நன்றாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு திடீரென்று ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை ஏற்பட்டு அதன் மூலமாக பலவிதமான கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை என்பது உண்டாகும். அதேபோல் திடீரென்று யார் சொல் பேச்சையும் கேட்காமல் தனித்து ஏதாவது ஒரு முடிவு எடுத்து அதன் மூலம் ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டு விழித்துக் கொண்டிருப்பவர்களும் பலர் இருக்கிறார்கள். இப்படி திடீரென்று ஏதாவது ஒரு பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அவர்களுக்கு தீய சக்திகளால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று அர்த்தம் உண்டாகும். அந்த தீய சக்திகளை விரட்டி அடிப்பதற்கு செய்ய வேண்டிய ஆஞ்சநேயர் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆஞ்சநேயர் வழிபாடு
அஞ்சா நெஞ்சனாக திகழக்கூடியவர் ஆஞ்சநேயர் என்று நம் அனைவருக்கும் தெரியும். சூரிய பகவானையே அக்னி பழம் என்று நினைத்து விழுங்க முயற்சி செய்தவர் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும்பொழுது நமக்கும் பயம் என்ற எதுவும் இருக்காது. மன தைரியம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமா நமக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருந்தாலும் அல்லது தோஷங்கள் இருந்தாலும் அல்லது தீய சக்திகளால் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தாலும் அவை அனைத்தையும் விலக்குவதற்கு ஆஞ்சநேயர் வழிபாடு நமக்கு துணை புரியும்.
இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். வீட்டிலேயும் இந்த வழிபாட்டை செய்யலாம். ஆலயத்திலேயே இந்த வழிபாட்டை செய்யலாம். வீட்டில் செய்பவராக இருக்கும் பட்சத்தில் வீட்டில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயரின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு துளசி இலைகளால் மாலை கட்டி போட்டு விடுங்கள். பிறகு தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பொருளை ஆஞ்சநேயருக்கு முன்பாக நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்படி வைத்து முடித்த பிறகு வடக்கு பார்த்தவாறு ஆஞ்சநேயரின் இந்த நான்கு வரி மந்திரத்தை 9 முறை கூற வேண்டும்.
இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையான காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள், இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இந்த மூன்று நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இப்படி இந்த மந்திரத்தை ஒன்பது முறை உச்சரித்த பிறகு வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் ஆஞ்சநேயருக்கு முன்பாக வைத்த நெய்வேத்தியத்தை பிரசாதமாக தர வேண்டும்.
ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அதே செவ்வாய் ஹோரையில்தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். ஆஞ்சநேயருக்கு துளசி மாலை வாங்கி கொடுத்து அவருடைய சன்னதிக்கு முன்பாக இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறி அவரை வலம் வர வேண்டும். பிறகு உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விலக வேண்டும் என்ற கோரிக்கையை ஆஞ்சநேயர் முன்வைத்து வழிபாடு செய்து பிரசாதமாக அங்கிருந்து துளசி இலைகளை வாங்கி வரவும். அந்த துளசி இலைகளை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரையும் சாப்பிட சொல்லி கொடுக்க வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை தோறும் நாம் இந்த ஒரு மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய தீய சக்திகளின் பாதிப்புகள் விலகும் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய துர் சக்திகள், தீய சக்திகள் என்ற அனைத்து விதமான கெடுதல்களும் நீங்கும் நன்மைகள் உண்டாகும்.
மந்திரம்
“அஞ்சனா கர்ப்ப சம்பூதம்
குமாராம் பிரம்ம சாரினம்
துஷ்ட சக்தி நிவாஷய
அனுமந்தம் உபாஸ் மயே”
இதையும் படிக்கலாமே:பிரச்சினைகளை தீர்க்கும் அரச இலை பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை முழுமனதோடு ஆஞ்சநேயரை நினைத்து செவ்வாய்க்கிழமை தோறும் கூறுபவர்களுக்கு இருக்கக்கூடிய துஷ்ட சக்திகள் அனைத்தும் விலகும். அவர்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய துஷ்ட சக்திகளும் விலகும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இழந்த அனைத்தையும் திரும்பப் பெறுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.