நம்முடைய முன்னோர்களின் காலத்தில் 50 60 வயதை தாண்டிய பிறகுதான் அவர்களுக்கு நரை முடி என்பதே வரும். ஆனால் இன்றைய காலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதற்கொண்டு பலருக்கும் இளநரை பிரச்சினை என்பது வந்துவிட்டது. 40 வயதை தொடும்பொழுது பலருக்கும் வெள்ளை முடி என்பது தெரிய ஆரம்பித்து விட்டது. இதற்கு கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ கண்டிஷனரும் அதே சமயம் ஆரோக்கியம் இல்லாத உணவுகளும் காரணம்.
இருப்பினும் இந்த வெள்ளை முடி திரும்பவும் கருப்பு முடியாக மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால்தான் வெள்ளை முடியை மறைப்பதற்காக பலரும் ஹேர் டை பயன்படுத்திகிறார்கள். அதில் கெமிக்கல் கலந்திருக்கிறது என்பதால் அது உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. இதை தவிர்த்து இயற்கையிலேயே செய்யக்கூடிய ஒரு ஹேர் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
இந்த ஹேர் பேக்கை அதிக அளவில் நரைமுடி இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும். ஒரு மாதம் இப்படி பயன்படுத்திய பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தினால் போதும். இந்த ஹேர் பேக்கை தயார் செய்வதற்கு முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு டீத்தூளை போட்டு முக்கால் டம்ளர் ஆகும் வரை வற்ற விட்டு டிகாஷனை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலையை போட்டு அதில் இந்த டிகாஷனை சிறிது சிறிதாக ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பேஸ்ட்டை ஒரு கிண்ணத்தில் மாற்றி இதனுடன் திரிபுலா பொடி ஒரு ஸ்பூன் கலந்து வைக்க வேண்டும். இதை முதல் நாள் இரவே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் இதில் வெதுவெதுப்பாக சூடு செய்யப்பட்ட அரிசி வடித்த கஞ்சியோ அல்லது அரிசி கழுவிய தண்ணீரையும் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இதை உங்களுடைய தலைமுடியின் வேர்க்கால்களில் அப்படியே தடவ வேண்டும். பத்திலிருந்து பதினைந்து நிமிடம் விட்டால் போதும். வெள்ளை முடியின் நிறம் மாறிவிடும். பிறகு சாதாரணமாக தலைக்கு குளித்துக் கொள்ள வேண்டும். ஷாம்பு எதுவும் உபயோகப்படுத்த கூடாது. இந்த ஹேர் பேக்கை தலையில் போடுவதற்கு முதல் நாளே தலைக்கு குளித்து இருக்க வேண்டும். அதாவது தலையில் எண்ணெய் பசை என்பது இருக்கக் கூடாது. இப்படி நாம் தொடர்ச்சியாக செய்து வரும் பொழுது நம்முடைய வெள்ளை முடி என்பது படிப்படியாக நிறம் மாறிவிடும்.
இதையும் படிக்கலாமே:கை கால்களில் ஏற்படும் சுருக்கத்தை தடுக்கும் எண்ணெய்
கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாமல் இந்த முறையில் இயற்கையிலேயே இருக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தினால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. மேலும் பலருக்கும் மருதாணியை பயன்படுத்துவதன் மூலம் சளி பிடிக்கும். இந்த முறையில் பயன்படுத்தினால் சளி பிடிப்பதற்குரிய வாய்ப்புகளும் மிகவும் குறைவாகவே இருக்கும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலனை பெறுவீர்கள்.