நம் சருமம் மற்றும் தலைமுடி சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக தீர்வு தரக் கூடிய விஷயம், இந்த ஒரு பொருளில் அடங்கியுள்ளது. எல்லோருடைய வீட்டிலும் சுலபமாக கிடைக்கக் கூடிய இந்த ஒரு பொருளைக் கொண்டு நிரந்தரமாக நம் ஸ்கின் மற்றும் ஹேர் கேர் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பகுதியின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
சருமம் இயற்கையிலேயே மிகவும் மென்மையானது. சென்சிட்டிவாக இருக்கக் கூடிய இந்த சரும துவாரங்களுக்குள் தூசுகளும், மாசுகளும் சென்றடைந்து பிரச்சனைகளை உண்டு செய்கிறது. சருமத்தை வறண்டு போக விடாமல் எப்போதும் ஈர பதத்துடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த ரெண்டு விஷயத்தையும் செய்யக் கூடிய ஒரு அற்புதமான மூலிகை செடி தான் “கற்றாழை”!
“கற்றாழை” நம் சருமத்தை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் முதலிடத்தில் பங்கு வகிக்கிறது. கற்றாழை சருமம் மட்டுமல்லாமல், தலை முடி பிரச்சனைகளையும் ஓட ஓட விரட்டி அடிக்க கூடிய மூலிகை ஆகும். எல்லோருடைய வீடுகளிலும் சாதாரணமாக கிடைக்கக் கூடிய இந்த கற்றாழையுடன், அரிசி வடித்த கஞ்சியை இந்த முறையில் சேர்த்து பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து கிடைக்கக் கூடிய பயன்கள் ஏராளம்.
சாதம் வடித்த கஞ்சியை சிறிது நேரம் ஆற வைத்தால் கெட்டியாக கூழ் போல கிடைக்கும். இந்த அரிசி வடித்த கஞ்சி கூழ் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சம அளவிற்கு கற்றாழை ஜெல்லையும் சுத்தப்படுத்தி, கூழ் போல குழைத்து சேர்க்க வேண்டும். பின்பு இதை சருமத்தில் தடவி நன்கு உலர்ந்த பின்பு முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் முகம் எப்பொழுதும் காணாதது போல முதன் முறையிலேயே பளிச்சென பளிங்கு போல ஜொலிக்கும்.
சருமம் மட்டுமல்லாமல் இதே போல ஒரு கப் அளவிற்கு அரிசி வடித்த கஞ்சி கூழ் எடுத்து, அதனுடன் ஒரு கப் அளவிற்கு கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். ஒரு பத்து நிமிடம் தொடர்ந்து அடித்தால் கிரீம் போல உங்களுக்கு பர்ஃபெக்ட்டான கன்சிஸ்டன்ஸியில் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:
தை செவ்வாய் கிழமை துர்க்கை பரிகாரம்
இந்த கிரீமை தலையின் வேர்க்காலங்களில் படும்படி மசாஜ் செய்ய வேண்டும். பத்து நிமிடம் நன்கு மசாஜ் செய்த பின்பு தலை முழுவதும் தடவி இருபதிலிருந்து முப்பது நிமிடம் நன்கு உலர விட வேண்டும். தலையில் வேர்க்கால்களில் இருந்து நுனி வரை எல்லா இடங்களிலும் தடவி இருக்க வேண்டும். நன்கு உலர்ந்ததும், வழக்கம் போல நீங்கள் சாதாரண மைல்டான ஷாம்பூ அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலையை அலசுங்கள். தொடர்ந்து ரெண்டு வாரம் இதை செய்து பாருங்கள். உங்களுடைய தலைமுடி உதிர்தல் முற்றிலுமாக நின்று கேசம் ஈரப்பதத்துடன், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். இழந்த முடிகளை வேரிலிருந்து ஊக்குவித்து செழிப்பாக அடர்த்தியாக வளர செய்யும். முடி மற்றும் சருமம் இரண்டுமே இந்த ஒரே குறிப்பில் நல்ல ஒரு ஆரோக்கியம் பெறும் என்பது மட்டும் உறுதி. நீங்களும் இதை ட்ரை பண்ணி பார்த்து பயன்பெறுங்கள்.