- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகத்தில் இருக்கும் பூனை முடியை நீக்க

முகத்தில் இருக்கும் பூனை முடியை நீக்க

- Advertisement -

பெண்கள் அதிகளவில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக திகழ்வதுதான் தேவையற்ற இடங்களில் வளரக்கூடிய முடிகள். இந்த முடிகளை நீக்குவதற்காக கடைகளில் கிரீம்கள் கிடைக்கின்றன. இதை தடவி நீக்குவதன் மூலம் தேவையற்ற முடிகள் நீங்கிவிடும் என்று கூறினாலும் திரும்பவும் அந்த முடிகள் வளர ஆரம்பிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இதேபோல் பியூட்டி பார்லருக்கு சென்று முடிகளை நீக்குவார்கள் இது அதிக அளவில் வலிகளை தருவதோடு, திரும்பவும் முடி வளர்வதற்குரிய வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக நீக்குவதற்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய இந்த இரண்டு பொடிகளை பயன்படுத்தினால் போதும். அந்த பொடிகளை எப்படி பயன்படுத்துவது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

முகத்தில் இருக்கும் பூனை முடியை நீக்க

பொதுவாக பெண்களுக்கு முகத்தில் மீசை வளர்வது தாடி வளர்வது போன்ற பிரச்சினைகள் என்பது ஏற்படும். அதேபோல் கை கால்களிலும் அதிக அளவில் முடி வளர்ச்சி என்பது ஏற்பட்டு இருக்கும். இந்த முடிகளை நீக்க வேண்டும் என்று ஆசை படக்கூடிய பெண்கள் பலர் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் பயன்படுத்தக்கூடிய முறைகள் மேற்கொண்டு அந்த முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தங்களுடைய வாழ்நாள் வரை அந்த வழிமுறைகளை பின்பற்றி கொண்டே வரவேண்டிய சூழ்நிலையும் உண்டாகிவிடும். அதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் செய்யக்கூடிய இந்த ஒரு முறையை பின்பற்றினால் நாளடைவில் அந்த முடி வளர்ச்சியை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

- Advertisement -

இதற்கு நமக்கு தேவைப்படக்கூடியது இரண்டு பொடிகள். கஸ்தூரி மஞ்சள் மற்றும் குப்பைமேனி பொடி. இவை இரண்டுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு குப்பைமேனி இலை பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பேஸ்ட்டை உங்களுடைய முகத்தில் எந்த இடத்தில் முடிகள் வளர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் தடவி அரைமணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.

அந்த அரை மணி நேரத்தில் இந்த பேஸ் நன்றாக காய்ந்திருக்கும் இப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக வட்ட வடிவில் மசாஜ் செய்து பேஸ்ட்டை நீக்க வேண்டும். இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்வதன் மூலம் அந்த முடிகள் என்பது நீங்கும். மேலும் முடி வளர்ச்சி என்பதும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். முடியின் அடர்த்தி தன்மை குறைந்து முடி வளர்ச்சியை முற்றிலும் நிறுத்தி விடும். இதை முகத்தில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. நமக்கு எந்த இடத்தில் எல்லாம் தேவையற்ற முடிகள் இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

எந்தவித பக்க விளைவுகளும் இல்லாத இயற்கையான ஒரு வழிமுறையாகவே இது திகழ்கிறது. அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் சிறுவயதில் இருந்தே இந்த குப்பைமேனி இலையையும் மஞ்சளையும் அதிக அளவில் பயன்படுத்தியதால் தான் அவர்களுக்கு தேவையற்ற முடிகள் வளராமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு டிப்ஸ்
அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய அழகு குறிப்புகளை நாமும் பின்பற்றினோம் என்றால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் அழகாகவும் திகழ முடியும். மேலும் சுத்தமான பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமாகவும் அழகாகவும் திகழ்வோம்.

சற்று முன்