இந்த கலிக்காலத்தில் முருகப்பெருமானின் வழிபாடு பெரும்பாலான மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. கலியுக கந்தனான முருகப்பெருமான் பக்தர்களின் வேண்டுதலுக்கு உடனே செவி சாய்த்து அவர்களின் துன்பங்களை தீர்த்து இன்பமாக வாழவைக்கும் கடவுளாக திகழ்கிறார். ஆகையால் தான் முருகப்பெருமானின் வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியான இந்த சூழ்நிலையில் முருகப்பெருமான் நம்முடன் இருக்கிறார் என்பதை உணர்த்த சில அறிகுறிகள் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
முருகன் நம்முடன் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்
கந்தா என்று அழைத்தால் உடனே வந்து நம்மை காக்கும் கடவுளாக முருகப்பெருமான் விளங்குகிறார். அப்படியான முருகப்பெருமானை வணங்குபவர்களிலும் சிலர் நானும் பல காலமாக வழிபட்டு தான் வருகிறேன் என்னுடைய துன்பங்கள் தீரவில்லையே என்று மனதளவில் வருத்தத்துடன் இருப்பார்கள். அதற்கான காரணம் உங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சரியான நேரத்திற்காக அவர் காத்திருக்கிறார் என்பதே உண்மை. அது மட்டுமன்றி நாம் நம்பும் இறைவன் நமக்கு எப்போது எதை தர வேண்டும் என்பது.
ஆகையால் கந்தனை நம்பினோர் ஒரு நாளும் கைவிடப்படார் என்பதை முழுமையாக முதலில் நம்ப வேண்டும். இத்துடன் கந்தன் நம்முடன் இருக்கிறார் என்பதை அவரே சில அறிகுறிகள் மூலம் நமக்கு உணர்த்துகிறார் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று பார்க்கலாம் முதலில் உங்கள் வீட்டின் அருகிலோ அல்லது முக்கியமான ஆலயத்திலோ முருகனின் அபிஷேகம் அல்லது அலங்காரத்தை நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் காணக்கூடிய வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்துவர்.
அடுத்ததாக உங்களை சுற்றி திடீரென நல்ல நறுமணம் வீசும் அது சந்தனம் அல்லது விபூதி போன்றவையாக இருப்பது. ஏனெனில் இந்த ரெண்டு வாசங்களும் கந்தனுக்கு மிகவும் உரியதாக சொல்லப்படுகிறது. இதை நீங்கள் வழிபாடு நேரம் தவிர பிற நேரங்களில் உணர்ந்தால் கந்தன் உங்களுடன் பயணப்படுகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுமட்டுமின்றி நாம் வீட்டில் பூஜை அறையில் பல்லி இருப்பது அதன் சத்தம் கேட்பது போன்றவை கூட இந்த அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டுமன்றி பூஜை செய்யும் பொழுது சுவாமி படங்களில் இருந்து மலர் கீழே விழுவது குறிப்பாக முருகர் படத்திலிருந்து விழுவது போன்றவை எல்லாம் முருகன் உங்கள் பக்கத்திலே இருக்கிறார் என்பதற்கான அறிகுறி. அதுமட்டுமின்றி வழிபாடு செய்யும் பொழுதும் ஆலயத்தில் இறைவனை தரிசிக்கும் போதும் நம்மை அறியாமல் நம் கண்களில் இருந்து கண்ணீர் வருவது இறைவன் நம்மை அரவணைத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறி.
இதைத் தவிர நாம் வழிபாடு செய்யும் நேரங்களில் கோவில் மணியோசை அல்லது மங்கள இசை போன்றவை கேட்பதும் இறைவன் நம்முடன் இருப்பதற்கான அறிகுறிகளாக கருதப்படுகிறது குறிப்பாக ஆலயத்தில் அமர்ந்திருக்கும் பொழுது இந்த சத்தங்கள் நம் காதில் கேட்பது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இது மட்டும் இன்றி நாம் மிகப்பெரிய துயரத்தில் இருக்கும் நாட்களில் நம்முடைய கனவில் சிறு பிள்ளைகள் முருகனின் வாகனமான மயில், சேவல் போன்றவை வருவதும் நம்முடைய மனதிற்கு நெருக்கமானவர்கள் நம்முடன் இருப்பது போல கனவு காண்பதும் முருகன் நம்முடன் இருப்பதை நமக்கு உணர்த்துகிறார் என்பதை பொருள்.
இதையும் படிக்கலாமே:வசந்த பஞ்சமி வழிபாடு
மேற்கூறிய இந்த அறிகுறிகள் எல்லாம் இறைவன் நம்முடன் எப்பொழுதும் இருக்கிறார் என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும். நாம் எப்பொழுதும் பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் நம்முடைய பணிகளை சரியான முறையில் செய்து தூய்மையான இறை பக்தியுடன் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இறைவனின் அருள் நமக்கு இருக்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. அத்துடன் இதுபோன்ற அறிகுறிகள் அதை உறுதி செய்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் அறியலாம்.