- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் நீங்க பஞ்சமி வழிபாடு

கடன் நீங்க பஞ்சமி வழிபாடு

- Advertisement -

தீராத கடன் தொல்லை துரத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இரவில் நிம்மதியாக தூக்கம் கூட வருவதில்லை. எப்படியாவது எல்லா கடனையும் முடித்துவிட்டு கடன் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பஞ்சமி திதியில் இப்படி வராகி அம்மனை வழிபட்டால் நினைத்ததை அடையலாம். பஞ்சமி திதியில் கடன் தீர வராகி அம்மனை வழிபடும் முறையைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் அறிந்து கொள்ள போகிறீர்கள்.

சப்த மாதர்களில் ஒருவராக இருக்கக் கூடியவர் வராகி தயார். எல்லா காரியங்களிலும் வெற்றி பெற, நினைத்த காரியம் ஜெயிக்கவும், காரிய சித்தி உண்டாகவும் வராகி அம்மன் தாயாரை வழிபட்டால் சிறந்த பலன் காணலாம். திதிகளில், பஞ்சமி திதி வராஹி அம்மனுக்கு உரியதாக இருக்கிறது. பஞ்சமியில் வேண்டினால் பஞ்சம் இல்லாமல் வேண்டியது உடனே கிடைக்கும் என்கிற ஐதீகம் உண்டு.

- Advertisement -

அமாவாசை முடிந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதி வரும். அதே போல பௌர்ணமி முடிந்தும் ஐந்தாவது நாள் பஞ்சமி திதி வருகிறது. இந்த இரண்டு நாட்களிலும் விரதம் இருந்து வராகி அம்மன் தாயாரை முழு மனதோடு நைவேத்தியம் படைத்து தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எப்பேர்பட்ட கடன் தொல்லையும் முழுமையாக நீங்கும். கடனிலிருந்து மீண்டு கடன் இல்லாத வாழ்க்கையாக மாற இந்த தாயாரை வழிபடுங்கள்.

ஒவ்வொரு பஞ்சமி திதி அன்றும் அதிகாலையில் எழுந்து நீராடி சுத்தபத்தமாக நல்ல உடை உடுத்திக் கொண்டு வராகி அம்மன் தாயாரை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். மணம் மிகுந்த பூக்களால் வராகி அம்மனை அலங்கரித்து அவருக்கு நைவேத்தியமாக படைப்பதற்கு அன்ன ஆகாரங்களை தயார் செய்ய வேண்டும். நவதானிய வடை, மிளகு வடை, தோல் நீக்கப்படாத பூண்டு சேர்த்த வடை ஆகியவற்றை நைவேத்தியம் படைக்க வேண்டும்.

- Advertisement -

வராஹி அம்மனுக்கு சுண்டல், பானகம், மொச்சை, தயிர் சாதம், மிளகு சாதம் போன்றவற்றை தயார் செய்து படையல் போடலாம். பின்னர் வராகி அம்மன் தாயார் மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றையும் உச்சரித்து நல்லெண்ணெய் அல்லது சுத்தமான நெய்யால் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மாதத்தில் இரு பஞ்சமி திதியிலும் தொடர்ந்து வழிபட வேண்டும். தீராத எல்லா கடனும் தீர வேண்டும் என்று மனதார மனம் உருகி பிரார்த்திக்க வேண்டும்.

பஞ்சமி திதியில் வராஹி அம்மனை இவ்வாறு வழிபடுபவர்களுக்கு கடன் மட்டுமல்லாமல், பல்வேறு நலன்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து சுபீட்சம் பெறும். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையவும், இந்த வழிபாட்டை தொடரலாம். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வெளிநாடு செல்பவர்கள் வராகி தாயாரை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் வராகி அம்மனை வழிபடுபவர்களுக்கு வறுமை நீங்கும். தேய்பிறை பஞ்சமி திதியில் தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு பிரச்சனைகள் தேய்ந்து கொண்டே போகும்.

இதையும் படிக்கலாமே:
வைகுண்ட ஏகாதசி விரதம் 2025

அது போல வளர்பிறையில் வரக் கூடிய பஞ்சமி திதியில் தொடர்ந்து வராகி அம்மன் வழிபாடு செய்பவர்களுக்கு வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருக்கும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த தாந்த்ரீக, மாந்திரீக சக்திகளும் வராகி அம்மனை வழிபடுபவர்களுக்கு அண்டாது. பஞ்சமி திதியில் தயிர் சாதம், வடை ஆகியவற்றை அன்னதானம் செய்து வந்தால், வராகி அம்மன் மனம் குளிர்ந்து வரங்களை வாரி வழங்குவார். ஒரு நபருக்காவது இந்த தானத்தை பஞ்சமி திதியில் செய்து வாருங்கள், கடனிலிருந்து மீள பிரார்த்தனை செய்யுங்கள்.

சற்று முன்