- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொந்த வீடு வாங்க தை வெள்ளி மகாலட்சுமி வழிபாடு

சொந்த வீடு வாங்க தை வெள்ளி மகாலட்சுமி வழிபாடு

- Advertisement -

கையில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் வீடு கட்ட ஆசை வர வேண்டுமா என்ன. கையில் பணமே இல்லை என்றாலும் பரவாயில்லை, மனதார கற்பனையில் ஆடம்பரமாக ஒரு வீடு கட்டி, அதில் கிரகப்பிரவேசம் செய்யலாம். தவறு ஒன்றும் கிடைக்காது. நாம் நினைப்பது தான் நம்முடைய வாழ்வில் நடக்கும். பேராசைப்படுவது என்பது வேறு, நம்முடைய ஆசைகளை கற்பனை செய்து பார்த்து, அந்த ஆசைகளுக்காக முயற்சி செய்வது என்பது வேறு.

பேராசை பட்டு அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் சென்று பணத்தை சம்பாதிப்பது தான் குற்றம். உங்களுடைய கையில் பணம் காசு இல்லை, ஆனால் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்கும் அழகான வீடு கட்டி தர வேண்டும் என்ற ஆசை, மனது நிறைய இருக்கிறது. மனதிற்குள் ஒரு சின்ன கோட்டையும் கட்டி வைத்திருக்கிறீர்கள், இதை நினைவாக்க வேண்டும் என்றால் என்ன செய்வது.

- Advertisement -

அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. கூடவே வரக்கூடிய தை வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை நினைத்து இந்த தீபத்தை வீட்டில் ஏற்றுங்கள். சொந்த வீடு கட்ட பிள்ளையார் சுழி போடுவதற்கு ஏதாவது ஒரு ரூபத்தில் நல்லதொரு வழி கிடைக்கும்.

அந்த மகாலட்சுமி தாய் உங்களுக்கு ஒரு நல்ல வழியை காண்பித்துக் கொடுப்பாள். நல்ல வேலை கிடைத்து, பணம் சம்பாதிக்க துவங்கலாம். தொழிலில் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடுத்து பணம் கொட்ட துவங்கலாம். அடுத்து ஒரு வருடத்திற்குள் நல்ல வீடும் கட்டிவிடலாம். கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது அல்லவா. வாங்க அந்த சந்தோஷத்துடன் வழிபாட்டு முறையையும் பார்த்து விடுவோம்.

- Advertisement -

சொந்த வீடு கட்ட மகாலட்சுமி பூஜை

வெள்ளிக்கிழமை மாலை மஹாலட்சுமி பூஜை செய்ய, பூஜை அறையை அழகாக அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதற்கு இணையாக வீட்டில் இருக்கும் பெண்களும் அழகாக அலங்காரம் செய்து கொண்டு தான் இந்த பூஜையை செய்ய வேண்டும். முடிந்தால் கையில் மருதாணி கூட வைத்துக் கொள்ளலாம். பூஜை அறையில் ஒரு தாம்பல தட்டில் மருதாணி விதைகளை பரப்பி வைத்து விடவும். மருதாணி பூ கிடைத்தால் அதை கொண்டு வந்து மகாலட்சுமிக்கு வையுங்கள். மருதாணி விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

ஒரு தாம்பல தட்டில் மருதாணி விதைகளை பரப்பி அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, சுத்தமான நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி மகாலட்சுமி முன்பாக வைத்து, சொந்த வீடு கட்டுவதற்கு நீ தான் அருள் புரிய வேண்டும் என்று, அவளிடம் உங்கள் குறிக்கோளை ஒப்படைத்து விடுங்கள்.

- Advertisement -

வேண்டுதலை வைத்துவிட்டு ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். மருதாணி விதை உடன் ஏற்றி வைத்திருக்கும் விளக்கு இருக்கும் முன்பு மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்டாலும் அது உடனடியாக கிடைக்கும். வாரம் தோறும் தை வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை தவறாமல் சொந்த வீடு கட்டுவதற்காக செய்து வருபவர்களுக்கு நிச்சயம் சொந்த வீடு கட்டக்கூடிய யோகம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தை மாதம் மகாலட்சுமி வழிபாடு

வழிபாடு நிறைவான பிறகு இரண்டு அல்லது மூன்று நாள் கழித்து, அந்த மருதாணி விதை, மருதாணி பூக்கள் எல்லாம் வாடிய பிறகு, எடுத்து உங்கள் வீட்டில் செடி கொடிகளுக்கு கீழே போட்டுவிடலாம். வீடு கட்ட ஆசை உள்ளவர்களுக்கு வீடு கட்டக்கூடிய கனவு நினைவாக இந்த பரிகாரம் பயனுள்ள படி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்