- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilபொலிவற்ற முகத்தை அழகாக மாற்ற

பொலிவற்ற முகத்தை அழகாக மாற்ற

- Advertisement -

ஒருவரை நாம் பார்க்கிறோம் என்றால் முதலில் அவருடைய முகத்தை நான் பார்ப்போம். அப்படிப்பட்ட முகம் எந்த அளவுக்கு பிரகாசமாகவும் பொலிவுடன் இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்கள் இளமையாகவும் உற்சாகத்துடனும் தென்படுவார்கள். பொதுவாக பலரும் அவர்களுடைய முகத்தில் சந்திக்கக்கூடிய சில பிரச்சினைகளாக கருதப்படுபவை கரும்புள்ளிகள், கருவளையம், மங்கு, எண்ணெய் வடிதல் போன்றவை. இந்த எண்ணெய் பசை அதிகமாக ஒருவருடைய முகத்தில் சுரந்துவிட்டாலேயே அவர்கள் மிகவும் பொலிவற்று காணப்படுவார்கள். எவ்வளவு அழகு பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை நீக்குவதற்கு உதவக்கூடிய ஒரு ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முகத்தை அழகாக மாற்ற

ஒருவருடைய முகத்தில் எப்பொழுதும் சுரக்கக்கூடிய எண்ணெய் பசையை விட அதிகமாக எண்ணெய் பசை சுரக்கும் பொழுது அவர்கள் முகமே கலையிழந்து காணப்படும். மேலும் பருக்களால் அதிக அளவு பிரச்சினைகளும் உண்டாகும். அதோடு மட்டுமல்லாமல் வெளியே சென்று வரும்பொழுது அந்த எண்ணெய் பசையின் காரணமாக தூசிகள் அனைத்து முகத்தில் வந்து படிந்து விரைவிலேயே கருமை உண்டாவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல் கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையமும் முகத்தில் இருக்கக்கூடிய மங்குகளும், கரும்புள்ளிகளும் நீங்குவதற்கு பலவிதமான ஃபேஸ் பேக்குகள் இருந்தாலும் இந்த ஒரு ஃபேஸ் பேக்கை நாம் உபயோகப்படுத்தி இவை அனைத்தையும் சரி செய்து கொள்ள முடியும். அதற்கு தேவையான பொருட்களை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இதற்கு முல்தானி மெட்டி வேண்டும். அடுத்ததாக ரோஜா இதழ்கள் வேண்டும். அடுத்ததாக ஆவாரம் பூ வேண்டும். இவை அனைத்தையும் தனித்தனியாக ஒரே அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ரோஜா இதழ்களையும், ஆவாரம் பூவையும் நிழலில் காயவைத்து பொடி செய்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். முல்தானி மெட்டியை கட்டியாக வாங்கி பொடி செய்து சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இவை மூன்றும் சரிசம அளவு இருக்க வேண்டும். இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது இது எவ்வளவு இருக்கிறதோ அதில் கால் பங்கு அளவிற்கு வெள்ளை உளுந்தை எடுத்து பொடி செய்து அதையும் சகித்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த பொடியை எடுத்து நம்முடைய முகத்திற்கு தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் போட்டு பன்னீர் அல்லது தயிர் இரண்டில் ஏதாவது ஒன்றைப் போட்டு நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் விட்டுவிட்டு பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்வதன் மூலம் பொலிவற்ற எப்பேர்ப்பட்ட சருமமாக இருந்தாலும் அவை நீங்கி பிரகாசமான முகத்தை பெற முடியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:பளிச்சென்று வெள்ளையாக மாற

நம்மால் முடிந்த அளவிற்கு இயற்கையிலேயே கிடைக்கப் கூடிய பொருட்களை பயன்படுத்தினால் தான் என்றும் இளமையாக திகழும் என்பதை நினைவில் கொண்டு இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தி பாருங்கள் நல்ல பலனை பெறுவீர்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்