுவதும் தடவி முடியை கொண்டை போல கட்டிக் கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு சாதாரணமாக எப்பொழுதும் போல ஷாம்பூ போட்டு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளியுங்கள். இது போல வாரம் ஒரு முறை செய்து வர தலைமுடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைக்கும். மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டமும் சீராகும்.

இதையும் படிக்கலாமே:
மார்கழி சனிக்கிழமை உக்கிர தெய்வ வழிபாடு

தலைக்கு குளிக்கும் பொழுது வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துங்கள். தினமும் குடிக்கவும் வெதுவெதுப்பான தண்ணீரை தேர்ந்தெடுங்கள். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பாதாம் பிசின் சேர்த்த ஜூஸ் வகைகளை குடிக்க பழகுங்கள். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வகையில் பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். கருவேப்பிலை சட்னி, கருவேப்பிலை துவையல் என்று கருவேப்பிலையை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். தலைக்கு பயன்படுத்த செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள். தினமும் தலைக்கு ரத்த ஓட்டம் கொடுக்கக் கூடிய வகையில் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மட்டும் பத்து நிமிடம் செய்யுங்கள். போதும். இந்த வழிமுறையில் நீங்கள் சுலபமாக உங்களுடைய இழந்த முடியை மீண்டும் பெற்று கருகருவென்று காடு போல முடி வளர்ந்து அலைபாய்வதை காண முடியும்.

சற்று முன்