செடிகளிலிருந்து பூக்களை பறித்து இறைவனுக்கு சூட்ட வேண்டும். அன்றாடம் பூக்கும் பூக்கள் தான் இறைவனுக்கு உகந்தது என்று சொன்ன காலம் மாறி, இப்போது ஒரு மாதத்திற்கு பிரிட்ஜில் பூக்களை ஸ்டோர் செய்து, சுவாமிக்கு சூட்ட வேண்டிய நிலைமை நமக்கு இருக்கிறது. எதை நினைத்தும் வருத்தப்பட வேண்டாம். சுவாமிக்கு பூக்களை வைக்க வேண்டும்.
மன நிறைவோடு ஃப்ரிட்ஜில் இருந்து பூக்களை எடுத்து இறைவனுக்கு சூட்டினாலும், அதை அவன் நிச்சயம் ஏற்றுக் கொள்வான். நினைத்த உடனே பூக்கள் கிடைக்காமல் இருக்கக்கூடிய எத்தனையோ ஊர்கள் இன்றும் இருக்கிறது. வெளிநாடுகளில் கூட நினைத்தபோதெல்லாம் பூ வாங்க முடியாது. ஒரு மாதத்திற்கு முன்பாகவே பூக்களை வாங்கி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து தேவைப்படும்போது சுவாமிக்கு வைத்து வழிபாடு செய்யக்கூடிய கட்டாயமும் சில பேருக்கு இருக்கிறது.
உங்களுக்கும் அப்படி ஒரு நிலைமை இருந்தால் இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்காக. ஃப்ரிட்ஜில் பூக்களை எப்படி ஸ்டோர் செய்தால் ஒரு மாதம் ஆனாலும் சூப்பராக இருக்கும், பூக்கள் அழுகி போகாது தெரியுமா உங்களுக்கு.
பூக்களை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்ய டிப்ஸ்
பூக்களை ஸ்டோர் செய்வதற்காக ஒரு சில்வர் டப்பா தனியாக ஒதுக்கி வைத்து விடுங்கள். அந்த சில்வர் டப்பாவுக்கு அடியில் ஒரு நியூஸ் பேப்பரை நான்காக மடித்து வைத்து விடுங்கள். அந்த நியூஸ் பேப்பருக்கு மேலே பூக்களை போட்டு வைக்க வேண்டும். கவருக்குள் இருந்து பூக்களை எடுத்து தான் நியூஸ் பேப்பருக்கு மேலே போட வேண்டும். பிறகு அந்தப் பூக்களுக்கு மேலேயும் ஒரு நியூஸ் பேப்பரை போட்டு விடுங்கள். டப்பாவுக்கு மேல் பக்கம் ஒரு கேரி கவரை வைத்து, டப்பாவுடைய மூடியை மூட வேண்டும். இப்படி செய்யும் போது டப்பாவின் மூடி நன்றாக இறுக்கமாக, அந்த கேரி கவரை பற்றிக் கொள்ளும்.
டப்பாவுக்கு உள்ளே காற்று போக வழியே இருக்காது. டப்பாவின் மூடி, டப்பாவை டைட்டாக மூடி வைக்கும். அதன் பிறகு இந்த டப்பாவை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தால், இதன் உள்ளே இருக்கும் பூ எத்தனை நாள் ஆனாலும் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க. ஆனால் வாரத்திற்கு ஒருமுறை உள்ளே இருக்கும் நியூஸ் பேப்பரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதை மட்டும் மறக்காமல் செய்யவும்.
சாமந்திப்பூ, ரோஜா பூவை இப்படி வைத்துக் கொள்ளலாம். (சில்வர் டப்பா, சில்வர் டப்பாவுக்கு அடியில் நியூஸ் பேப்பர், அதற்கு மேலே பூக்கள், அதற்கு மேலே ஒரு நியூஸ் பேப்பர், டப்பாவை மூடும்போது, டப்பாவுக்கு மேலே ஒரு கேரி கவர் போட்டு விட்டு, அதன் பிறகு மூடியை டைட்டாக மூட வேண்டும்).
மல்லிப்பூ ஜாதிப்பூ இதுபோல பூக்களை மொட்டாக இருக்கும் போதே வாழை இலையில் சுற்றி இதே போல ஸ்டோர் செய்யலாம். ஆனால் அந்த பூக்கள் ஒரு வாரத்திற்கு மேல் நிறம் மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: பித்தளை பாத்திரங்கள் பளபளக்காக டிப்ஸ்
நம்முடைய ஊர்களில் எல்லாம் ஒரு மாதத்திற்கு பூக்கள் கிடைக்காமல் இருக்காது. ஆனால் ஒரு வாரமோ, இரண்டு வாரமோ கட்டாயம் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைப்போம். விலை மலிவாக இருக்கும் போது கொஞ்சம் நிறைய பூக்களை வாங்கக்கூடிய சூழ்நிலையும் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த டிப்ஸ் எல்லோருக்கும் உதவியாக இருக்கும். தேவைப்படுபவர்கள் இதை பயன்படுத்தி பலன் பெறலாம்.