பித்தளை பாத்திரங்கள் பளபளக்காக டிப்ஸ்

brass vessles cleaning tips
- Advertisement -

எல்லோர் வீட்டிலும் கண்டிப்பாக ஏதோ ஒரு பித்தளை பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்திருக்கும். என்ன இருந்திருக்கும் என்று சொல்கிறார்களே என யோசிக்கிறீர்களா? இப்போதெல்லாம் யாரும் பெரும்பாலும் அதை பயன்படுத்துவதில்லை. காரணம் அதை சுத்தப்படுத்துவது முதல் பராமரிப்பு வரை அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் தான.

இன்றைய அவசர காலக்கட்டத்தில் அதை எல்லாம் சுத்தப்படுத்த யாருக்கும் நேரம் இல்லை என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் சாதம் வடிப்பதிலிருந்து அனைத்திற்குமே இந்த பித்தளை பாத்திரத்தை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இதை ஒரு ஆரோக்கியமான விஷயம் என்றே சொல்லலாம்.

- Advertisement -

இப்போது நாம் பெரும்பாலும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை தொலைத்து விட்டோம் என்றே சொல்லலாம். அப்படி நாம் தொலைத்த ஆரோக்கியத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டுமெனில் இந்த பித்தளை பாத்திரங்களை சுத்தப்படுத்துவது எளிமையாக இருக்க வேண்டும் அல்லவா அதற்கான சில குறிப்புகளை தான் இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் பார்க்கிறோம்.

பித்தளை பாத்திரங்களை சுத்தப்படுத்த டிப்ஸ்

பித்தளை பாத்திரங்களை சுத்தப்படுத்த முதலில் இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள். ஒரு கிண்ணத்தில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து நன்றாக பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த கலவையை கொண்டு பித்தளை பாத்திரத்தை தேய்த்து பாருங்கள் பளிச்சென்று மாறி விடும். அடுத்து இதே போல் எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து அந்த கலவையும் இதுபோல தேய்க்க பயன்படுத்தலாம். இதற்கு எந்த உப்பை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தூள் உப்பை சேர்க்கும் போது விரைவாக கரைந்து விடும்.

அதே போல் எல்லோர் வீட்டிலும் நிச்சயமாக அரிசி மாவு இருக்கும். இந்த அரிசி மாவுடன் எலுமிச்சை சாறு கலந்து தேய்க்கலாம். அரிசி மாவுடன் சேர்க்கும் போது பித்தளை பாத்திரத்தில் மேலுள்ள பச்சை நிறமான அழுக்குகள் கூட எளிதில் நீங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களிடம் எலுமிச்சை சாறு இல்லை என்றால் அதற்கு பதிலாக வினிகரையும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

அடுத்து இந்த வினிகரில் பேக்கிங் சோடாவை கலந்து அதை கொண்டும் பித்தளை பாத்திரங்களை தேய்க்கலாம் இதுவும் பழைய பாத்திரங்கள் புதிது போல மாறுவதற்கு ஏற்ற ஒரு எளிய வழிமுறை. கொஞ்சம் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் இருந்தாலே போதும் அதில் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் பழைய பித்தளை பாத்திரங்களை புதிது போல மாற்றி ஜொலிக்க வைத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: தோசைக்கல்லில் தோசை ஒட்டாமல் வர டிப்ஸ்

மேற் கூறிய குறிப்புகளை அனைத்தையும் பயன்படுத்துவதோடு, பித்தளை பாத்திரங்களை அதிக ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்க வேண்டியது அவசியம் அப்போது தான் பாத்திரம் சீக்கிரத்தில் நிறம் மாறாமலும் பச்சை நிற அழுக்கு படியாமலும் இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனில் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -