- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதை செவ்வாய் கிழமை துர்க்கை பரிகாரம்

தை செவ்வாய் கிழமை துர்க்கை பரிகாரம்

- Advertisement -

செவ்வாய்க்கிழமை என்றாலே நாம் நினைவுக்கு வருவது துர்க்கை அம்மன் தான். ஒரு சில பேர் செவ்வாய்க்கிழமை முருகரையும் வழிபாடு செய்வார்கள். அதில் எந்த தவறும் கிடையாது. செவ்வாய்க்கிழமை முருகரையும் துர்க்கை அம்மனையும் எந்த ஒரு குடும்பம் தொடர்ந்து வழிபாடு செய்து வருகிறதோ, அந்த குடும்பத்தில் கண் திருஷ்டியால் பாதிப்பு வராது, கடன் சுமை வராது, கெட்ட சக்தியால் பாதிப்புகள் வரவே வராது.

ராகு கேது தொல்லை ஜாதக கட்டத்தில் பிரச்சனை, சுபகாரிய தடையால் அந்த வீட்டில் கஷ்டம் இருக்காது. நாளை தை மாதத்தின் செவ்வாய்க்கிழமை. வீட்டில் இருக்கும் பீடை தரித்திரத்தை விரட்டி அடிக்க, அம்பாளை வீட்டிற்குள் வரவேற்க, துர்கை அம்மனை நினைத்து செய்ய வேண்டிய எளிய பரிகாரம் இதோ இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

தை செவ்வாய் துர்க்கை பரிகாரம்

செவ்வாய்க்கிழமை வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு, வீட்டை கூட்டி சுத்தம் செய்து விடுங்கள். காலை அல்லது மாலை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும், பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். துர்க்கை அம்மனின் படம் இருந்தால் வணங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் ஏதாவது ஒரு அம்பாள் படத்திற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்யலாம் தவறு கிடையாது. மனம் நிறைய “துர்கை அம்மனே போற்றி போற்றி ! துர்க்கை அம்மன்திருப்பாதங்களை பணிவோம் !” என்று சொல்லிக்கொண்டே இந்த பரிகாரத்தை துவங்குங்கள்.

ஒரு டம்ளர் நிறைய சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, 1 கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு விடுங்கள். செவ்வரளி பூ இருந்தால் இரண்டு அந்த தண்ணீரில் போட்டு, அம்மன் திருவருவப்படத்திற்கு முன்பாக வைத்துவிட்டு மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, சூனியம், கெட்ட சக்தி, செய்வினை, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும். வீட்டில் தெய்வசக்தி மட்டும்தான் நிலைத்திருக்க வேண்டும். அதிலும் துர்க்கை அம்மன் ஆன நீயே எங்கள் வீட்டில் நின்று தங்க வேண்டும் என்று, மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த தீர்த்தத்தை கொண்டு போய் நிலை வாசல் படியில் இருந்து, வீட்டிற்குள் தெளித்துக் கொண்டே வரவேண்டும். வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் தெளிக்க வேண்டும். பூஜை அறையிலும் தெளிக்க வேண்டும். வெளியிலிருந்து உள் பக்கமாக தெளித்து வாருங்கள். “ஓம் துர்க்கை அம்மனே காப்பாய் ! ஓம் துர்மையம்மனே காப்பாய் !” என்று சொல்லிக் கொண்டு தீர்த்தத்தை தெளித்து விட்டு, மீதம் இருக்கும் தண்ணீரை வீட்டை சுற்றி தெளிக்கலாம்.

- Advertisement -

உங்கள் வீட்டிற்கு காம்பவுண்ட் சுவர் இருக்கிறது. வீடு சுற்றியும் இடம் இருக்கிறது என்றால் அந்த இடத்தில் தெளித்து விடலாம். அப்படி இல்லை என்றால், வீட்டு மொட்டை மாடியில் கொண்டு போய் சுற்றி தெளித்துவிட்டு வந்து விடவும். அவ்வளவுதான். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 9 வாரம் செவ்வாய்க்கிழமை செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: தை மாதம் விநாயகர் வழிபாடு

வீட்டில் தங்கி இருக்கும் எவ்வளவு பெரிய நெகட்டிவ் எனர்ஜியும் வீட்டை விட்டு வெளியேறும். அந்த துர்க்கை அம்பாள் உங்கள் வீட்டில் குடியேறி நல்லதை மட்டுமே செய்வாள். அதிலும் தை செவ்வாய்க்கிழமை மிக மிக சிறப்பு வாய்ந்த நாளில் இந்த வழிபாட்டை வீட்டில் செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்