நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு பிரச்சினையால் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருப்போம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை என்பது இருக்கும். அந்தப் பிரச்சினை தீரவும் செய்யும். ஒரு சிலருக்கு மட்டுமே தீராத பிரச்சினையாக ஒரு சில பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். அந்த பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழி தெரியாமல் அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்றைய நாளை தவிர விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று மார்கழி மாதத்தின் கடைசி நாள் நிறைந்த பௌர்ணமி தினம். இன்றைய தினத்தில் நாம் சொல்லக்கூடிய இந்த மந்திர வழிபாடு நம்முடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய வழியை காட்டும். அந்த மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தீராத பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க
இன்று ஜனவரி மாதம் 13-ஆம் தேதி மார்கழி மாதத்தின் கடைசி நாள். இன்றைய தினத்தில் நிறைந்த பௌர்ணமி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் சிவபெருமானுக்கே உரிய திருவாதிரை நட்சத்திரமும் இன்றைய நாளில் இருக்கிறது. மேலும் சிவபெருமானுக்குரிய திங்கட்கிழமையாகவும் இது திகழ்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நாம் ஒரே ஒரு வரி மந்திரத்தை முழுமனதோடு நம்பிக்கையோடு கூறினோம் என்றால் நம்முடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த மந்திர வழிபாட்டை செய்வதற்கு நமக்கு ஒரே ஒரு எலுமிச்சம் பழம் வேண்டும். நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நான்காக கீரி கொள்ளுங்கள். அதற்கு நடுவே குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். திருஷ்டி சுற்றுவதற்காக நான்காக கீரி குங்குமம் வைப்பார்கள் அல்லவா? அதே போல் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதை உங்களுடைய வலது கையில் வைத்துக்கொண்டு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.
வீட்டின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமர்ந்து செய்யலாம். தரையில் அமராமல் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்து கொள்ளுங்கள். பிறகு முழு மனதோடு இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் 48 முறை கூற வேண்டும். அப்படி கூறி முடித்த பிறகு வீட்டிற்கு வெளியே சென்று தெரு முக்கிலோ அல்லது மூன்று தெருக்கள் கூடும் இடத்திலோ, இந்த எலுமிச்சம் பழத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொன்று என்ற வீதம் வீசி விட வேண்டும். வீட்டிற்குள் வரும் பொழுது கை கால்களை கழுவி விட்டு வரவேண்டும்.
இப்படி இன்றைய நாளில் நாம் செய்யும்பொழுது நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும், தீய சக்திகளும் விலகி ஓடும். எதிரிகள் தொல்லை முற்றிலும் நீங்கும். எந்த பிரச்சினை நம்மை பாடாய்படுத்திக் கொண்டு இருந்ததோ அந்தப் பிரச்சனை தீர்வதற்குரிய வழியை இறைவன் நமக்கு காட்டுவார்.
மந்திரம்
“ஓம் க்ரீம் காளிகாயை நமஹ”
இதையும் படிக்கலாமே:பொங்கலுக்கு காப்பு கட்டும் முறை
இந்த எளிமையான மந்திர வழிபாட்டை இன்று இரவுக்குள் முழு மனதோடும் நம்பிக்கையோடும் செய்பவர்களுக்கு அவர்களின் தீராத பிரச்சனை தீரும் எதிரிகள் தொல்லையும், எதிர்மறை ஆற்றல்களின் தொல்லையும், தீய சக்திகளின் தொல்லையும் விலகி ஓடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.