ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி வந்ததும் நம் கைக்கு சம்பளம் வரும் என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டு இருப்போம். அப்படி சம்பளம் வந்த மறுநாளே அவர்கள் கையில் எதுவுமே இல்லாமல் போகும் சூழ்நிலையும் பலருக்கு இருக்கிறது. அந்த அளவிற்கு அவர்களுக்கு செலவுகள் என்பது அதிகமாக இருக்கும். இன்னும் சிலருக்கோ மாதம் தொடங்கி 10 நாள் வரை தான் கையில் பணம் இருக்கும். அதற்குப் பிறகு பணமே இல்லாமல் ஒவ்வொரு செலவையும் பார்த்து பார்த்து செய்வார்கள். இவற்றை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு மாதம் முதல் தேதி அன்று சில செலவுகளை நாம் செய்வதன் மூலம் நமக்கு அந்த மாதம் முழுவதுமே பணவரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த செலவை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மாத பிறப்பு, வருடப் பிறப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. மாதப் பிறப்பு ஆங்கில மாதமாக இருந்தாலும் சரி தமிழ்மாதமாக இருந்தாலும் சரி அந்த நாளை நாம் தொடங்கும் பொழுது தெய்வ நம்பிக்கையுடன் தெய்வ வழிபாட்டுடன் தான் தொடங்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த மாதம் முழுவதும் தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும் என்பதால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு மாத பிறப்பிற்கும் தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய ஏதாவது ஒரு செயலை வைத்திருந்தார்கள். அந்த வகையில் பிப்ரவரி மாதத்தின் முதல் நாள் அன்று செய்ய வேண்டிய செலவுகளை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
பிப்ரவரி மாதம் முதல் நாள் என்பது சனிக்கிழமை தொடங்குகிறது. இது கூடுதல் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் சில செலவுகளை செய்வதன் மூலம் நமக்கு பணவரவு அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதற்கு காரணம் சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உரிய கிழமை என்பதால் தான். சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உரிய கிழமை என்பதால் அன்றைய தினம் காலையில் முதல் செலவாக பெருமாளுக்கு நாம் துளசி மாலை வாங்கி தர வேண்டும். ஒரு வேளை நம்மால் கோவிலுக்கு செல்ல இயலவில்லை என்றாலும் வேறு யாராவது ஒருவரிடம் பணத்தை கொடுத்து துளசி மாலை வாங்கி தர சொல்ல வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பெருமாளின் அருளை நம்மால் பெற முடியும்.
அடுத்ததாக பணவரவிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி அல்லவா? மகாலட்சுமி வீட்டிற்கு இருக்கக்கூடிய பொருளாக நாம் உப்பை கருதுகிறோம் அல்லவா? அதனால் அன்றைய நாளில் உப்பை மளிகை கடைக்கு சென்று வாங்க வேண்டும். வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள்தான் இந்த செலவை செய்ய வேண்டும். சரியாக சில்லறையை கொடுத்து வாங்காமல் அதிகப்படியான தொகையை கொடுத்து ஒரு உப்பு பாக்கெட்டை வாங்கிக்கொண்டு மீதி சில்லரையை வாங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் கல்லுப்புடன் வேறு எந்த பொருட்களையும் வாங்கக்கூடாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வாங்கிய அந்த சில்லரை காசை பணம் இருக்கும் இடத்தில் போட்டு வைப்பதன் மூலம் அந்த பணவரவு அதிகரிக்கும்.
கடைசியாக அன்றைய தினம் சனிக்கிழமை என்பதாலும் அது சனி பகவானுக்குரிய கிழமை என்பதாலும் அன்னதானம் செய்வதை மறக்கக்கூடாது. பிப்ரவரி ஒன்றாம் தேதி நம்மால் இயலும் பட்சத்தில் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் அன்னதானம் செய்யலாம். ஒரே ஒரு நபருக்காவது வயிறு நிறைய அன்னதானம் செய்தாலும் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். அன்னதானம் செய்வதன் மூலம் கர்ம வினைகள் குறைக்கப்படுகிறது. கர்ம வினைகளை பார்த்து நமக்கு பலன்களை தரக்கூடியவர் சனிபகவான் என்பதால் சனி பகவானின் அருளையும் நம்மால் பெற முடியும். அதன் மூலம் நமக்கு வரக்கூடிய கஷ்டங்களும் தீரும்.
இதையும் படிக்கலாமே:கொடுத்த பணம் திரும்ப கிடைக்க சனிக்கிழமை பரிகாரம்
இந்த செலவுகளை முழுமனதோடு எந்தவித தயக்கமும் இன்றி யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுக்கு பெருமாள், மகாலட்சுமி, சனீஸ்வர பகவான் என்று அனைவரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று பிப்ரவரி மாதம் முழுவதும் பணவரவை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.