நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும். உக்கிர தெய்வங்களை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்மால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் தீர்வதற்குரிய வாய்ப்பை அவர்கள் அருள்வார்கள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பலருக்கும் இருக்கக்கூடிய தீர்க்க முடியாத பிரச்சினையாக திகழ்வதுதான் கடன் பிரச்சனை. அதிலும் குறிப்பாக நகை கடன் என்பது அதிக அளவிலேயே இருக்கிறது. கஷ்டத்திற்காக பிறரிடம் இருந்து கையேந்தாமல் வீட்டில் இருக்கக் கூடிய நகையை அடமானத்தில் வைத்து பணத்தை வாங்கி இருப்பார்கள். அந்த நகைக்குரிய வட்டியையும் கட்ட முடியாமல் அந்த நகையையும் திருப்ப முடியாமல் பெரிதும் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள்.
ஒரு சில நேரங்களில் அந்த நகை மூழ்கும் அளவிற்கு கூட வாய்ப்புகள் உண்டாகும். சிறுக சிறுக கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை வைத்து வாங்கிய அந்த நகை மூழ்கும் சூழ்நிலைக்கு வரும்பொழுது வீட்டில் இருக்கக்கூடிய பெண்களால் அதை தாங்கிக் கொள்ளவே முடியாது. அதனாலேயே வீட்டில் பலவிதமான சண்டைகள் உண்டாகும். இவை அனைத்திற்கும் காரணம் நகைக்கடனே. இந்த நகை கடனை விரைவிலேயே அடைத்து அடமானத்தில் இருக்கக்கூடிய நகையை வீட்டிற்கு கொண்டு வரவும், அதிக அளவில் நகையை சேர்க்கவும் பைரவரை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
நகை சேர கூற வேண்டிய மந்திரம்
பைரவருக்குரிய உகந்த திதியாக கருதப்படுவது அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதி என்பது இன்று மாலை 6:59க்கு தொடங்குகிறது. பைரவருக்கு இரவு நேர வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியது என்பதால் இன்றைய நாளில் நாம் பைரவரை நினைத்து செய்யக்கூடிய வழிபாட்டிற்கு நல்ல பலன் உண்டாகும். அந்த வகையில் நம்முடைய தங்க நகை தொடர்பான வேண்டுதலை நாம் முன் வைப்பதற்கு சொர்ண ஆகர்ஷண பைரவரை நாம் வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தவர்கள் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு மாலை நேரத்தில் சென்று பைரவருக்கு அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்துவிட்டு வாருங்கள்.
எந்த நேரத்தில் அபிஷேகம் செய்கிறார்களோ அந்த நேரத்தில் அந்த பொருட்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி ஆலயத்திற்கு செல்பவர்களாக இருக்கும் பட்சத்தில் ஆலயத்திலேயே பைரவருக்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை 48 முறை கூறி முடித்த பிறகு கோவிலுக்கு வெளியே வந்து ஏதாவது ஒரு பைரவரின் வாகனமான நாய்க்கு ஏதாவது ஒரு உணவை தர வேண்டும். முடிந்த அளவிற்கு அசைவத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
வீட்டிலேயே இந்த வழிபாட்டை செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இரவு 7:00 மணிக்கு மேல் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறி பிறகு நாய்க்கு உணவளிக்க வேண்டும். இந்த பைரவரின் மந்திரத்தோடு வாராகி அம்மனின் மந்திரத்தையும் சேர்த்து நாம் கூறினோம் என்றால் நகை கடனை அடைப்பதில் இருக்கக் கூடிய தடைகள் விலகும் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் மந்திரத்தையும் முழுமனதோடு 48 முறை உச்சரிக்க வேண்டும். ஒவ்வொரு மந்திரத்தையும் 48 முறை உச்சரிக்க வேண்டும்.
மந்திரம்
ஓம் சொர்ணாகர்ஷண பைரவாய நமஹ
ஓம் லகு வாராஹியே நமோ நமஹ
இதையும் படிக்கலாமே:கடன் தீர்க்கும் கந்தர் அநுபூதி பாடல் வரிகள்
இந்த எளிமையான ஒரு வரி மந்திரத்தை பைரவரையும் வாராகி அம்மனையும் நினைத்து இன்றைய தினம் இரவு கூறுபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் திருப்ப முடியாது என்று நினைத்த நகையையும் திருப்புவதோடு அதிக அளவில் நகையையும் சேர்க்க ஆரம்பிப்பார்கள். முழு மனதுடன் செய்து நல்ல பலனை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.