தலைமுடி உதிர்வது என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக இன்று மாறிவிட்டது. முன்பெல்லாம் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் சிலருக்கு இந்த பிரச்சனை இருக்கும். ஆனால் நவ நாகரிக உலகில் பத்தில் எட்டு பேருக்கு இந்த பிரச்சனை அதிகரித்துவிட்டது. வெளியில் பார்ப்பதற்கு தெரியாவிட்டாலும், அவர்களிடம் பேசிப் பார்த்தால் அவர்களும் அதே பிரச்சனையில் தான் இருப்பார்கள். தலைமுடி காடு போல செழித்து வளர என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.
தலைமுடி உதிர்வதற்கு எவ்வளவு காரணங்கள் இருந்தாலும் உணவு முறையும், சுற்றுச்சூழலும் இன்றியமையாததாக இருக்கிறது. உணவு முறை பழக்க வழக்கத்தாலும், தலை முடிக்கு வேரிலிருந்து ஊட்டச்சத்து கொடுப்பதாலும், காடு போல செழித்து அடர்த்தியாக வளரும். அடர்த்தி குறைவானவர்கள் வேகமாக முடி உதிர்வு பிரச்சனை உள்ளவர்கள், இளநரை, பொடுகு போன்ற தொந்தரவுகளால் அவதிப்படுபவர்கள் அனைவரும் இதை பின்பற்றலாம்.
ஒரு முழு கற்றாழை மடல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு அலசி சுத்தம் செய்துவிட்டு, ஒரு பகுதியில் பாதியாக கீரி அதற்குள் கொஞ்சம் வெந்தயத்தை மேலிருந்து கீழ் வரை உள்புறமாக எல்லா இடங்களிலும் தூவி பின்பு மூடி இறுக்கமாக கயிறு போட்டு கட்டி வையுங்கள். ஒரு ரெண்டு நாட்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். கற்றாழை மடலுக்குள் இருக்கும் வெந்தயம் நன்கு முளை விட ஆரம்பித்திருக்கும். இப்படி முளை விடப்பட்ட வெந்தயத்துடன் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து கூழ் போல மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அரைத்து எடுத்த இந்த விழுதினை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு பத்து நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்யும் பொழுது மண்டை ஓட்டு பகுதியில் இருக்கும் உஷ்ணம் தணியும். மேலும் ரத்த ஓட்டம் சீராகும். இறந்த செல்கள் நீங்கி புதிய செல்களுக்கு ஊக்குவிப்பு கிடைக்கும். வெந்தயம் குளிர்ச்சியானது எனவே சைனஸ், ஆஸ்துமா போன்ற தொந்தரவுகளால் அவதிப்படுபவர்கள் இதை பின்பற்ற வேண்டாம்.
உடல் உஷ்ணத்தால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படும். சளி தொந்தரவுகளும் கூட உடல் உஷ்ணத்தால் உண்டாக கூடியவை. உஷ்ணத்தை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொண்டாலே சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். ஜில்லென்று ஐஸ்கிரீம், கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பது தான் பிரச்சனையே.. ஆனால் உடலை குளிர்ச்சியாக்க கூடிய இளநீர், நீர் சத்துள்ள பழங்கள், கற்றாழை, வெந்தய தண்ணீர், பாதாம் பிசின், ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, தர்பூசணி, கிர்ணி, நீர் மோர், இயற்கையான பழச்சாறுகள் உஷ்ணத்தை தணித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளக் கூடியவை.
இதையும் படிக்கலாமே:
மாட்டுப் பொங்கல் அன்று சொல்ல வேண்டிய கோமாதா மந்திரம்
உஷ்ணம் நீங்கினாலே தலைமுடி உதிர்வது கட்டுப்படும். மேலும் கற்றாழையில் ஊற வைத்து முளை விடப்பட்ட வெந்தயத்தை ஹேர் பேக் போல போட்டு ஒரு அரை மணி நேரம் கழித்து சாதாரண தண்ணீரில் அலசி விடுங்கள். ஷாம்பூ பயன்படுத்துவதை கூடுமானவரை குறைத்து இயற்கையாக அரைக்கப்பட்ட சீயக்காயை பயன்படுத்துங்கள். பழங்கால முறையில் இவற்றை சாதாரணமாக பின்பற்றி வந்தாலே எப்பேர்ப்பட்ட தலைமுடி உதிர்தல் பிரச்சனையும் சீக்கிரமே சரியாகி இழந்த முடியை மீட்டெடுத்து மீண்டும் காடு போல அடர்த்தியாக செழித்து ஆரோக்கியமாக வளரும்.