- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவைகுண்ட ஏகாதசி விரதம் 2025

வைகுண்ட ஏகாதசி விரதம் 2025

- Advertisement -

பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் தான் மகாலட்சுமி. இந்த வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெருமாளையும் மகாலட்சுமியையும் சேர்த்து வழிபாடு செய்பவர்களுக்கு, வாழ்வில் செல்வ வளம் பெருகும். செய்த பாவங்கள் நீங்கும். சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். எப்போதுமே பெருமாளை தனியாக வழிபடக்கூடாது. பெருமாளுடன் மகாலட்சுமி தாயாரையும் சேர்த்து தான் வழிபாடு செய்வோம் அல்லவா.

ஆகவே பெருமாளுக்கு உகந்த நாளில் மகாலட்சுமியையும் இந்த வருடம் சேர்த்து வழிபாடு செய்து பாருங்கள். பொருளாதாரத்தில் உங்களுடைய நிலைமை நிச்சயம் இந்த வருடம் மேலோங்கி நிற்கும். இந்த வருட ஏகாதசி திதியானது எந்த நாளில் வருகிறது. விரதமிருப்பவர்கள் எந்த நாளில் விரதத்தை துவங்கி, எந்த நாளில் முடிக்க வேண்டும். எந்த நாளில் கண்விழித்து பெருமாளுக்கு வழிபாடு செய்ய வேண்டும், என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வைகுண்ட ஏகாதசி திதி நேரம்

9-1-2025, மதியம் 12:04 மணிக்கு ஏகாதசி திதியானது துவங்கி விடுகிறது. 10.1.2025 காலை 10:02 மணி வரை ஏகாதசி திதி இருக்கிறது. அதற்குப் பின்பாக துவாதசி திதி துவங்கிவிடும். 11.1.2025 காலை 8:13 மணி வரை துவாதசி திதியானது இருக்கிறது.

இந்த ஏகாதசி திதி விரோதமானது பொதுவாகவே மூன்று நாட்கள் கடைபிடிக்கப்படும். தசமி, ஏகாதசி, துவாதசி. மூன்று திதிகளிலும் பெருமாளுக்கான இந்த விரதம் கடைபிடிக்கப்படும். தசமி திதி அன்று விரோதத்தை துவங்கி, ஏகாதசி திதி முழுவதும் சாப்பிடாமல் இருந்து, துவாதசி திதி அன்று பெருமாளுக்கு நெய்வேதியம் வைத்து விரதத்தை முடித்துக் கொள்வதுதான் பக்தர்களின் வழக்கம்.

- Advertisement -

அதன்படி இந்த ஆண்டு விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 9ஆம் தேதி மதியமே உங்களுடைய சாப்பாட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். 9ம் தேதி இரவு பால் பழம் சாப்பிட்டோ அல்லது எதுவுமே சாப்பிடாமலோ இருந்து கொள்ளுங்கள். (கட்டாயம் நிறைய தண்ணீர் குடிக்கணும்.) 10ம் தேதி அதிகாலையில் சொர்க்கவாசல் 4:00 மணிக்கு திறக்கப்படும். 10ம் தேதி முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். 10ம் தேதி இரவு முழுவதும் கண்விழிக்க வேண்டும்.

11ஆம் தேதி காலை 8:13 மணிக்கு முன்பாகவே குளித்து முடித்து சுத்தமாகி விட்டு பெருமாளுக்கான நெய்வேத்தியம் வைத்து, அந்த நெய்வேத்தியத்தை நீங்கள் சாப்பிட்டு உங்களுடைய ஏகாதசி விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும். (உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் பெருமாளின் பாதத்தில் 7 துளசி இலைகளை வைத்து, அந்த இலைகளை தண்ணீரில் போட்டு அந்தத் தீர்த்தத்தை விரதம் இருக்கும் நேரம் முழுவதும் பருகிக் கொண்டே இருங்கள்).

- Advertisement -

இந்த விரதத்தின் நிறைவில் நீங்கள் சாப்பிடக்கூடிய சாப்பாட்டில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் எது கிடைக்கிறதோ அதை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது நம்முடைய முன்னோர்களின் அறிவுரை. விரதமிருக்க முடிந்தவர்கள் மேல் சொன்ன முறையை கடைப்பிடியுங்கள்.

விரதம் இருக்க முடியாதவர்கள் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள், குழந்தைக்கு பால் கொடுப்பவர்கள் எல்லாம் இந்த விரதத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நீங்கள் சாப்பாடு சாப்பிட்டே பெருமாளை வழிபாடு செய்தாலும் உங்களுக்கான அருள் ஆசி நிச்சயம் கிடைக்கும். ஒரு நாள் இரவு விரதம் இருக்க வேண்டும் என்பவர்கள் 10ம் தேதி முழுவதும் விரதம் இருக்கலாம். காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் இருந்து மாலை 6 மணிக்கு மேலாக ஏதாவது பலகாரங்கள் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

சரிங்க, இந்த பெருமாள் பாதத்தில் மகாலட்சுமியை நினைத்து ஒரு பொருள் வைத்தால் நம்முடைய பண கஷ்டம் எல்லாம் தீரும் என்று சொன்னீர்களே அது எந்த பொருள். துளசி விதைதான் அந்த பொருள். துளசி செடியில் இந்த விதை இருக்கும். அதை ஏகாதசிக்கு முந்தைய தினமே பறித்து கொண்டு வந்து வீட்டில் பத்திரப்படுத்தி வையுங்கள்.

அது கொஞ்சம் காய்ந்தாலும் பரவாயில்லை. அல்லது இப்போது எல்லோர் வீட்டிலும் பிரிட்ஜ் இருக்கிறது ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் அது அப்படியே வாடாமல் இருக்கும். ஏகாதசி அன்று துளசி செடியில் இருந்து எதுவும் நாம் பறிக்கக் கூடாது. 9ம் தேதி மதியத்திற்கு முன்பாகவே துளசி செடியில் இருந்து கொஞ்சம் விதைகளை பறித்துக் கொண்டு வந்து வைக்க வேண்டும்.

ஏகாதசி அன்று 10ஆம் தேதி பூஜை அறையில் பெருமாளை வழிபாடு செய்யும்போது, பெருமாள் தாயார் ஒன்றாக இருப்பார்கள் அல்லவா, அந்த திருவுருவப்படத்தின் முன்பு இந்த துளசி விதைகளை வைத்து வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய பணக்கஷ்டம் கடன் சுமையெல்லாம் தீர வேண்டும் என்று, பெருமாளையும் மகாலட்சுமியையும் மனமுருக பிரார்த்தனை செய்து, இந்த விதைகளை எடுத்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் உங்களுடைய பொருளாதார நிலை உயரும்.

இதையும் படிக்கலாமே: காலில் கருப்பு கயிறு அணியலாமா?

கடன் சுமை குறையும் என்பது நம்பிக்கை. மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் இந்த வருட ஏகாதசி திதிக்கு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்