- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதை மாதம் மகாலட்சுமி வழிபாடு

தை மாதம் மகாலட்சுமி வழிபாடு

- Advertisement -

அந்த இந்திர லோகத்தில் செல்வவளம் எந்த அளவுக்கு உயர்ந்த நிலையில் இருக்கிறது, அதே அளவுக்கு நம்முடைய வீட்டிலும் செல்வ வளம் பெருக வேண்டும், அதை பார்த்து விண்ணுலகத்தில் இருக்கும் தேவர்களும் ஆச்சரியப்பட வேண்டும், அப்படி என்றால் நாம் என்ன செய்ய வேண்டும். தை மாதம் முழுவதும் மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும். தை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியும் மிக மிக சிறப்பு வாய்ந்தது.

அதிலும் குறிப்பாக 12 வருடத்தில் இல்லாத கிரக சூழல் இந்த ஆண்டு அமைந்திருக்கிறது. தை மாதம் வெள்ளிக்கிழமை மட்டும் தான் மகாலட்சுமியை வழிபாடு வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. தை மாதம் முழுவதும் மகாலட்சுமியை பின் சொல்லக்கூடிய முறைப்படி வீட்டில் பூஜை செய்தால், உங்கள் வாழ்வில் இருக்கும் ஒவ்வொரு துன்பமாக குறைய துவங்கும். ஒவ்வொரு இன்பமாக உயர தொடங்கும். செல்வ வளத்தில் நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்லலாம்.

- Advertisement -

தை மாதம் மகாலட்சுமி வழிபாடு

மிகப்பெரிய அளவில் பிரமாண்ட அளவில் பூஜை மகாலட்சுமிக்கு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தினந்தோறும் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். தை மாதத்தில் தினமும் வீட்டில் இருக்கும் பெண்கள், வாசல் கதவை திறக்கும் போது, “வரலட்சுமியே வருக வருக” என்ற வார்த்தையை சொல்லி வாசல் கதவை திறக்க வேண்டும்.

அரிசிமாவால் கோலம் போடுங்கள் மகாலட்சுமி தினம் தினம் உங்கள் வீட்டிற்குள் வருவாள். தினமும் மாலை நேரத்தில் பூஜையறையில் விளக்கு ஏற்றி “ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை சொல்லி மகாலட்சுமிக்கு வாசம் நிறைந்த பூக்கள் போட்டு, வாசம் நிறைந்த தூபம் காட்டி வெள்ளை நிறத்தில் ஏதாவது ஒரு இனிப்பு பிரசாதம் வைக்க வேண்டும். பாயாசம் கல்கண்டு பால் கோவா இப்படி ஏதாவது இனிப்பு பலகாரங்கள் வைக்கலாம்.

- Advertisement -

தை மாதத்தில் வரும் அத்தனை நாட்களும், இன்றிலிருந்து, நாளையிலிருந்து நீங்கள் வழிபாட்டை துவங்கலாம். தவறு கிடையாது. வாய்ப்பு உள்ளவர்கள் இந்த தை மாதம் முழுவதும் மகாலட்சுமியை தினம் தினம் மகாலட்சுமியை மனதார நினைத்து வீட்டில் பூஜை அறையில் கும்பிட்டுப் பாருங்கள். தை மாசி பங்குனி, சித்திரை மாதத்தில் உங்கள் செல்வ உயர்ந்த நிற்பதை கண்கூடாக பார்ப்பீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பணக்கஷ்டம் தீரும்.

ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் உங்கள் கைக்கு வந்து கொண்டே இருக்கும். வாரத்தின் ஏழு நாளும் பூஜை செய்யும் அளவுக்கு எங்களுக்கு நேரமில்லை என்ன செய்வது. வாரம் தோறும் வரும் வியாழன் வெள்ளி கட்டாயம் தவறாமல் இந்த வழிபாட்டை செய்து விடுங்கள். நிச்சயம் உங்களுக்கு இருக்கும் பண கஷ்டம் தீரும். மகாலட்சுமியின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும். 12 வருடத்திற்கு பிறகு வந்திருக்கும் இந்த அபூர்வ தை மாதத்தை யாரும் நழுவ விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே: காரியத்தடை நீக்கும் முருகர் மந்திரம்

வாழ்க்கையில் இத்தனை நாள் பட்ட துன்பங்களுக்கு ஒரு சில நாட்களில் தீர்வு கிடைக்கப் போகிறது என்றால், இந்த எளிமையான வழிபாட்டை செய்து தான் பார்ப்போமே. நல்லது நினையுங்கள், அடுத்தவர்கள் பணத்தை ஏமாற்றாதீர்கள், அடுத்தவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள், மகாலட்சுமி தாய் உங்களுக்கு கொட்டி கொட்டி கொடுத்துக்கொண்டே இருப்பாள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்